உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 2015ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 21 வயதுக்கும் குறைந்த 9 பேர் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர், அல்லது அவர்களுக்குக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம், "இது கவலை தரும் போக்காக உள்ளது. எனினும், அந்த இளையர்கள் வன்முறைப் போக்கைக் கைவிடவும் அவர்களை சமூகத்துடன் ஒன்றிணைக்கவும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, சமூக அமைப்புகளுடன் இணைந்து பெருமுயற்சிகளை எடுத்து வருகிறது," என்று சொன்னார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் தடுத்து வைக்கப்பட்ட 18 வயது மாணவரான இர்ஃபானுக்கு சமயரீதியான மனநல ஆலோசனையும் மனோதத்துவ, சமூக மறுவாழ்வுத் திட்டமும் வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தடுத்து வைக்கப்பட்ட நிலையிலும் இர்ஃபான் தன் கல்வியைத் தொடர்வதற்கு இர்ஃபானின் பள்ளியுடன் ஐஎஸ்டி இணைந்து செயல்படுவதாக அவர் கூறினார்.
கூடுதல் செய்தி - பக்கம் 2ல்

