பாரபட்சமின்றி கடமையாற்ற அமலாக்க அதிகாரிகளுக்கு அன்வார் இப்ராகிம் உத்தரவு

பாரபட்சமின்றி கடமையாற்ற அமலாக்க அதிகாரிகளுக்கு அன்வார் இப்ராகிம் உத்தரவு

2 mins read

ஊழல் வழக்­கு­கள் தொடர்­பில் பார­பட்­ச­மின்றி அனைத்­துக் கட்­சி­யி­ன­ரை­யும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தும்­படி அம­லாக்க அதி­கா­ரி­க­ளுக்­குத் தாம் உத்­த­ர­விட்­டி­ருப்­ப­தாக மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்ராகிம் கூறி­யி­ருக்­கி­றார்.

தமது கெஅடி­லான் (பிகே­ஆர்) கட்­சி­யும் இதற்கு விதி­வி­லக்­கல்ல என்­றார் அவர். தமது கட்சி உறுப்­பி­னர்­கள் யாரே­னும் குற்­ற­வாளி என நிரூ­பிக்­கப்­பட்­டால் தாம் நட­வ­டிக்கை எடுக்­கத் தயங்­கப்­போ­வ­தில்லை என்­றும் திரு அன்­வார் உறு­தி­ய­ளித்­தார்.

இஸ்­லா­மி­யக் கொள்­கை­க­ளுக்­குப் பாதிப்பு ஏற்­ப­டாது என்று மட்­டுமே தம்­மால் உறு­தி­ய­ளிக்க முடி­யும் என்று மலே­சி­யப் பிர­த­மர் கூறி­னார்.

லஞ்­சம், ஊழல் ஆகி­யவை ஆதா­ர­பூர்­வ­மாக நிரூ­பிக்­கப்­பட்­டா­லும் தாம் மன்­னிப்­புக் கோரப்­போ­வ­தில்லை என்­றார் அவர்.

தாம் விமர்­சிக்­கப்­ப­டு­வது குறித்து அறிந்­தி­ருப்­ப­தா­கக் கூறிய அவர், ஊழல் நட­வ­டிக்­கை­களில் தமக்­குத் தொடர்பு இல்லை என்­பதை சுட்­டி­னார்.

"எதிர்த்­த­ரப்பு தாங்­கள் ஊழ­லற்­ற­வர்­கள் என்று கூறு­கின்­ற­னர். ஆனால் அது பொய் என்­பது நிரூ­பிக்­கப்­பட்­டது.

"பிகே­ஆர் கட்சி 100 விழுக்­காடு தூய்­மை­யா­னது என்று என்­னால் உறு­தி­யா­கக் கூற இய­லாது. எனவே பிகே­ஆர் உள்­பட அனைத்­துக் கட்­சி­யி­னர் மீதும் நட­வ­டிக்கை எடுக்­கும்­படி அம­லாக்க அதி­கா­ரி­க­ளி­டம் கூறி­யி­ருக்­கி­றேன்," என்­றார் பிர­த­மர் அன்­வார்.

பாஸ் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அக­மது ஃபத்லி ஷாரி, ஊழல் வழக்­கில் தொடர்­புள்ள அமைச்­சர்­கள் மீது பிர­த­மர் நட­வ­டிக்கை எடுப்­பாரா என்று கேள்வி எழுப்­பி­யி­ருந்­தார்.

அதற்­குப் பதி­ல­ளிக்­கை­யில் திரு அன்­வார் இவ்­வாறு குறிப்பிட்டார்.

நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளிக்­கும்­வரை அமைச்­சர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்க இய­லாது என்­றார் அவர்.

அம்னோ தலை­வ­ரும் மலே­சி­யத் துணைப் பிர­த­ம­ரு­மான அக­மது ஸாகித் ஹமிடி மீதான ஊழல் வழக்­கு­கள் குறித்­தும் அவ­ரி­டம் கேட்­கப்­பட்­டது.

அதற்­குப் பதி­ல­ளித்த திரு அன்­வார், வழக்கை நீதி­மன்­றம் விசா­ரித்­து­வ­ரும் நிலை­யில் தாம் அதில் தலை­யிட விரும்­ப­வில்லை என்­றும் கூறி­னார்.

திரு ஸாகித்தை துணைப் பிர­த­ம­ரா­கத் தேர்ந்­தெ­டுத்­த­தன் தொடர்­பில் திரு அன்­வார் குறை­கூ­றல்­களை எதிர்­நோக்­கு­கி­றார்.

இருப்­பி­னும், திரு ஸாகித் தமது அர­சாங்­கத்­தின் கொள்­கை­க­ளைப் பின்­பற்­று­வ­தாக மலே­சி­யப் பிர­த­மர் வலி­யு­றுத்­தி­னார்.

"திரு ஸாகித்தின் துறை­யின்­கீழ் செயல்­படும் சில அர­சாங்­கத் தொடர்­பு­டைய நிறு­வ­னங்­கள் ஏலக்­குத்­தகை விடுக்காமலே உட­ன­டி­யாக வேலை தொடங்க அனு­மதி கேட்­டிருந்தன. ஆனால் திரு ஸாகித், அரசாங்கக் கொள்கைகளுக்கு ஏற்ப, முறைப் ­படி ஏலக் குத்­தகை விடப்­ப­ட­வேண்­டும் என்று அந்­நி­று­வ­னங்­களி­டம் உறு­தி­யா­கத் தெரி­வித்­த­தா­கத் திரு அன்­வார் கூறி­னார்.