மலேசிய பட்ஜெட் பெரியதாக இருக்கும் என கணிப்பு

மலேசிய பட்ஜெட் பெரியதாக இருக்கும் என கணிப்பு

2 mins read

மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் பெரிய அள­வி­லான தேசிய வர­வு­செ­ல­வுத் திட்­டத்தை இன்று தாக்­கல் செய்­வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

முந்­திய அர­சாங்­கம் கடந்த அக்­டோ­பர் மாதம் உத்­தே­சித்­தி­ருந்த 373.2 பில்­லி­யன் ரிங்­கிட் (S$112 பில்­லி­யன்) திட்­டத்­தைக் காட்­டி­லும் அதிக மதிப்­பி­லான வர­வு­செ­ல­வுத் திட்­ட­மாக அது அமை­யும் என்று கணிக்­கப்­பட்டு உள்­ளது.

மெது­வ­டைந்து வரும் நாட்­டின் வளர்ச்­சி­யை­யும் உயர்ந்து வரும் வாழ்க்­கைச் செல­வி­னத்­தை­யும் கருத்­தில் கொண்டு புதிய வர­வு­செ­ல­வுத் திட்­டம் வரை­யப்­ப­ட­லாம்.

மேலும் வரும் ஜூலை மாதம் ஆறு மாநி­லங்­களில் நடை­பெற இருக்­கும் சட்­ட­மன்­றத் தேர்­த­லை­யும் இந்த வர­வு­ செ­ல­வுத் திட்­டம் கருத்­தில் கொள்­ளும். சிலாங்­கூர், நெகிரி செம்­பி­லான், பினாங்கு, கெடா, கிளந்­தான், திரங்­கானு ஆகிய மாநி­லங்­கள் அவை.

மலே­சி­யா­வின் மொத்த வாக்­கா­ளர்­களில் கிட்­டத்­தட்ட பாதிப் பேர் இந்த ஆறு மாநி­லங்­களில் உள்­ள­னர். இதில் மூன்று மாநி­லங்­கள் திரு அன்­வார் தலை­மை­யி­லான பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணி­யி­ட­மும் இதர மூன்று மாநி­லங்­கள் பெரிக்­காத்­தான் நேஷ­ன­லின் கூட்­ட­ணி­யில் உள்ள பாஸ் கட்சி வச­மும் உள்­ளன. பிர­த­மர் அன்­வா­ரின் ஒற்­றுமை அர­சாங்­கம் இந்த மக்­க­ளின் மன­நி­றை­வைப் பெறு­வது அவ­சி­ய­மா­கிறது.

எதிர்­பார்க்­கப்­பட்­ட­தைக் காட்­டி­லும் கடந்த ஆண்டு நாட்­டின் பொரு­ளி­யல் மீட்­சி­ய­டைந்­த­தால் அதன் மூலம் கிடைத்­தி­ருக்­கும் கூடு­தல் வரு­வா­யைக் கொண்டு மக்­க­ளுக்­கான அதிக செல­வி­னங்­களை நிதி அமைச்­ச­ரு­மான திரு அன்­வார் சேர்க்­கக்­கூ­டும்.

நாட்­டின் வளர்ச்சி இவ்­வாண்டு 4 விழுக்­காட்­டுக்­கும் 5 விழுக்­காட்­டுக்­கும் இடைப்­பட்ட அள­வில் மெது­வாக இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­படும் அதே­வேளையில் வரு­வாய் தொடர்ந்து ஏற்­றம் காணும் என்று கணிக்­கப்­பட்டு உள்­ளது. அத­னால் 2023 வர­வு­செ­ல­வுத் திட்­டம் பெரிய­தாக இருக்­க­லாம் எனற தக­வல் வெளி­யாகி உள்­ளது.