தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதையடுத்து, திமுக கவுன்சிலர் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இம்மாதம் 8ஆம் தேதியன்று பூச்சம்பள்ளி நகரில் உள்ள பொது குடிநீர் தொட்டியில் ராணுவ வீரர்களான பிரபுவும் (படம்) அவரது சகோதரர் பிரபாகரனும் தங்கள் ஆடைகளைத் துவைத்துக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது அவ்வழியாக தமது இரண்டு மகன்களுடன் சென்றுகொண்டிருந்த திமுக கவுன்சிலர் ஆர். சின்னசுவாமி அங்கு ஆடைகளைத் துவைக்கக்கூடாது என்றும் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட வேண்டும் என்றும் அந்த இரு சகோதரர்களிடம் கடிந்துகொண்டதாக நம்பப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இருதரப்பின
ரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தலையிட்டதும் திரு சின்னசுவாமியும் அவரது மகன்களும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
ஆனால் அன்று மாலை தமது நான்கு மகன்கள், உறவினர்கள் ஆகியோருடன் அந்த இரண்டு சகோதரர்களின் வீட்டிற்கு திரு சின்னசுவாமி சென்றார்.
அங்கு அந்த இருவரையும் திரு
சின்னசுவாமியும் அவருடன் சென்ற கும்பலும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
தாக்குதலில் பிரபுவின் தலையில் மிகக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. அவர் ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது சகோதரர் பிரபாகரனுக்கு இலேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டன.
தாக்குதல் குறித்து காவல்துறையிடம் பிரபாகரன் புகார் செய்ததை அடுத்து, திரு சின்னசுவாமியின் மகனான குரு
சூரியமூர்த்தி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, சிகிச்சை பலனின்றி பிரபு மரணமடைந்ததை அடுத்து, திரு சின்னசுவாமி உட்பட மூவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
திரு பிரபு காஷ்மீரில் ராணுவப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகவும் பொங்கல் திருநாளுக்காக அவரும் அவரது சகோதரரும் விடுப்பு எடுத்து சொந்த ஊர் திரும்பியதாகவும் அறியப்
படுகிறது. இம்மாதம் 9ஆம் தேதியன்று அவர் மீண்டும் காஷ்மீர் திரும்புவதாக இருந்தது.
அவருக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
இந்நிலையில், நாட்டைப் பாதுகாக்க இரவு பகல் பாராது கடுமையாகச் சேவையாற்றும் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டிருப்
பதைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

