வரவுசெலவுத் திட்டம் சமுதாய கட்டிறுக்கத்தை வலுவாக்கும்; குடும்பங்களுக்கு உறுதிதரும்

வரவுசெலவுத் திட்டம் சமுதாய கட்டிறுக்கத்தை வலுவாக்கும்; குடும்பங்களுக்கு உறுதிதரும்

2 mins read
9524d5aa-da49-4ab3-aa13-7bc2cc933ee3
-

கொவிட்-19 கால­கட்­டத்­துக்­குப் பிறகு முன்­னோக்­கிச் செல்­வ­தில் இவ்­வாண்டு வர­வு­செ­ல­வுத் திட்­டம் கவ­னம் செலுத்­தும் என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் கூறி­யுள்­ளார்.

தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று பதி­விட்ட திரு வோங், 'புதிய கால­கட்­டத்­தில் ஒன்­றி­ணைந்து முன்­னே­று­வோம்' என்ற கருப்­பொ­ருளை வர­வு­செ­ல­வுத் திட்­டம் கொண்­டி­ருக்­கும் என்­றார்.

பிரச்­சி­னை­கள் சூழ்ந்த உல­கில் சிங்­கப்­பூர் அதன் எதிர்­கால வாய்ப்­பு­களை எவ்­வாறு கைப்­பற்­றும் என்­ப­தைத் திட்­டம் எடுத்­து­ரைக்­கும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார். நிதி அமைச்­ச­ரு­மான திரு வோங் வர­வு­செ­ல­வுத் திட்ட அறிக்­கையை நாடா­ளு­மன்­றத்­தில் இன்று பிற்­ப­கல் 3.30 மணிக்­குத் தாக்­கல் செய்­வார்.

புதிய வாய்ப்­பு­க­ளைப் பற்­றிக்­கொள்ள சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு உத­வு­வது, சமு­தா­யக் கட்­டி­றுக்­கத்தை வலுப்­ப­டுத்­து­வது, குடும்­பங்­க­ளுக்கு உறு­தி­கூ­று­வது ஆகி­ய­வற்­று­டன் ஒன்­று­பட்ட மக்­க­ளா­கக் கூட்­டாக மீட்­சியை உரு­வாக்­கு­வது வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தின் நோக்­கம் என்­றார் திரு வோங்.

சிங்­கப்­பூ­ரில் நேற்று கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் முடி­வுக்கு வந்­த­தை­யும் திரு வோங் தமது பதி­வில் சுட்­டி­னார். கொவிட்-19க்கு எதி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு கடந்த 9ஆம் தேதி அதை அறி­வித்­தி­ருந்­தது. பொதுப் போக்­கு­வ­ரத்­தில் முகக்­க­வ­சங்­கள் அணி­யத் தேவை­யில்லை என்­றும் நாட்டு எல்­லை­களில் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­கள் முடி­வுக்கு வரும் என்­றும் பணிக்­குழு கூறி­யி­ருந்­தது.

"நாம் ஒன்­று­பட்டு ஒரு தலை­மு­றை­யின் நெருக்­க­டி­யைச் சமா­ளித்­துள்­ளோம். பெருந்­தொற்­றில் இருந்து நாம் மேலும் வலு­வாக மீட்சி அடைந்­துள்­ள­போ­தும் அதற்­குப் பிந்­தைய புதிய எதிர்­கா­லத்­துக்கு இப்­போது ஆயத்­த­மாக வேண்­டும் என்று துணைப் பிர­த­மர் தெரி­வித்­தார்.

"நம் முன்­னுள்ள பாதை எளி­தா­னல்ல. ஆனால் நம் ஒட்­டு­மொத்த முயற்சி, ஒரு­வர் மீது ஒரு­வர் வைத்­தி­ருக்­கும் நம்­பிக்கை ஆகி­ய­வற்­றின்­வழி செய­லாற்றி, எல்­லா­ருக்­கும் அடுத்­த­டுத்த தலை­மு­றை­க­ளுக்­கும் மேம்­பட்ட வருங்­கா­லத்­தைப் பெறு­வோம் என்று நம்­பிக்கை வைத்­துள்­ளேன்," என திரு வோங் விவ­ரித்­தார்.

உத்­த­ர­வா­தத் தொகுப்­புத் திட்­டத்­தில் செய்­யப்­படும் மேம்­பா­டு­கள் பற்­றிய விவ­ரங்­கள் வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் இடம்­பெ­றும். $8 பில்­லி­யன் வெள்ளி மதிப்­பி­லான உத்­த­ர­வா­தத் தொகுப்­புத் திட்­டம், பொருள் சேவை வரி உயர்­வின் பாதிப்பை மட்­டுப்­ப­டுத்த அறி­மு­கம் செய்­யப்­பட்­டது. எதிர்­பார்த்­த­தை­விட அதி­கம் கூடி­யுள்ள பண­வீக்­கத்­தை­யும் கருத்­தில்கொண்டு அது வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் மேம்­ப­டுத்­தப்­படும்.

'முன்­னே­று­வோம் சிங்­கப்­பூர்' கருத்­த­றி­யும் நட­வ­டிக்­கை­யில் கிடைக்­கப்­பெற்ற கருத்­து­கள், யோச­னை­கள் ஆகி­யவை கருத்­தில் கொள்­ளப்­பட்டு, அர­சாங்­கக் கொள்­கை­க­ளுக்கு மாற்­றங்­களும் அறி­விக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

வர­வு­செ­ல­வுத் திட்ட அறி­விப்­பு­கள் பற்றி தமிழ் முர­சின் இணை­யத்­த­ளத்­தி­லும் சமூக ஊட­கத் தளங்­க­ளி­லும் விரைந்து வெளி­யி­டப்­படும் தக­வல்­க­ளைப் படித்­துத் தெரிந்­து­கொள்­ள­லாம்.