கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கம்: ஆறு அம்சங்கள்

கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கம்: ஆறு அம்சங்கள்

1 mins read

 வரும் திங்கட்கிழமை முதல், பொதுப் போக்குவரத்தில் முகக்கவசம் அணியத் தேவையில்லை.

எனினும், மருந்தகங்கள் போன்ற சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் முகக்கவசம் அணிவது அவசியம்.

 தகுதியுடையோருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும்.

 டிரேஸ்டுகெதர் செயலியை திறன்பேசியிலிருந்து நீக்கிவிடலாம்.

வர்த்தகங்களும் சேஃப்என்ட்ரி (பிஸ்னஸ்) செயலியை நீக்கலாம்.

 முழுமையான தடுப்பூசி போட்டிராத பயணிகள் சிங்கப்பூர் வரும்போது பயணத்துக்கு முந்தைய கொவிட்-19 பரிசோதனை முடிவைக் காட்டத் தேவையில்லை.

 ஏப்ரல் 1 முதல், கொவிட்-19 சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு முழு மானியம் வழங்கப்படமாட்டாது.

 பிப்ரவரி 13 முதல், வெளிநாட்டு ஊழியர்கள் லிட்டில் இந்தியா போன்ற பிரபலமான இடங்களுக்குச் செல்ல அனுமதி பெறத் தேவையில்லை.