தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லீ குவான் இயூ நூற்றாண்டு விழா கல்வி நிதி, கருத்தரங்குகள், வெளியீடுகள், சிறப்பு நாணயம், கண்காட்சிகளுடன்

2 mins read
2bf4e56d-df2e-4cc4-884e-02531245c561
-

நவீன சிங்­கப்­பூ­ரைக் கட்­டி எழுப்­பிய நாட்­டின் முதல் பிர­த­மர் லீ குவான் இயூ­வின் 100வது பிறந்­த­நா­ளைக் கொண்­டாட பல்­வேறு யோச­னை­களை சமூ­கம் முன்­வைத்­துள்­ளது. திரு லீ விட்­டுச்­சென்ற சிறப்­பு­களை ஆரா­யும் மாநா­டு­கள், அவ­ரது பண்புநெறி­கள், வாழ்க்கை அனு­ப­வங்­கள் பற்­றிய வெளி­யீ­டு­கள், இளைய தலை­முறை சிங்­கப்­பூ­ரரை ஈடு­படுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் ஆகி­யவை இதில் அடங்­கும் என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் தெரி­வித்­துள்­ளார்.

சிங்­கப்­பூ­ருக்கு திரு லீயின் பங்­க­ளிப்­பு­க­ளை­யும் அவ­ரது கொள்­கை­க­ளை­யும் நினை­வு­கூரு­வது முக்­கி­யம் என்று வணி­கத் தலை­வர்­கள், அடித்­தள அமைப்புகள், கல்­வி­யா­ளர்­கள், ஊட­கங்­கள் என பல்­வேறு சமூ­கக் குழுக்­களும் கரு­து­வ­தாக டாக்­டர் டான் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் கூறி­னார்.

"குறிப்­பாக சிங்­கப்­பூர் இளைய ரிடையே திரு லீயின் பங்­க­ளிப்­பு­பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த அவர்­கள் விழை­கின்­ற­னர். இதில் பலர் மிக இள வய­தி­னர் அல்­லது திரு லீ அமைச்­ச­ர­வை­யி­லி­ருந்து வில­கும்­போது பிறந்­தி­ருக்­கா­த­வர்­கள்," என்­றார் டாக்­டர் டான்.

1923 செப்­டம்­பர் 16ஆம் தேதி பிறந்த திரு லீ குவான் இயூ­வுக்கு இவ்­வாண்டு 100வது பிறந்­த­நாள். இதைக் கொண்­டா­ட­வும் அவர் நாட்­டுக்கு ஆற்­றிய பங்­க­ளிப்பை நினை­வு­கூ­ர­வும் அர­சாங்­கம் திட்­ட­மிட்­டுள்­ளதா என்ற பொத்­தோங் பாசிர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு சித்தோ யி பின்னின் கேள்­விக்கு டாக்­டர் டான் பதி­ல­ளித்­தார்.

நாட்டின் முதல் பிரதமராகவும் மூத்த அமைச்சராகவும் மதியுரை அமைச்சராகவும் 58 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவையாற்றிய திரு லீ 2013ஆம் ஆண்டு இயற்கை எய்­தி­னார்.

தனியார் கல்வி நிதி ஒன்றை வணி­கத் தலை­வர்­கள் பரிந்­து­ரைத்­துள்­ள­னர். கல்­விக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்த திரு லீயை நினை­வு­கூர இது பொருத்­த­மானது என அவர்­கள் கூறி­ய­தாக அமைச்சர் டான் சொன்­னார்.

பல்­வேறு தரப்­பி­ன­ரு­டன் இணைந்து அர­சாங்­கம் நூற்றாண்டு விழா திட்­டங்­களை ஒருங்­கி­ணைக்க உள்­ளது. அர­சாங்க அமைப்­பு­களும் திட்­டங்­களைக் கொண்­டுள்­ளன.

சிங்­கப்­பூர்ச் சிற்­பி­கள் நினை­வகத்­திற்கு பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து பொருள்­கள், கதை­க­ளைத் திரட்­டும் தேசிய மர­பு­டைமை வாரி­யத்­தின் கண்­காட்­சி­கள் அவற்­றில் ஒன்று. ஆண்­டின் பிற்­ப­கு­தி­யில் நாட்டு நிர்­மா­ணத் தலை­வர்­கள் தொடர்­பான முக்­கிய வர­லாற்று மைல்­கற்­கள் பற்­றிய தேசிய அரும்­பொ­ரு­ள­கத்­தில் இடம்­பெ­றும். சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் இவ்­வாண்டு நினைவு நாண­யத்தை வெளி­யி­ட­வுள்­ளது.

மேல் விவ­ரங்­கள் பின்­னர் அறி­விக்­கப்­படும்.