இந்தியா செல்ல 'பிசிஆர்' பரிசோதனை தேவையில்லை

இந்தியா செல்ல 'பிசிஆர்' பரிசோதனை தேவையில்லை

1 mins read

சிங்கப்பூர், சீனா, ஹாங்காங், கொரியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகியவற்றிலிருந்து இந்தியா செல்வோருக்கு கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இந்த ஆறு இடங்­களில் இருந்து செல்­லும் பய­ணி­கள் இனி கிரு­மித்­தொற்று இல்லை என்­ப­தற்­கான 'பிசி­ஆர்' பரி­சோ­த­னையை செய்­யத் தேவை­யில்லை.

வரும் திங்­கட்­கி­ழமை முதல் இந்­ந­டை­முறை நடப்­புக்கு வரு­வ­தாக இந்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. உல­கெங்­கும் கொவிட்-19 நோய்ப்­ப­ர­வல் வெகு­வா­கக் குறைந்­தி­ருப்­பதை அமைச்சு சுட்­டி­யது.

இருப்­பி­னும் பய­ணி­களில் இரண்டு விழுக்­காட்­டி­னரை விமான நிலை­யத்­தில் பரி­சோதிக்­கும் நடை­முறை தொட­ரும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

சிவில் விமா­னப் போக்­கு­வரத்து அமைச்­சுக்கு இது­குறித்து இந்­திய சுகா­தார அமைச்சு தக­வல் அனுப்­பி­யுள்­ள­தா­கக் கூறப்­பட்­டது.

இந்­திய சுகா­தார, குடும்ப நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சின் செய­லா­ளர் ராஜேஷ் பூஷண் நேற்று முன்தினம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் இவ்­வி­வ­ரங்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

சென்ற மாதம் 1ஆம் தேதி முதல் இந்த ஆறு இடங்களி­ல் இருந்து இந்தியா செல்­லும் பய­ணி­கள் கிரு­மித்­தொற்­றுக்­கான மருத்­து­வப் பரி­சோ­தனை முடி­வு­களை இந்­திய அர­சாங்­கத்­தின் 'ஏர் சுவிதா' இணை­யத்­த­ளத்­தில் பதி­வேற்­று­வது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டது. பய­ணம் செய்­வ­தற்கு 72 மணி நேரத்­திற்­குள் மருத்­து­வப் பரி­சோ­தனை செய்­யப்­பட்­டி­ருக்­க­வேண்­டும்.

மேற்­கூ­றிய இடங்­க­ளின் கொவிட்-19 கிரு­மிப் பர­வல் நில­வ­ரத்­தைக் கருத்­தில்­கொண்டு இவ்­வாறு நட­வடிக்கை எடுக்­கப்­பட்­ட­தாக 2022 டிசம்­ப­ரில் இந்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­தி­ருந்­தது. 'பிசிஆர்' சான்­றி­தழ் தேவை­யில்லை எனும் செய்தி சுற்றுப்­ப­ய­ணி­க­ளுக்கு மகிழ்ச்சி அளித்துள்­ளது.