பயணிகள் எண்ணிக்கை 17 மடங்கு கூடியது

பயணிகள் எண்ணிக்கை 17 மடங்கு கூடியது

1 mins read

கடந்த ஆண்டு சிங்கப்பூருக்கு வந்த அல்லது இங்கிருந்து கிளம்பிச் சென்ற பய­ணி­க­ளின் எண்­ணிக்கை குறிப்­பி­டத்­தக்க அளவு அதி­கரித்தது.

கடந்த 2022ஆம் ஆண்­டில், 104.9 மில்­லி­யன் பய­ணி­க­ளுக்கு வருகை மற்­றும் புறப்­பாட்டு அனு­மதி வழங்­கப்­பட்­டது. இது 2021ஆம் ஆண்­டைக் காட்­டி­லும் ஏறக்­கு­றைய 17 மடங்கு அதி­கம். 2021ஆம் ஆண்­டில் 5.9 மில்­லி­யன் பய­ணி­களே குடி­நு­ழை­வுச் சோத­னை­யைக் கடந்­த­னர்.

சென்ற டிசம்­பர் மாதம் பள்ளி விடு­மு­றைக் காலத்­தில் நிலச் சோத­னைச்­சா­வ­டி­க­ளைக் கடந்­தோர் எண்­ணிக்கை கிட்­டத்­தட்ட கொவிட்-19 பர­வ­லுக்கு முன்­பு இருந்த நிலையை எட்­டி­யது. அம்­மா­தத்­தில் துவாஸ், உட்­லண்ட்ஸ் சோத­னைச்­சா­வ­டி­கள் வழி­யாக நாள்­தோ­றும் 400,000 பேர் சென்­ற­னர்.

விண்­ணப்­பங்­கள் குவிந்­தன

எல்­லை­கள் திறக்­கப்­பட்­ட­தால் அனைத்­து­ல­கப் பய­ணம் மேற்­கொள்­ள­லாம் என்ற ஆவ­லில், கடப்­பி­தழ் கோரி விண்­ணப்­பங்­கள் குவிந்­தன.

முந்­திய 2021ஆம் ஆண்­டில் 300,000 கடப்­பி­தழ்­கள் வழங்­கப்­பட்ட நிலை­யில், சென்ற ஆண்டு 1.25 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான கடப்­பி­தழ்­கள் வழங்­கப்பட்டன.

"கொவிட்-19 பர­வ­லின்­போது ஈராண்­டு­கா­லம் பய­ணக் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டி­ருந்­த­தால் சிங்­கப்­பூ­ரர்­கள் பல­ரும் காலா­வதி­யான கடப்­பி­தழ்­க­ளைப் புதுப்­பிக்­க­வில்லை," என்று ஆணை­யம் தெரி­வித்­தது.

கடப்­பி­தழ் விண்­ணப்­பங்­கள் குவிந்­த­தால், அவற்றை விரைந்து பரி­சீ­லிக்க ஏது­வாக வேறு பிரிவு­க­ளைச் சேர்ந்த கிட்­டத்­தட்ட 300 ஊழி­யர்­கள் அப்­பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­தாக ஆணை­யம் குறிப்­பிட்­டது. வாரம் ஏழு­நா­ளும் 24 மணி நேர­மும் அப்­பணி மேற்­கொள்­ளப்­பட்­டது.