மலேசிய மருத்துவமனையில் கத்திக்குத்து; சந்தேகப் பேர்வழி ஒரு மனநோயாளி

மலேசிய மருத்துவமனையில் கத்திக்குத்து; சந்தேகப் பேர்வழி ஒரு மனநோயாளி

2 mins read

மலே­சி­யா­வின் செல­யாங் மருத்­து­வ­ம­னை­யில் நேற்று நடுத்­தர வயது ஆட­வ­ரைக் கத்­தி­யால் குத்­தி­ய­வர் மன நோயாளி என்று அந்­நாட்டு சுகா­தா­ரத் துறைத் தலைமை இயக்­கு­நர் டாக்­டர் நூர் ஹிஷாம் அப்­துல்லா தெரி­வித்­துள்­ளார். மனநோயா­ளி­யான ஆட­வரைக் காவல்­து­றை­யி­னர் பின்­னர் கட்­டுப்­ப­டுத்­தி­னர்.

சம்­ப­வம் குறித்த தவ­றான தக­வல் பர­வும் முன், கத்­தி­யால் குத்­தி­ய­வர் மனநோயாளி என்­பதை மக்­க­ளுக்­குத் தெளி­வு­ப­டுத்த விரும்­பு­வ­தாக டாக்­டர் நூர் ஹிஷாம் 'த ஸ்டார்' நாளேட்­டி­டம் குறிப்­பிட்­டார்.

இத்­த­கைய சம்­ப­வங்­கள் எங்­கும் நடக்­கும் சாத்­தி­யம் இருப்­பதை அவர் சுட்­டி­னார். மன நோயா­ளி­க­ளைக் கையாள்­வது தொடர்­பான செயல்­முறை விதி­கள் குறித்து சுகா­தார அமைச்சு மறு­ஆய்வு செய்­யும் என்­றார் அவர்.

செல­யாங் மருத்­து­வ­ம­னை­யில் காத்­தி­ருந்த நேரத்­தில் மன நோயாளி எரிச்­சல் அடைந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

மருத்­து­வ­மனை வார்­டு­களில் படுக்­கை­கள் நிரம்­பி­யி­ருந்­த­தால் அவ­சர சிகிச்­சைப் பிரி­வில் அவர் காத்­தி­ருக்க நேர்ந்­தது.

இத­னால் சின­முற்ற அவர், தாதி­யர்க்­கான சிற்­றுண்­டிச் சாலை­யில் இருந்த கத்­தியை எடுத்து, அங்­கி­ருந்த டெங்கி நோயா­ளி­யான நடுத்­தர வயது ஆட­வரை மூன்­று­முறை கத்­தி­யால் குத்­தி­னார்.

முது­கில் ஒரு­மு­றை­யும் அடி­வயிற்­றுப் பகு­தி­யில் இரு­மு­றை­யும் அவர் கத்­தி­யால் குத்­தி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட ஆட­வ­ருக்கு இத­னால் அறுவை சிகிச்சை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் கூறு­கின்­றன. கத்­தி­யால் குத்­திய ஆட­வர் மருத்­து­வ­ம­னை­யின் மனநோயா­ளி­கள் பிரி­வில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.

சம்­ப­வம் குறித்து அறிந்த மலே­சிய சுகா­தார அமைச்­சர் டாக்­டர் ஸலிஹா முஸ்­தஃபா நேற்று நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­திற்­குப் பிறகு செல­யாங் மருத்­து­வ­ம­னைக்கு விரைந்­தார்.

கத்­திக்­குத்­துச் சம்­ப­வம் குறித்து அதி­கா­ரி­கள் விசா­ரணை மேற்­கொண்டு வரு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

நோயா­ளி­யின் நிலைமை குறித்து குடும்­பத்­தி­ன­ருக்கு அவ்­வப்­போது தக­வல் தரப்­படும் என்­றார் அவர்.

அமைச்­ச­ரு­டன் சிலாங்­கூர் மாநில சுகா­தார இயக்­கு­நர், மருத்­து­வ­மனை இயக்­கு­நர், பாதிக்­கப்­பட்ட ஆட­வ­ருக்கு சிகிச்சை அளிக்­கும் மருத்­து­வர்­கள் ஆகி­யோ­ரும் பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் குடும்­பத்­தி­ன­ரைச் சந்­தித்­த­னர். ஆட­வ­ருக்கு ஆகச் சிறந்த சிகிச்சை அளிப்­பதை உறு­தி­செய்­யும் முயற்­சி­கள் குறித்து குடும்­பத்­தி­ன­ரி­டம் அவர்­கள் எடுத்துக் கூறினர்.

இவ்­வே­ளை­யில், மனநோயா­ளி­யான ஆட­வர் இவ்­வாறு கத்­தி­யால் குத்­தி­ய­தற்­கான நோக்­கம் இன்­னும் தெளி­வா­கத் தெரி­ய­வில்லை என்று காவல்­து­றை­யினர் கூறி­யுள்­ள­னர்.

கத்­தி­யால் குத்­திய மன நோயாளி 22 வயது ஆட­வர் என்­றும் பாதிக்­கப்­பட்ட ஆட­வ­ரின் வயது 29 என்­றும் சிலாங்­கூர் காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.