தலைமைப் பதவிகளில் இந்திய வம்சாவளியினர் நியமனம் தொடர்கிறது; 'யூடியூப்'பில் நீல் மோகன்

தலைமைப் பதவிகளில் இந்திய வம்சாவளியினர் நியமனம் தொடர்கிறது; 'யூடியூப்'பில் நீல் மோகன்

1 mins read
d962eab2-5855-4325-9835-e8a0c7748b8b
-

உல­கின் முன்­னணி நிறு­வ­னங்­களின் தலை­மைப் பத­வியை இந்­திய வம்­சா­வ­ளி­யி­னர் அலங்­க­ரிப்­பது தொடர்­கிறது. அவ்­வ­கை­யில், இந்­திய அமெ­ரிக்­க­ரான நீல் மோகன், 49 (படம்), `யூடி­யூப்' காணொ­ளிப் பகிர்வுத் தளத்தின் தலைமை நிர்­வா­கி­யா­கப் பொறுப்­பேற்­கவுள்ளார்.

உல­கின் ஆகப் பெரிய காணொ­ளித்­த­ள­மான யூடி­யூப்­பின் இப்­போ­தைய தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யான சூசன் வோய்­சிச்கி, அப்­ப­த­வி­யி­லி­ருந்து தாம் வில­க­வி­ருப்­ப­தாக அறி­வித்­துள்­ளார்.

அமெ­ரிக்­கா­வின் ஸ்டான்­ஃபர்ட் பல்­கலைக்­க­ழ­கத்­தில் மின்னியலில் பொறியியல் பட்­டம் பெற்ற திரு மோகன், பின்னர் ஸ்டான்­ஃபர்ட் வணி­கக் கழ­கத்­தில் எம்­பிஏ பயின்­றார்.

இவர் கடந்த 1996ஆம் ஆண்டு `அக்­சென்­சர்' நிறு­வ­னத்­தில் தமது வாழ்க்­கைத்­தொ­ழி­லைத் தொடங்­கி­னார்.

பின்­னர் `நெட்­கி­ரா­விட்டி' எனும் புதிய நிறு­வ­னத்­தில் இவர் இணைந்­தார். பிறகு அந்­நி­று­வ­னத்தை இணைய விளம்­பர நிறு­வ­ன­மான `டபுள்­கி­ளிக்' வாங்­கி­யது. கடந்த 2007ஆம் ஆண்­டில் `டபுள்­கி­ளிக்'கை கூகல் நிறு­வ­னம் வாங்­கி­யது.

யூடி­யூப்­ தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யா­கப் பத­வி­யேற்­க­ இருக்­கும் திரு மோகன், இதற்கு­முன் அந்த ­நிறு­வனத்­தின் தலைமை தயா­ரிப்பு அதி­கா­ரி­யா­கச் செயல்பட்டார்.

இதை­ய­டுத்து, சுந்தர் பிச்சை (கூக­லின் தாய் நிறு­வ­ன­மான அல்­ஃப­பெட்), சத்ய நாதெல்லா (மைக்­ரோ­சா­ஃப்ட்), சந்­தீப் கட்­டா­ரியா (பாட்டா), லக்­‌ஷ்­மண் நர­சிம்­மன் (ஸ்டார்­பக்ஸ்), சாந்­தனு நாரா­யண் (அடோபி), அர­விந்த் கிருஷ்ணா (ஐபி­எம்) என, முன்­னணிப் பெரு­நி­று­வ­னங்­க­ளின் தலை­மைப் பத­வி­களில் இருக்­கும் இந்­திய வம்­சா­வ­ளி­யினர் பட்­டி­ய­லில் திரு மோக­னும் இணை­கி­றார்.