உடல், மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் குற்றங்கள் கூடின

உடல், மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் குற்றங்கள் கூடின

3 mins read

உடல், மன ரீதி­யில் பாதிப்பை ஏற்­

ப­டுத்­தும் குற்­றங்­க­ளின் எண்­ணிக்கை கடந்த ஆண்டு அதி­க­ரித்­துள்­ளது.

2021ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இக்­குற்­றங்­களின் எண்­ணிக்கை 19,343லிருந்து 20,193ஆக அதி­க­ரித்­தது. மானபங்கக் குற்றங்களின் எண்ணிக்கை 2021ல் 1,474ஆக இருந்தது. கடந்த ஆண்டு அது 1,610ஆக ஏற்றம் கண்டது.

2022ஆம் ஆண்­டில் நிகழ்ந்த கிட்­டத்­தட்ட பத்­தில் ஆறு (58.3 விழுக்­காடு) மானபங்க சம்பவங்களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­குக் குற்­ற­

வா­ளி­கள் ஏற்­கெ­னவே அறி­மு­க­மா­ன­வர்­கள் என்று காவல்­துறை கூறி­யது.

இரவுநேர கேளிக்கை விடு­தி­கள், பொதுப் போக்­கு­வ­ரத்து ஆகி­ய­வற்­றில் மான­பங்­கம் ஆக அதி­க­மாக நிகழ்­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு இரவுநேர கேளிக்கை விடு­தி­களில் 129 மான­பங்­கக் குற்­றங்­கள் நிகழ்ந்­த­தாக காவல்­துறை கூறி­யது. 2021ஆம் ஆண்­டில் 21 மான­பங்­கக் குற்­றங்­கள் மட்­டுமே நிகழ்ந்­தன.

2021ஆம் ஆண்­டில் பொதுப் போக்குவ­ரத்­தில் 163 மான­பங்­கக் குற்­றங்­கள் நிகழ்ந்­தன. இந்த எண்­ணிக்கை கடந்த ஆண்டு 178ஆக ஏற்­றம் கண்­டது.

மற்­ற­வர்­க­ளுக்­குத் தெரி­யா­மல் அவர்­களை முறை­யற்ற வகை­யில், பாலு­ணர்­வைத் தூண்­டும் வகை­யில் படம் அல்­லது காணொளி எடுக்­கும் குற்­றங்­கள் கடந்த ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் சிறி­த­ளவு குறைந்­துள்­ளது. 2021ல் இந்த எண்­ணிக்கை 467ஆக இருந்­தது. இது கடந்த ஆண்டு 424ஆக குறைந்­தது.

இத்­த­கைய குற்­றங்­கள் ஆக அதி­க­மாக குடி­யி­ருப்­பு­கள் (142 சம்பவங்­கள்), பொதுப் போக்­கு­வ­ரத்து (55 சம்பவங்­கள்) கடைத்­தொ­கு­தி­கள் (54 சம்பவங்­கள்) ஆகி­ய­ இடங்களில் நிகழ்ந்­தன. குடி­யி­ருப்­பு­களில் நிகழ்ந்த இத்­த­கைய குற்­றங்­க­ளுக்­குப் பெரும்­பா­லும் சொந்த குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­கள், ஒன்­றாக வாடகைக்கு இருப்­ப­வர்­கள் போன்­ற­வர்­களே கார­ணம். இவர்­களில் பலர், பாதிக்­கப்­பட்­டோர் கழி­வ­றை­யைப் பயன்­ப­டுத்­தி­ய­போது அவர்­க­ளுக்­குத் தெரி­யா­மல் ஒளிந்

­தி­ருந்து பார்த்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பொதுப் போக்­கு­ரத்­தில் நிகழ்ந்த இத்­த­கைய குற்­றச் செயல்­க­ளைப் பொறுத்­த­வரை, சக பய­ணி­க­ளின் குட்­டைப் பாவ­டைக்­குள் பட­மெ­டுத்­தல் அதி­க­மாக இருந்­த­தாக காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர்.

