குழந்தைப் பிறப்பு விகிதத்தைப் பொறுத்தவரை, கடந்த பல ஆண்டுகளாக மற்ற நாடுகளைவிட தென்கொரியாவின் விகிதம் ஆகக் குறைவாக இருந்து வருகிறது. இந்நிலையில், அதன் குழந்தைப் பிறப்பு விகிதம் மேலும் சரிந்துள்ளது.
மக்கள்தொகை சீராக இருக்க ஒவ்வொரு தென்கொரியப் பெண்ணும் இத்தனை குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் இந்த விதிகம் கடந்த ஆண்டு 0.78ஆக குறைந்ததாக அந்நாட்டின் புள்ளி விவரத்துறை நேற்று அறிக்கை வெளியிட்டது.
இந்த விகிதம் 2021ஆம் ஆண்டில் 0.81ஆக இருந்தது.
குறைந்த குழந்தைப் பிறப்பு விகிதம் காரணமாக தென்கொரியப் பொருளியலுக்கு நீண்டகால அபாயங்கள் ஏற்படக்கூடும். ஊழியர் அணி வெகு
வாகக் குறைந்து பொருளியல் வளர்ச்சி, வீரியம் கடுமையாகப் பாதிப்படையக்கூடும். அதுமட்டுமல்லாது, மூப்படையும் சமூகமாக தென்கொரியா இருப்பதால் மூத்தோருக்கு அதிக நிதி உதவி செய்ய வேண்டிய தேவை அந்நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தென்கொரியாவுக்கு அதிக செலவு ஏற்படு
வதாகக் கூறப்படுகிறது. இந்த நிதியை வர்த்தகங்களை மேம்
படுத்துவதற்கும் ஆய்வுகளை நடத்துவதற்கும் பயன்படுத்தலாம் என்று பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்து வரும் ஊழியரணியால் தென்கொரியாவின் உத்தேசப் பொருளியல் வளர்ச்சி விகிதம் சரிந்திருப்ப
தாகத் தெரிவிக்கப்பட்டது.
தென்கொரியாவில் வேலை செய்யும் வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் 2020ஆம் ஆண்டில் 37.3 மில்லியனாகப் பதிவாகி உச்சத்தை எட்டியது. ஆனால் இந்த விகிதம் 2070ஆம் ஆண்டுக்குள் ஏறத்தாழ 50 விழுக்காடு குறையக்கூடும் என்று தென்கொரிய அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் தென்கொரியாவில் 260,600 குழந்தைகள் பிறந்தன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 249,000ஆக குறைந்தது.
இது தென்கொரியாவின் மக்கள்தொகையில் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவு.
மாறாக, கடந்த ஆண்டு தென்கொரியாவில் ஏறத்தாழ 373,000 பேர் மரணம் அடைந்தனர்.
இந்நிலையில், 2100ஆம் ஆண்டுக்குள் தென்கொரிய மக்கள்தொகை 53 விழுக்காடு குறைந்து 24 மில்லியனாகப் பதிவாகக்
கூடும் என்று முன்னுரைக்கப்
பட்டுள்ளது.
கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு தென்கொரியர்களை அந்நாட்டு அரசாங்கம் ஊக்குவிக்கிறது.