நோய்க்கான மரபியல் அபாயங்களை இனவாரியாகக் கண்டறியும் புதிய ஆய்வு

சிங்­கப்­பூ­ரின் வெவ்­வேறு இனத்­த­வ­ருக்­குக் குறிப்­பிட்ட சில மருத்­து­வச் சிக்­கல்­களும் மருந்து தொடர்­பான பாதக விளை­வு­களும் ஏற்­ப­டு­வதை மர­பணு ரீதி­யாக அடை­யா­ளம் காணும் புதிய ஆய்வு ஒன்று 10,000 பேரை உள்­ள­டக்­கிய வண்­ணம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

மர­பி­யல் ரீதி­யாக ஒரு­வ­ருக்­குக் குறிப்­பிட்ட ஒரு நோய் ஏற்­படும் அபா­யத்­தைப் பற்றி மேலும் நன்கு புரிந்­து­கொள்ள முடி­யும். அதை­ய­டுத்து இவ்­வாண்டு பிற்­பா­தி­யில் நடப்­புக்கு வர­வுள்ள ‘மேலும் ஆரோக்­கி­ய­மான எஸ்ஜி’ திட்­டத்­தின் கீழ் நோய் தொடர்­பான பாது­காப்­புப் பரா­ம­ரிப்பு உத்­தி­யை­யும் மேம்­ப­டுத்த முடி­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அடுத்­த­டுத்த தலை­மு­றை­யி­ன­ரின் ரத்­தத்­தில் அதி­கக் கொழுப்­பளவு இருக்­கக்­கூ­டிய மர­ப­ணுப் பிரச்­சினை, இந்­தி­யர், மலாய்க்­கா­ர­ரைக் காட்­டி­லும் சீன­ரி­டையே ஏற்­படும் சாத்­தி­யம் அதி­கம் என்று ஆய்வு கண்­ட­றிந்­துள்­ளது.

ஆய்­வில் பங்­கேற்ற சீனர்­களில் இந்த மருத்­து­வப் பிரச்­சினை தொடர்­பான பிறழ்­வு­கள் ஏற்­படும் சாத்­தி­யம் 1.05% என்­றும் இந்­தி­யர்­க­ளி­டையே இது 0.15% என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

மார்­ப­கப் புற்­று­நோய், கருப்பை புற்­று­நோய் போன்­றவை தொடர்­பான பிறழ்­வு­கள் இந்­தி­யர், சீன­ரைக் காட்­டி­லும் மலாய்க்­கா­ரர்­க­ளி­டையே ஏற்­ப­டு­வது அதி­கம் என்­றும் ஆய்வு கூறி­யுள்­ளது. மலாய்க்­கா­ரர்­க­ளி­டையே மார்­பக, கருப்பை புற்­று­நோய் தொடர்­பான பிறழ்­வு­கள் ஏற்­ப­டு­வது 0.25% என்­றும் சீன­ரி­டையே 0.02% என்­றும் இந்­தி­யர்­க­ளி­டையே அறவே இல்லை என்­றும் கண்­ட­றி­யப்­பட்­டது.

ஆய்­வின் முடி­வு­கள் ‘நேச்­சர் கம்­யூ­னி­கே­ஷன்ஸ்’ என்ற அறி­வி­யல் நாளேட்­டில் கடந்த நவம்­ப­ரில் வெளி­யி­டப்­பட்­டது. ஆய்­வில் பங்­கேற்­றோ­ரின் சரா­சரி வயது 47 ஆகும். இதில் 57.3 விழுக்­காட்­டி­னர் மாதர் என்­றும் குறிப்­பி­டப்­பட்­டது.

வலிப்பு நோயைத் தடுப்­ப­தற்­கான மருந்து, ‘கீமோ­தெ­ரபி’ போன்ற சிகிச்­சை­கள் தொடர்­பில் குறிப்­பிட்ட சில மர­பணு உடை­ய­வர்­க­ளுக்­குப் பாதக விளை­வு­கள் ஏற்­ப­டு­வ­தை­யும் ஆய்வு அடை­யா­ளம் கண்­டி­ருந்­தது.

ஆய்­வில் பங்­கேற்ற 26.8 விழுக்­காட்­டி­ன­ரி­டம் மர­பி­யல் ரீதி­யாக இருந்த திரி­பால் குறைந்­தது ஒரு மருந்­தால் பக்க­வி­ளை­வு­கள் ஏற்­படும் அபா­யம் இருந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

குறிப்­பிட்ட ஒரு­வ­ரி­டம் இத்­த­கைய மர­பி­யல் திரிபு இருப்­பதை அறி­வ­தன் மூலம் இத்­த­கைய மருந்­து­களை வழங்­கும்­போது ஏற்­ப­டக்­கூ­டிய பக்­க­வி­ளை­வு­களைத் தணிக்க முடி­யும் என்று ஆய்வை மேற்­கொண்ட ‘பிரிசைஸ்’ தெரி­வித்­தது.

பிள்ளை பெற்­றுக்­கொள்ள திட்­ட­மி­டும் தம்­ப­தி­யர், தங்­களின் இனம் சார்ந்த மர­பி­யல் நோய்­க­ளைப் பற்றி மேலும் புரிந்து­கொள்­வது பயன் தரும் என்று ஆய்­வின் முதன்மை ஆய்­வா­ளர்­களில் ஒரு­வ­ரான டாக்­டர் சௌமியா ஷேகர் ஜமு­வார் குறிப்­பிட்­டார்.

இத்­த­கைய ஆய்வு முக்­கி­யம் என்­றும் உலக மக்­கள்­தொ­கை­யில் ஆசி­யர்­கள் 60 விழுக்­காட்­டி­னர் என்­றும் ‘பிரி­சைஸ்’ நிர்­வாக இயக்­கு­நர் பேட்­ரிக் டான் சுட்­டி­னார். அடுத்த கட்­ட­மாக 100,000 பேருக்கு இந்த ஆய்­வுத் திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­படும்.

இத­னால் அரிய நோய்­களுக்கு ஆளா­வது தொடர்­பான மர­பி­யல் அம்­சங்­களை மட்­டும் ஆய்­வா­ளர்­கள் கண்­டறி­யா­மல் பல­ரி­டையே காணப்­படும் நீரி­ழிவு நோய் போன்­ற­வற்­றைப் பற்­றி­யும் ஆராய்ந்­திட முடி­யும் என்று ஆய்­வின் தலைமை முதன்மை ஆய்­வா­ள­ரான துணைப் பேரா­சி­ரி­யர் லிம் வெங் கோங் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!