இந்தியாவின் அசாம் மாநிலத்தில் குழந்தைத் திருமணங்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தை மீறியதற்காக
மாநிலம் முழுவதும் 1,800 ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அசாம் முதல்வர் ஹிமாண்டா பிஸ்வார் சர்மா கூறினார்.
மேலும், குழந்தைத் திருமணம் தொடர்பாக இதுவரை 4,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், விதியை மீறுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள் என்றார்.
"வியாழக்கிழமை இரவு முதல் கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. குறைந்த வயது சிறுமிகளை மணம் முடித்தோர், அதற்கு ஏற்பாடு செய்தோர், அந்தத் திரு
மணத்தை கோயில்கள் மற்றும் பள்ளிவாசல்களில் பதிவு செய்ய உதவியோரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
"சிறுமியர் கர்ப்பமடைய சிறுவயது திருமணங்களே காரணம். இதனால், சிசு உயிரிழப்பு அதிகரிப்பதோடு சிறுமியரின் உடல்நலமும் பாதிக்கப்படுகிறது," என்று
அவர் நேற்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
பெண்களுக்கு எதிரான மனிதநேயமற்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களும் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என்றும் இதுபோன்ற குற்றங்களை மாநில காவல்துறை சகித்துக்கொள்ளாது என்றும் திரு சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் மணம் புரிவது குற்றம். இருப்பினும் இந்தக் கட்டுப்பாடு நாட்டின் பல பகுதிகளிலும் அப்பட்டமாக மீறப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

