ஆசியான்-சீனா பேச்சு மார்ச் மாதம் தொடங்கும்

தென்சீனக் கடல் தொடர்பான நடத்தைக் கோட்பாடு

சர்ச்­சைக்­கு­ரிய தென்­சீ­னக் கடல் தொடர்­பான நடத்­தைக் கோட்­பாடு­களை வகுப்­ப­தற்­கான பேச்சு­வார்த்தை வரும் மார்ச் மாதம் தொடங்­கும்.

ஆசி­யான்-சீனா நாடு­க­ளுக்கு இடை­யி­லான அப்­பேச்­சு­வார்த்­தையை ஆசி­யான் அமைப்­பிற்கு இப்­போது தலைமை வகிக்­கும் இந்­தோ­னீ­சியா முன்­னின்று நடத்­தும்.

ஜகார்த்­தா­வில் நடை­பெற்ற ஆசி­யான் வெளி­யு­றவு அமைச்­சர்­கள் சந்­திப்­பின் இரண்­டாம் நாளான நேற்று இந்­தோ­னீ­சிய வெளி­யு­றவு அமைச்­சர் ரெத்னோ மர்­சூடி இத­னைத் தெரி­வித்­தார்.

கொவிட்-19 முடக்­க­நி­லை­கள், வட்­டா­ரக் கருத்­தொற்­று­மை­யை­விட சீனா­வு­டன் இரு­த­ரப்பு உறவு­க­ளுக்­குச் சில ஆசி­யான் நாடு­கள் முன்­னு­ரிமை அளிப்­பது போன்­ற­வையே தென்­சீ­னக் கடல் நடத்­தைக் கோட்­பாடு தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­யின் மந்­த­மான வேகத்­திற்­குக் கார­ணம் என்று ஊட­கச் செய்­தி­கள் குறிப்­பிட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில், “தென்­சீ­னக் கடல் நடத்­தைக் கோட்­பாடு தொடர்­பி­லான பேச்­சு­வார்த்­தையை கூடிய விரை­வில் முடி­விற்­குக் கொண்­டு­வர ஆசி­யான் நாடு­கள் கடப்­பாடு கொண்­டு இருக்கின்றன.

“அதே நேரத்­தில், அது நிலைத்­தன்­மை­யு­டை­ய­தா­க­வும் செயல்­தி­றன்­மிக்­க­தா­க­வும் செயல்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தா­க­வும் இருப்­பது அவ­சி­யம்,” என்று திரு­வாட்டி ரெத்னோ செய்­தி­யா­ளர்­களி­டம் கூறி­னார்.

தென்­சீ­னக் கடல் பகு­திக்கு உரி­மை­கோ­ராத இந்­தோ­னீ­சி­யா­வும் நாட்டூனா தீவு­க­ளைச் சுற்­றி­ உள்ள சிறப்­புப் பொரு­ளி­யல் மண­ட­லத்­தில் மீன்­பிடி உரிமை தொடர்­பில் சீனா­வு­டன் கருத்து வேற்­றுமை கொண்­டுள்­ளது.

அது, தென்­சீ­னக் கட­லில் தன்­னு­டைய ‘ஒன்­பது கீற்­றுக் கோடு’ வரை­பட எல்­லை­க­ளு­டன் மேற்­பொ­ருந்­து­வ­தாக உள்­ளது என்று சீனா கூறி வரு­கிறது.

இந்­நி­லை­யில், பேச்­சு­வார்த்­தை­யைத் தீவி­ரப்­ப­டுத்தி, புதிய அணு­கு­மு­றை­களை ஆராய வேண்­டும் என்­பதே ஆசி­யான் நாடு­க­ளின் நோக்­கம் என்று இந்­தோ­னீ­சிய வெளி­யு­றவு அமைச்­சின் ஆசி­யான் ஒத்­து­ழைப்­புத் தலைமை இயக்­கு­நர் சித்­தார்த்தோ ஆர் சூர்­யோ­தி­புரோ தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

அந்­தப் புதிய அணு­கு­மு­றை­கள் எத்­த­கை­யவை என்­பதை அவர் விளக்­க­வில்லை.

“அது ஆய்­வு­நி­லை­யி­லேயே இருக்­கிறது. அது எத்­த­கைய வடி­வம் பெறும் எனத் தெரி­யாது. ஆயி­னும், அது செயல்­தி­றன்­மிக்­க­தாக, நடை­மு­றைப்­ப­டுத்­தத் தக்­க­தாக, அனைத்­து­ல­கச் சட்­டத்­திற்­குப் பொருந்­தும் வகை­யில் இருக்க வேண்­டும் என்­ப­தில் நாங்­கள் அனை­வ­ரும் இணக்­க­மாக இருக்­கி­றோம்,” என்­றார் திரு சித்­தார்த்தோ.