கடை­களில் திரு­டும் குற்

றங்­கள் கடந்த ஆண்டு அதி­க­ரித்­தது. 2021ஆம் ஆண்­டில் இந்­தக் குற்­றங்­

க­ளின் எண்­ணிக்கை 2,652ஆக இருந்­தது. கடந்த ஆண்­டில் இது 3,244ஆக உயர்ந்­தது. கடை­களில் திரு­டும் குற்­றங்­க­ளைப் பொறுத்­த­வரை, மூன்­றில் இரண்டு குற்­றச் செயல்­கள் (67 விழுக்­காடு) சில்­லறை வர்த்­த­கக் கடை­களில் நிகழ்ந்­தன. உண­வுப் பொருள்­கள், பானங்­கள், மது­பா­னங்­கள், சுய பரா­ம­ரிப்­புப் பொருள்­கள், துணி­கள், அழகு சாத­னங்­கள் போன்­றவை அதி­கம் திரு­டப்­பட்­ட­தாக காவல்­துறை கூறி­யது.

குடி­யி­ருப்­பு­கள் அல்­லது வர்த்­தக இடங்­களில் நிகழ்ந்த திருட்­டு­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்­தது. 2021ஆம் ஆண்­டில் 1,359ஆக இருந்த இந்த எண்­ணிக்கை கடந்த ஆண்டு 1,729ஆக ஏற்­றம் கண்­டது.

881 திருட்­டுக் குற்­றங்­கள் குடி­

யி­ருப்­பு­க­ளி­லும் 503 திருட்­டுக் குற்­றங்­கள் வர்த்­தக இடங்­க­ளி­லும் நிகழ்­ந­தன. குடி­யி­ருப்­பு­க­ளி­லி­ருந்து அதி­கம் திரு­டப்­பட்ட பொருள்­களில் ரொக்­கம், நகை­கள், கைபே­சி­கள், பைகள், கைக்­க­டி­கா­ரங்­கள் போன்­றவை அடங்­கும். இத்­த­கைய குற்­றங்­களில் ஈடு­ப­டு­வோ­ரில் பெரும்­பா­லா­னோர் அவ்­வி­டங்­களில் வாட­கைக்கு இருப்­ப­வர்­கள், ஒரே அறை­யில் தங்­கு­ப­வர்­கள், குடும்ப உறுப்­பி­னர்­கள், துப்­பு­ர­வுப் பணி­யா­ளர்­கள், பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் நண்­பர்­கள்.

கல­வரங்களின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்­துள்­ளது. 2021ஆம் ஆண்­டில் 46 கல­வரங்கள் நிகழ்ந்­தன. இந்த எண்­ணிக்கை கடந்த ஆண்டு 60ஆக அதி­க­ரித்­தது. கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு இர­வு­நேர கேளிக்கை வி­டு­தி­கள் மீண்­டும் திறக்­கப்­பட்­டதை அடுத்து பலர் ஒன்­று­கூ­டு­வது மீண்­டும் தொடங்­கி­விட்­ட­தால் இத்­த­கைய குற்­றங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக காவல்­துறை தெரி­வித்­தது. இதற்­கி­டையே, மற்ற குற்­றங்­க­ளைக் காட்­டி­லும் மோச­டிக் குற்­றங்­க­ளின் எண்­ணிக்கை வெகு­வாக அதி­க­ரித்­துள்­ளது. மோச­டிக் குற்­றங்­கள் தொடர்­பான புள்­ளி­வி­வ­ரங்­கள் இம்­மா­தம் 8ஆம் தேதி­வெளி­யி­டப்­பட்­டன. 2021ல் 23,933ஆக இருந்த மோச­டிக் குற்­றங்­க­ளின் எண்­ணிக்கை கடந்த ஆண்­டில் 31,728ஆக அதி­க­ரித்­தது. இது 32.6 விழுக்­காடு அதி­க­ரிப்­பா­கும். சில குற்­றங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ள­போ­தி­லும் சிங்­கப்­பூ­ரில் குற்­றச் செயல்­

க­ளின் எண்­ணிக்கை கட்­டுக்­குள் இருப்­ப­தாக காவல்­து­றை­யின் செயல்­மு­றைப் பிரி­வின் தற்­கா­லிக இயக்­கு­

ந­ரான உதவி ஆணை­யர் கிரெ­கரி டான் தெரி­வித்­தார்.