மக்களின் வேலை மீள்திறனை மேம்
படுத்துவது குறித்து குடிமக்கள் குழுவிடமிருந்து அரசாங்கம் ஆலோ
சனைகளைப் பெற இருக்கிறது.
இதற்கான நிகழ்வு நேற்று தொடங்கியது. அதில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கலந்துகொண்டார். கொள்கை ஆய்வுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நீ ஆன் கொங்சி நிதி வழங்கியது. 66 பேர் கொண்ட குடிமக்கள் குழுவில் ஊழியர்கள், முதலாளிகள், வேலைவாய்ப்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், வேலையில்லாதவர்கள் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
இவர்கள் அனைவரும் மொத்தம் நான்கு முறை ஒன்றுகூடி வேலை மீள்திறனை வலுப்படுத்துவது குறித்து பரிந்துரைகளை முன்வைப்பர்.
வாழ்க்கைத் தொழிலை எவ்வாறு துடிப்புடன் சமாளிப்பது உட்பட முக்கிய தலைப்புகள் குறித்து ஆராயப்படும்.
போதுமான வருமான ஆதரவு, துடிப்புடன் வேலை தேடுவதை ஊக்கு விப்பது ஆகியவற்றில் சமநிலையை உறுதி செய்யும் வேலையின்மை ஆதரவுத் திட்டத்தை வகுப்பது குறித்தும் கலந்துரையாடப்படும்.
முன்வைக்கப்படும் பரிந்துரைகள் அடுத்த மாதம் 25ஆம் தேதியன்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும்.
இந்தக் கலந்துரையாடல்கள் மூலம் அரசாங்கமும் குடிமக்கள் குழுவும் ஒன்றிணைந்து கொள்கைகளை வகுக்க வேண்டும் எனத் தாம் விரும்பு வதாக அமைச்சர் டான் கூறினார்.
வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் வரையில் வாழ்க்கைத் தொழில் பற்றி திட்டமிடக் காத்திருக்கக்கூடாது என்றார் டாக்டர் டான்.
கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது பலர் வேலை இழந்ததை அவர் நினைவூட்டினார்.
"எனவே, நடவடிக்கைகளையும் திட்டங்களையும் பட்டைதீட்ட அனை
வரிடமிருந்தும் ஆலோசனை பெறுவது முக்கியம்.
"அதன்மூலம் மேலும் துல்லியமாகச் செயல்பட முடியும். ஆலோசனை
களைப் பயன்படுத்தி திறன்களை மேம்படுத்தலாம்," என்றார் அமைச்சர் டான்.
வேலை மீள்திறன் என்பது வேலை இழந்தவுடன் உடனே வேறு ஒரு வேலையில் சேருவது அல்ல என்று அமைச்சர் டான் தெரிவித்தார்.
அதற்கு மாறாக, ஏற்கெனவே இருந்த வேலையைவிட இன்னும் சிறந்த, திருப்தி அளிக்கும் வேலையில் சேருவதுதான் மிகவும் முக்கியம் என்று அமைச்சர் டான் வலியுறுத்தினார்.

