அடையாளம் தெரியாத கருவி; சுட்டுவீழ்த்தியது அமெரிக்கா

அடையாளம் தெரியாத கருவி; சுட்டுவீழ்த்தியது அமெரிக்கா

1 mins read

அலாஸ்கா வான்­வெ­ளி­யில் இருந்த அடை­யா­ளம் தெரி­யாத கரு­வியை அமெ­ரிக்­கப் போர் விமா­னம் சுட்­டு­வீழ்த்­தி­விட்­ட­தாக அந்­நாட்டு அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

அண்­மை­யில் அமெ­ரிக்க வான்­வெளி­யில் காணப்பட்ட சீனா­வுக்­குச் சொந்­த­மான பலூன் ஒன்று சுட்­டு­வீழ்த்­தப்­பட்­டது. அமெ­ரிக்­காவை வேவு பார்க்க அந்­தக் கரு­வியை சீனா அனுப்­பி­ய­தாக அமெ­ரிக்கா குற்­றம் சாட்­டி­யது. ஆனால், சீனா அதற்கு மறுப்பு தெரி­வித்­தது.

இந்­நி­லை­யில், அமெ­ரிக்­கா­வின் ஒரு பகு­தி­யான அலாஸ்­கா­வின் வான்­வெ­ளி­யில் இந்த அடை­யா­ளம் தெரி­யாத கருவி காணப்பட்டது.

அதன் பரப்­ப­ளவு ஒரு சிறிய கார் அள­வுக்கு இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

"இந்­தக் கருவி யாரு­டை­யது என்று தெரி­ய­வில்லை," என்று வெள்ளை மாளிகை செய்­தித்­தொ­டர்­பா­ளர் ஜான் கிர்பி தெரி­வித்­தார். அது எங்­கி­ருந்­து வந்­தது என்­ப­து­கூட இன்­னும் தெரி­ய­வில்லை என்­றார் அவர்.

அலாஸ்கா வான்­வெ­ளி­யில் இருந்த அந்­தக் கரு­வி­யைச் சுட்­டு­வீழ்த்த அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் உத்­த­ர­விட்­ட­தாக வெள்ளை மாளிகை கூறி­யது.

இந்­நி­லை­யில், சில நாள்­க­ளுக்கு முன்பு சுட்­டு­வீழ்த்­தப்­பட்ட சீன பலூன் எத்­த­கைய தக­வல்­க­ளைப் பெற முயன்­றது என்­பதை கண்­ட­றிய விசா­ரணை நடத்­தப்­ப­டு­வ­தாக அமெ­ரிக்க அதிகா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

தொலைத்­தொ­டர்­புக் கரு­வி­கள் இருக்­கும் இடத்­தைக் கண்­டு­பி­டிக்­கும் உணர்­க­ரு­வி­கள் அந்த பலூ­னில் இருந்­த­தாக அவர்­கள் கூறி­னர்.

அந்­தக் கரு­வி­க­ளி­ல் செய்­யப்­படும் அழைப்­பு­களை இடை­ம­றிக்­கும் ஆற்­றல் அந்­தப் பலூ­னுக்கு இருந்­த­தாக

அமெ­ரிக்கா தெரி­வித்­தது.