அண்மையில் ரிக்டர் அளவில் 7.9 நிலநடுக்கம் துருக்கியையும் சிரியாவையும் உலுக்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர்.
இந்நிலையில், மீட்புப் பணிகளை துருக்கி முடுக்கிவிட்டுள்ளது. இடிபாடுகளை அகற்றி பாதிக்கப்பட்ட இடங்களை மறுசீரமைக்க அது திட்டமிட்டுள்ளது.
எனவே, சிறிது காலமாகவே அங்கு அகதிகளாக வாழும் சிரியர்களை அது சொந்த நாட்டுக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளது.
நிலைமை சரிசெய்யப்பட்டதும் அவர்கள் மீண்டும் துருக்கிக்கு வரலாம் என்று துருக்கிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தத் தற்காலிக ஏற்பாட்டுக்கு இணங்கி ஆயிரக்கணக்கான சிரியா அகதிகள் நேற்று முன்தினம் எல்லையைக் கடந்து சொந்த நாடு திரும்பினர்.
துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருந்த அவர்களுக்கு மனதில் தயக்கமும் குழப்பமும் குடிகொண்டுள்ளது.
எல்லையைக் கடந்ததும் மீண்டும் துருக்கிக்குள் அகதிகளாக நுழைய துருக்கிய அதிகாரிகள் விடுவார்களா என்ற சந்தேகம் அவர்களில் பலருக்கு ஏற்பட்டுள்ளது.
இவர்களில் பலர் சிரியாவைத் துண்டு துண்டாகப் பிளவுபடுத்திய போரிலிருந்து தப்பி துருக்கிக்குச் சென்றவர்கள்.
இந்த அகதிகளின் எதிர்காலம் குறித்து துருக்கி அதிகாரபூர்வத் தகவல் வெளியிடவில்லை.

