சட்டவிரோதக் குடியேறிகள், விசா காலம் முடிந்தும் தங்கி இருந்தோர் எனக் கடந்த ஆண்டு 414 பேர் கைதுசெய்யப்பட்டனர். முந்திய 2021ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 355ஆக இருந்தது.
குடிநுழைவுக் குற்றவாளிகளுக்குப் புகலிடம் அளித்தவகையில் அல்லது வேலைக்கு வைத்திருந்த வகையில் 226 பேர் கைதாயினர்.
2021ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, இது சற்றே குறைவு. அவ்வாண்டில் இத்தகைய குற்றமிழைத்ததாக 236 பேர் பிடிபட்டனர்.
எல்லைகளைத் திறந்தபின் சோதனைச்சாவடிகள் வழியாக சட்டவிரோதக் கடத்தல் முயற்சிகள் இடம்பெறுவதும் கூடியது.
முந்திய 2021ஆம் ஆண்டு 27,000 சட்டவிரோதக் கடத்தல் முயற்சிகள் இடம்பெற்ற நிலையில், சென்ற ஆண்டு அந்த எண்ணிக்கை 35,000ஆக அதிகரித்தது.

