முதலீட்டுத் திட்டத்தின்கீழ் 200 பேருக்கு நிரந்தரவாசம்

முதலீட்டுத் திட்டத்தின்கீழ் 200 பேருக்கு நிரந்தரவாசம்

3 mins read

சிங்­கப்­பூ­ரில் உலகளாவிய முத­லீட்­டா­ளர் திட்­டத்­தின் (ஜிஐபி) வாயி­லாக மூன்­றாண்­டு­களில் கிட்­டத்­தட்ட 200 பேர் நிரந்­த­ர­வா­சத் தகுதி பெற்­றி­ருப்­ப­தாக வர்த்­தக, தொழில் துணை அமைச்­சர் லோ யென் லிங் தெரி­வித்து உள்­ளார்.

நாடா­ளு­மன்­றத்­தில் இயோ சூ காங் தனித்­தொ­குதி உறுப்­பி­னர் யிப் ஹான் வெங் எழுப்­பிய வினா­வுக்­குப் பதி­ல­ளிக்­கை­யில் அவர் இந்த விவ­ரத்­தைத் தெரி­வித்­தார்.

கடந்த மூன்று ஆண்­டு­களில் இந்­தத் திட்­டத்­தைப் பயன்­ப­டுத்தி எத்­தனை பேர் நிரந்­த­ர­வா­சத்­ தகுதி பெற்­ற­னர் என்று திரு யிப் கேட்­டி­ருந்­தார். 2020ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை­ கிட்­டத்­தட்ட 200 பேர் தகுதி பெற்­றி­ருந்­த­தாக திரு­வாட்டி லோ கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் தொழி­லைத் தொடங்­க­வும் இங்­குள்ள வர்த்­த­கத்தை விரி­வு­ப­டுத்­த­வும் குறைந்­த­பட்­சம் $2.5 மில்­லி­யன் முத­லீடு செய்­யும் வெளி­நாட்­டி­னர் உலகளாவிய முத­லீட்­டா­ளர் திட்­டத்­தின்­கீழ் நிரந்­த­ர

­வா­சத் தகுதி பெற விண்­ணப்­பிக்­க­லாம்.

கடந்த 2004ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்ட இந்­தத் திட்­டத்தை பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கம் நிர்­வ­கித்து வரு­கிறது.

விண்­ணப்­பிக்­கத் தகுதி உடை­யோர் குறைந்­த­பட்­சம் மூன்­றாண்­டு­கள் தொழில்­மு­னைவு மற்­றும் வர்த்­தக அனு­ப­வங்­க­ளைப் பெற்­றி­ருத்­தல் அவ­சி­யம். அத்­து­டன், இங்கு அவர்­கள் நிறு­வ­னம் ஒன்றை நடத்தி வர­வேண்­டும். விண்­ணப்­பிக்­கும் ஆண்­டுக்கு முந்­தைய ஆண்­டில் குறைந்­த­பட்­சம் $200 மில்­லி­யன் மதிப்­பி­லான வரு­டாந்­திர வரு­மா­னம் பெற்­றி­ருக்கவேண்­டும்.

"இந்­தத் திட்­டம் 2011ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை ஏறக்­கு­றைய $5.46 பில்­லி­யன் மதிப்­பி­லான முத­லீ­டு­களை ஈர்த்­துள்­ளது. அதன்மூலம் இங்கு 24,000க்கும் மேற்­பட்ட வேலை­கள் உரு­வாக்­கப்­பட்டு உள்­ளன," என்­றார் திரு­வாட்டி லோ.

மேலும், கடந்த ஆண்டு அக்­டோ­பர் மாதம் ஜிஐபி முத­லீட்­டா­ளர்­கள் $1.62 பில்­லி­யன் முத­லீ­டு­களை இங்கு அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நிதித் திட்­டங்­களில் முத­லீடு செய்­த­தா­க­வும் அவர் கூறி­னார். அந்­தத் திட்­டங்­க­ளின் நிர்­வா­கி­கள் இந்த முத­லீட்­டில் $1.41 பில்­லி­யனை நடப்பு முத­லீட்­டுத் திட்­டங்­க­ளுக்கு வழங்­கி­னர்.

இதில் கிட்­டத்­தட்ட 65.6 விழுக்­காடு அல்­லது $930 மில்­லி­யன் தொகை சிங்­கப்­பூ­ரைத் தள­மா­கக் கொண்ட நிறு­வ­னங்­களில் முத­லீடு செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் துணை அமைச்சர் தெரி­வித்­தார்.

பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் முத­லீட்டு ஊக்­கு­விப்­புக்­கும் பங்­க­ளிக்­கக் கூடிய, வச­தி­ப­டைத்த தனிப்­பட்­ட­வர்­களை ஈர்க்க அமெ­ரிக்கா, பிரிட்­டன், கனடா, ஆஸ்­தி­ரே­லியா போன்ற உலக நாடு­கள் 'கோல்­டன் விசா' திட்­டத்தை செயல்­

ப­டுத்துகின்­றன. அந்த நாடு­க­ளின் வரி­சை­ யில் சிங்­கப்­பூ­ரும் இணைந்­துள்­ளது.

ஜிஐபி திட்ட முத­லீட்­டா­ளர்­கள் இங்கு வேரூன்­றப்­ப­டு­வ­தை­யும் நாட்­டின் பொரு­ளி­ய­லுக்­கும் வேலை உரு­வாக்­கத்­திற்­கும் அவர்­கள் பங்­க­ளிப்­ப­தை­யும் உறுதி செய்ய பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கம் அவ்­வப்­போது ஆய்­வு­களை மேற்­கொண்டு வரு­வ­தாக மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

நிரந்­த­ர­வா­சத் தகு­திக்கு விண்­ணப்­பம் செய்­வோர் அவர்­கள் முத­லீடு செய்­துள்ள சிங்­கப்­பூர் நிறு­வ­னம் தொடர்­பான ஆவ­ணங்­க­ளைச் சமர்ப்­பிக்க வேண்­டும் என்­றும் அவற்றை பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கம் பரி­சீ­லித்து நிறு­வ­னத்­தின் வர்த்­தக நட­வ­டிக்­கை­களை நேரில் கண்­ட­றி­யும் என்­றும் திரு­வாட்டி லோ கூறி­னார்.

இந்­தத் திட்­டத்­தின்­கீழ் நிரந்­த­ர­வா­சத் தகுதி பெற்­றவர்களில் எத்­தனை பேர் குடி­யுரிமை பெற்­ற­னர் என்று எதிர்க்­கட்­சித் தலை­வர் பிரித்­தம் சிங் வின­வி­னார்.

அதற்­குப் பதி­ல­ளித்த திரு­வாட்டி லோ, மிக மிகக் குறை­வான விழுக்­காடு அது என்­றார். மேலும், ஒவ்­வோர் ஆண்­டும் அனு­ம­திக்­கப்­படும் மொத்த நிரந்­த­ர­வா­சி­

க­ளின் எண்­ணிக்­கை­யில் ஜிஐபி முத­லீட்­டா­ளர்­க­ளின் விகி­தம் 1 விழுக்­காட்­டுக்­கும் குறைவு என்­றும் அவர் கூறி­னார்.

மேலும் நாடாளுமன்றச் செய்திகள்-பக்கம் 2