ஏர் இந்தியா நிறுவனம் 470 புதிய விமானங்களை வாங்க இருப்பது இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியில் புதிய உந்துசக்தியாக விளங்கும் எனக் கூறப்படுகிறது.
இண்டிகோ உள்ளிட்ட பிற இந்திய உள்ளூர் விமான சேவை நிறுவனங்கள் அடுத்த 24 மாதங்களில் மொத்தம் 1,000 முதல் 1,200 புதிய விமானங்களை வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என எதிர்பார்க்கப்படுவதாக ஆசிய பசிபிக் விமானப் போக்குவரத்து மையம் (காப்பா) என்ற அமைப்பு முன்னுரைத்துள்ளது.
"கொவிட்-19 தொற்று பரவுவதற்குமுன் இண்டிகோ நிறுவனம் கிட்டத்தட்ட 300 விமானங்களை வாங்கத் திட்டமிட்டு வந்தது. கொவிட்-19 பரவலால் அது தள்ளிவைக்கப்ப்பட்டது. இந்நிலையில், அந்த எண்ணிக்கையை மேலும் அதிகரித்து, அந்நிறுவனம் ஏறக்குறைய 500 விமானங்களை வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று `காப்பா' அறிக்கை கூறுகிறது.
இப்போது, எல்லா இந்திய விமான சேவை நிறுவனங்களும் சேர்த்தே ஏறக்குறைய 700 விமானங்களைத்தான் இயக்கி வருகின்றன.