இந்த இரு­நாள் ஆசி­யான் வெளி­யு­றவு அமைச்­சர்­கள் மாநாட்­டில் மியன்­மார் நில­வ­ரம், மற்ற வட்­டார, அனைத்­து­லக விவ­கா­ரங்­கள் குறித்து ஆக்­க­க­ர­மாக விவா­திக்­கப்­பட்­டது என்று திரு­வாட்டி ரெத்னோ குறிப்­பிட்­டார்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஆசி­யான் முன்­வைத்த ஐந்து அம்­சத் திட்­டத்­தின்­மூ­லம் ஒரு­மித்த அணு­கு­மு­றை­யு­டன் மியன்­மார் நெருக்­க­டிக்­குத் தீர்­வு­காண வேண்­டும் என்­ப­தில் ஆசி­யான் உறுப்பு நாடு­கள் நேற்று முன்­தினம் இணக்­கம் தெரி­வித்­தன.

சிறப்­புத் தூதரை நிய­மிப்­பது, அந்­தத் தூதர் மியன்­மா­ருக்கு வருகை மேற்­கொள்­வது, அந்­நாட்­டில் வன்­மு­றையை முடி­விற்குக் கொண்டுவரு­வது, அனைத்­துத் தரப்­பி­ன­ரு­ட­னும் ஆக்­க­க­ர­மான பேச்­சு­வார்த்தை நடத்­து­வது, ஆசி­யா­னின் மனி­த­நேய உதவி ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கி­யதே அந்த ஐந்து அம்­சத் திட்­டம்.

திமோர் லெஸ்டேவிற்கு சிங்கப்பூர் உதவும்: விவியன்

ஆசி­யான் கூட்­டங்­களில் திமோர் லெஸ்டே பங்­கேற்­பதை ஆசி­யான் நாடு­கள் ஆத­ரிக்­கின்­றன என்று வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

அதே நேரத்­தில், ஆசி­யான் அமைப்­பில் அந்­நாடு முழு உறுப்­பி­ன­ரா­வ­தற்கு அதி­கப் பொறுப்பு­களும் கட­மை­களும் உண்டு என்­றும் அது ஒரு செங்­குத்­தான மலை­யில் ஏறு­வ­தைப் போன்­றது என்­றும் டாக்­டர் விவி­யன் குறிப்­பிட்­டார்.

அப்­படி ஆசி­யா­னில் முழு உறுப்­பி­ன­ரா­கும் வகை­யில், திமோர் லெஸ்டே தனது கட­மை­க­ளை­யும் பொறுப்­பு­க­ளை­யும் நிறை­வேற்­றும் வகை­யில் அந்­நாடு தனது ஆற்­றலை வளர்த்­துக்­கொள்ள உத­வு­வ­தில் சிங்­கப்­பூ­ரின் முழு ஆத­ர­வும் உண்டு என்று அவர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூர் ஒத்­து­ழைப்­புத் திட்­டத்­தின்­கீழ் பொரு­ளி­யல் மேம்­பாடு, நிதி, பொது நிர்­வா­கம், நகர்ப்­புற மேம்­பாடு போன்ற துறை­களில் 800க்கும் மேற்­பட்ட திமோர் லெஸ்டே அதி­கா­ரி­கள் பயிற்சி பெற்­றுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­தோ­னீ­சி­யா­வின் தலை­மை­யில் கடந்த இரு­நாள்­க­ளாக நடந்த முத­லா­வது ஆசி­யான் அமைச்­சர்­கள் கூட்­டத்­தில் பார்­வை­யா­ள­ரா­க திமோர் லெஸ்டே முதன்­மு­றை­யா­கக் கலந்து­கொண்­டது.

‘மியன்மார் பிரச்சினையில் ஒருமித்த அணுகுமுறை’

இதற்­கி­டையே, மியன்­மார் நெருக்­க­டி­யால் ஆசி­யான் நாடு­கள் ஒவ்­வொன்­றும் வெவ்­வேறு வித­மா­கப் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பினும் அதற்­குத் தீர்­வு­காண்­ப­தற்­கான அணு­கு­மு­றை­யில் எல்லா உறுப்பு நாடு­களும் ஒரு­மித்­தி­ருப்­பது அவ­சி­யம் என்று அமைச்­சர் விவி­யன் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

“மியன்­மா­ரில் நிலைமை மோச­மா­னால் அங்­கி­ருந்து அகதி­க­ளாக வெளி­யே­று­வோர் எண்­ணிக்­கை­யும் அதி­க­மா­கும். அத­னால், அதி­கம் பாதிக்­கப்­ப­டப் போவது அண்டை நாடு­கள்­தான்,” என்­றார் அவர்.

இப்­போ­தைக்கு மியன்­மா­ரில் வன்­மு­றையை நிறுத்­து­வதே முக்­கி­யம் என்று குறிப்­பிட்ட டாக்­டர் விவி­யன், தான் முன்­வைத்த ஐந்து அம்­சத் திட்­டத்தை மியன்­மார் நடை­முறைப்­ப­டுத்துவது தொடர்பில் ஆசியான் நாடுகள் ஒருமித்து இருக்கின்றன என்றும் சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!