தமிழ்நாட்டில் உள்ள 8 அறிவார்ந்த நகரங்களில் அடுத்த மாதம் திட்டம் நிறைவுபெறும்

தமிழ்நாட்டில் உள்ள 8 அறிவார்ந்த நகரங்களில் அடுத்த மாதம் திட்டம் நிறைவுபெறும்

1 mins read
33ae35dd-87a5-46bf-afa1-56041792ddbf
-

இந்­திய அர­சாங்­கம் அதன் அறி­வார்ந்த நக­ரங்­கள் திட்­டத்­தின்­கீழ், அடுத்த மாதம் 22 நக­ரங்­களில் திட்­டங்­கள் நிறை­வு­பெ­ற­வுள்­ளன. அவற்­றில் எட்டு நக­ரங்­கள் தமிழ்­நாட்­டில் உள்­ளன. சென்னை, கோயம்­பத்­தூர், ஈரோடு, சேலம், வேலூர், மதுரை, திருச்­சி­ராப்­பள்ளி, தஞ்­சா­வூர் ஆகி­யவை அந்த எட்டு நக­ரங்­க­ளா­கும்.

ஆக்ரா, வார­ணாசி, புனே, விசா­கப்­பட்­டி­னம் அக­ம­த­பாத் உள்­ளிட்ட நக­ரங்­க­ளி­லும் அடுத்த மாதம் அறி­வார்ந்த நக­ரம் கீழள்ள திட்­டம் மார்ச் மாதத்­தில் நிறை­வு­பெ­றும். எஞ்­சிய 78 நக­ரங்­களில் மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரும் திட்­டங்­கள் அடுத்த மூன்று, நான்கு மாதங்­களில் முடிந்­து­வி­டும் என்று இந்­தி­யா­வின் வீட­மைப்பு நகர விவ­கா­ரங்­கள் அமைச்சு நேற்­று­முன்­தி­னம் கூறி­யது.

இந்­திய அர­சாங்­கத்தின் அறி­வார்ந்த நக­ரங்­கள் திட்­டம் 2015ல் தொடங்­கி­யது. போட்­டி­கள் மூலம் 100 நக­ரங்­கள் தேர்வு செய்­யப்­பட்­டன. அவை எதிர்­நோக்­கும் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு அறி­வார்ந்த தீர்­வு­க­ளைக் கண்டு, நக­ர­வா­சி­க­ளுக்கு சுத்­த­மான, நிலைத்­தன்மைமிக்க சூழலை உரு­வாக்­கு­வது நோக்­கமாகும்.