2022ல் 15 மடங்கு உயர்வு

2022ல் 15 மடங்கு உயர்வு

2 mins read
aa87e464-647d-4fdb-90fc-cdd41122b8ef
-

ஆள்மாறாட்டம் செய்து சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற பயணிகளின் எண்ணிக்கை

ஆள்­மா­றாட்­டம் செய்து அல்­லது முன்­னைய பய­ணங்­க­ளின்­போது பயன்­ப­டுத்­தாத அடை­யா­ளத்­தைக் கொண்டு சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய முய­லும் பய­ணி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.

குறிப்­பாக, சிங்­கப்­பூர் கடந்த ஆண்­டில் தனது எல்­லை­களை மீண்­டும் முழு­மை­யா­கத் திறந்­து­விட்­டதை அடுத்து இப்­போக்கு அதி­க­ரித்து இருக்­கிறது.

முந்­திய 2021ஆம் ஆண்­டில் 28 பேர் இப்­படி ஆள்­மா­றாட்­டம் செய்து வேறு அடை­யா­ளங்­களைப் பயன்­ப­டுத்தி சிங்­கப்­பூருக்­குள் நுழைய முயன்­ற­னர்.

இந்­நி­லை­யில், சென்ற ஆண்­டில் அந்த எண்­ணிக்கை கிட்­டத்­தட்ட 15 மடங்கு கூடி, 441 ஆனது.

குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­யம் (ஐசிஏ) நேற்று வெளி­யிட்ட ஆண்­டுப் புள்­ளி­விவர அறிக்­கை­யில் இத்­த­க­வல்­கள் இடம்­பெற்­றுள்ளன.

"ஆள்­மா­றாட்­டம் செய்து அல்­லது தங்­க­ளது முன்­னைய சிங்­கப்­பூர் பய­ணங்­களின்­போது பயன்­ப­டுத்­தாத வேறு அடை­யா­ளத்­தைப் பயன்­ப­டுத்­து­வது கண்டு­பி­டிக்­கப்­பட்­டால், சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய அனு­மதி மறுக்­கப்­படும்; சிங்­கப்­பூ­ருக்­கு மீண்டும் வரவும் தடை விதிக்­கப்­படும்," என்று ஆணை­யத்­தின் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

உயி­ர­ளவை (பயோ­மெட்­ரிக்) தொழில்­நுட்­பத்­தின் மூலம் அத்­த­கைய பய­ணி­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக ஆணை­யம் குறிப்­பிட்­டது. குடி­நு­ழைவு அனு­ம­திக்­குக் கரு­விழி அமைப்­பு­க­ளை­யும் முக அடை­யா­ளங்­க­ளை­யும் முதன்­மை­யான அடை­யா­ளங்­க­ளாக அத்­தொ­ழில்­நுட்­பம் பயன்­ப­டுத்து­கிறது.

அப்படி ஆள்­மா­றாட்டம் செய்த அல்­லது அடை­யா­ளத்தை மாற்­றிய பய­ணி­களில் பலரும் விசா காலம் முடிந்த பின்­ன­ரும் கூடு­தல் காலம் தங்­கியிருந்­தோர் அல்­லது நாடு­க­டத்­தப்­பட்­டோர் அல்­லது சிங்­கப்­பூ­ரில் இருந்­த­போது பல்­வேறு குற்­றம் புரிந்­தோர் அல்­லது குற்­றம் புரிய முயன்­றோர் எனக் கூறப்பட்டது.

அது­போல், 21 பேர் போலி அல்­லது திருத்­திய பயண ஆவ­ணங்­கள் வைத்­தி­ருந்­த­தும் கண்டு­பி­டிக்­கப்­பட்­டது.