கண் சொட்டு மருந்தால் அமெரிக்காவில் ஒருவர் மரணம்; சென்னை மருந்து நிறுவனத்தில் ஆய்வு

கண் சொட்டு மருந்தால் அமெரிக்காவில் ஒருவர் மரணம்; சென்னை மருந்து நிறுவனத்தில் ஆய்வு

2 mins read

அமெ­ரிக்­கா­வில் கண் சொட்டு மருந்து போட்­டுக்­கொண்ட ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். இதன் தொடர்­பில் அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் அளித்த தக­வலை அடுத்து, அம்­ம­ருந்தைத் தயா­ரித்து ஏற்­று­மதி செய்த சென்னை நிறு­வ­னத்­தில் தமி­ழக அதி­கா­ரி­கள் நேற்று முன்­தி­னம் இரவு அதி­ரடி ஆய்­வில் ஈடு­பட்­ட­னர்.

'எரிஸ்­கேர் ஆர்ட்­டி­ஃபி­சி­யல் டியர்ஸ்' எனும் அந்­தச் சொட்டு மருந்­தில் நோயெ­திர்ப்­புக் கிருமி­கள் இருக்­க­லாம் என்று கூறப்­படுவதை அடுத்து, 'குளோ­பல் ஃபார்மா ஹெல்த்­கேர் பிரை­வேட் லிமி­டெட்' என்ற அந்­நி­று­வனம், தானாக முன்­வந்து சந்­தை­யி­லி­ருந்து அம்­ம­ருந்­தைத் திரும்­பப் பெற்­றுக்­கொண்­டது.

அம்­ம­ருந்­தைப் போட்­டுக்­கொண்ட மேலும் ஐவ­ரின் பார்­வைத்­தி­றன் நிரந்­த­ர­மா­கப் பறி­போ­ன­தா­க­வும் கூறப்­பட்­டது.

"அமெ­ரிக்­கா­விற்கு ஏற்­று­மதி செய்­யப்­பட்ட மருந்­துத் தொகுதி­ க­ளின் மாதி­ரி­க­ளை­யும் அதற்­கான மூலப்­பொ­ருள்­க­ளை­யும் சேக­ரித்­துள்­ளோம். திறக்­கப்­படாத சொட்டு மருந்­துப் புட்­டி­கள் அமெ­ரிக்­கா­வில் இருந்து வரு­வ­தற்­கா­கக் காத்­தி­ருக்­கிறோம். முதற்­கட்ட அறிக்­கை­யைத் தமி­ழக அர­சி­டம் தாக்­கல் செய்­துள்­ளேன்," என்று தமி­ழக மருந்­துக் கட்­டுப்­பாட்­டா­ளர் டாக்­டர் விஜ­ய­லட்­சுமி 'என்­டி­டி­வி'­யிடம் தெரி­வித்­தார்.

பின்­னி­ரவு 2 மணிக்கு விசா­ரணை நிறை­வு­பெற்­றது. அந்த மருந்து நிறு­வ­னம், கண் சொட்டு மருந்து தயா­ரிப்­ப­தற்­குத் தற்­கா­லி­கமாகத் தடை விதிக்­கப்­பட்­டு உள்­ளது.

குறிப்­பிட்ட மருந்­தைத் தயா­ரிக்­க­வும் ஏற்­று­மதி செய்­ய­வும் அந்த நிறு­வ­னம் உரி­மம் பெற்­று இருப்­பதை டாக்­டர் விஜ­ய­லட்­சுமி உறு­தி­செய்­தார்.

அந்­தச் சொட்டு மருந்து இந்­தி­யா­வில் விற்­கப்­ப­ட­வில்லை எனச் சொல்­லப்­பட்­டது.

இத­னி­டையே, இவ்­வி­வ­கா­ரம் தொடர்­பில் அமெ­ரிக்க உணவு, மருந்து அமைப்­பு­டன் அணுக்­க­மா­கச் செயல்­பட்டு வரு­வ­தாக 'குளோ­பல் ஃபார்மா' நிறு­வ­னம் தெரி­வித்­தது. அத்­து­டன், அந்த ம­ருந்­தைப் பயன்­ப­டுத்­து­வதை நிறுத்­தும்படி­யும் அமெ­ரிக்­கப் பய­னீட்­டா­ளர்­களுக்கு அது அறிவுறுத்தி இருக்கிறது.