இந்தியாவின் ஜம்மு, காஷ்மீர் வட்டாரத்தில் லித்தியம் கனிமப் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.
அந்தப் பகுதியில் மொத்தம் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பதாக மத்திய அரசு கூறியது.
மின்வாகனங்களுக்கான மின்கலன்களைத் தயாரிக்கத் தேவைப்படும் முக்கியமான மூலப்பொருள்களில் ஒன்று லித்தியம். தற்போது இந்தியா சீனா, ஹாங்காங் ஆகியவற்றிடமிருந்து லித்தியத்தை இறக்குமதி செய்துவருகிறது. வருங்காலத்தில் உள்நாட்டு லித்தியத்தைப் பயன்படுத்தி மின்கலன்களை அது தயாரிக்கக்கூடும்.
தகவல், படம்:
இந்திய ஊடகம்

