முன்னாள் மலேசியப் பிரதமரும் பெர்சத்து கட்சியின் தலைவருமான முகைதீன் யாசினுக்குச் சோதனை மேல் சோதனை ஏற்பட்டு வருகிறது. திரு முகைதீனுடன் தொடர்பில் இருக்கும் மேலும் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கொவிட்-19 நெருக்கடி
நிலையை எதிர்கொள்ள திரு முகைதீன் தொடங்கிவைத்த திட்டம் தொடர்பாக 4.1 மில்லியன் ரிங்கிட் (S$1.2 மில்லியன்) லஞ்சம் வாங்கியதாக பெர்சத்து கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆதம் ரட்லான் ஆதம் முகம்மது மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு நிறுவனம் ஒன்றிட
மிருந்து 500,000 ரிங்கிட் லஞ்சம் வாங்கியதாகவும் அவர் மீது ஏற்கெனவே குற்றம் சுமத்தப்
பட்டுள்ளது.
இந்நிலையில், திரு முகை
தீனுடன் தொடர்புடைய வர்த்தகரான 65 வயது டியோ வீ செங் மீதும் ஊழல் குற்றச்சாட்டு பதிவானது. 12.8 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் வாங்கியதாக ஜோகூர் நீதிமன்றத்தில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
கடந்த ஆண்டு அம்னோ தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடிக்கு எதிராக வழக்கு விசாரணையின்போது திரு டியோ, திரு முகைதீனின் மிக நெருங்கிய நண்பர் என சாட்சிகள் பலர் சாட்சியம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
திரு ஸாஹிட்டுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவராக இருந்த வான் சைஃபுல் வான் ஜான் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கொவிட்-19 நெருக்கடிநிலையால் பாதிப்
படைந்த பூமிபுத்திரர்களுக்கு உதவத் தொடங்கிய ஜனா விபாவா திட்டத்தின்கீழ் நிறு
வனங்கள் ஒப்பந்தம் பெற அவற்றிடமிருந்து 6.9 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
குற்றம் சுமத்தப்பட்டதை அடுத்து, பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் பதவியிலிருந்து திரு சைஃபுல்
விலகியுள்ளார்.
அவரது பதவி விலகலை ஏற்றுக்கொள்வதாக திரு முகைதீன் நேற்று தெரிவித்தார்.
திரு சைஃபுதீனின் பதவி விலகலை ஏற்றுக்கொள்வதால் அவர் குற்றவாளியாகிவிடமாட்டார் என்று திரு முகைதீன் கூறினார். மாறாக, அவராகவே முன்வந்து பதவியிலிருந்து விலகுவது பாராட்டுக்குரியது என்றார் அவர்.
தமது கட்சியுடன் தொடர்பானவர்களை திரு அன்வார் தலைமையிலான அரசாங்கம் குறிவைத்து குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காகச் சுமத்துவது நியாயமற்றது என்று திரு முகைதீன் அதிருப்திக் குரல் எழுப்பிஉள்ளார். எதிர்க்கட்சியினருக்குக் களங்கம் விளைவிக்கவே மலேசிய அரசாங்கம் இத்தைய நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியிருப்பதாக அவர் கூறினார். அரசாங்கத் தலைவர்கள் பலர் ஏற்கெனவே ஊழல் குற்றச்சாட்டுகள் எதிர்நோக்குவதை அவர் சுட்டினார்.
ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் மூவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

