எடப்பாடி பழனிசாமி வசமானது அதிமுக; ஒற்றைத் தலைமை உறுதியானதால் கொண்டாட்டம்

எடப்பாடி பழனிசாமி வசமானது அதிமுக; ஒற்றைத் தலைமை உறுதியானதால் கொண்டாட்டம்

2 mins read
5259e7a3-0341-48d5-a896-d4e8451872a1
-

ஈரோடு கிழக்கு சட்­ட­மன்­றத் தொகுதி இடைத்­தேர்­தல் நடை­பெற உள்ள நிலை­யில் எடப்­பாடி பழ­னி­சாமி வசம் அதி­முக சென்­றுள்­ளது.

அதி­மு­க­வின் இடைக்­கா­லப் பொதுச் செய­லா­ள­ரா­கத் தேர்ந்து எடுக்­கப்­பட்­டது செல்­லும் என்று உச்ச நீதி­மன்­றம் நேற்று தீர்ப்பு அளித்­த­தைத் தொடர்ந்து அந்­தக் கட்­சி­யில் நீடித்து வந்த இரட்­டைத் தலைமை விவ­கா­ரம் ஒரு முடி­வுக்கு வந்து உள்­ளது.

ஈரோடு கிழக்கு இடைத்­தேர்­த­லில் எடப்­பாடி பழ­னி­சா­மி­யின் வேட்­பா­ள­ருக்கு தேர்­தல் ஆணை­யம் இரட்டை இலைச் சின்­னத்தை ஒதுக்­கி­ய­தற்­குப் பிறகு அவ­ருக்­குக் கிடைத்து இருக்­கும் இரண்­டா­வது வெற்­றி­யாக நேற்­றைய தீர்ப்பு கரு­தப்­ப­டு­கிறது.

அத்­து­டன், அவ­ருக்கு எதி­ராக ஓ.பன்­னீர்­செல்­வம் தாக்­கல் செய்த மனுக்­களை உச்ச நீதி­மன்­றம் தள்­ளு­படி செய்­து­விட்­டது.

கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி எடப்­பாடி பழ­னி­சாமி தலை­மை­யில் நடந்த பொதுக்­குழு செல்­லுபடியாகும் என சென்னை உயர் நீதி­மன்­றம் அளித்த உத்­த­ரவை எதிர்த்து ஓ.பன்­னீர்­செல்­வம் உச்ச நீதி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீடு செய்த வழக்­கில் நேற்று தீர்ப்பு அளிக்­கப்­பட்­டது.

முன்­ன­தாக, இந்­தத் தீர்ப்பை அடிப்­ப­டை­யா­கக் கொண்­டு­தான் அதி­மு­க­வின் அர­சி­யல் எதிர்­கா­லம் அமை­யும் என்­ப­தால் இந்­தத் தீர்ப்பு மிக­வும் முக்­கி­ய­மான ஒன்­றாக எதிர்­பார்க்­கப்­பட்­டது.

தற்­போது வழக்­கப்­பட்டு உள்ள தீர்ப்­பின் மூலம் எடப்­பாடி பழ­னி­சா­மி­தான் அதி­மு­க­வின் தலை­மைப் பொறுப்­புக்­குத் தகு­தி­யா­ன­வர் என்ற விவ­ரம் தெரிய வந்­துள்­ளது.

தீர்ப்பு வெளி­யா­ன­தும் சென்னை ராயப்­பேட்டை அதி­முக தலைமை அலு­வ­ல­கத்­தில் அதி­மு­க­வி­னர் பட்­டாசு வெடித்­தும் இனிப்பு வழங்­கி­யும் கொண்­டா­டி­னார்­கள். சில தொண்­டர்­கள் பழ­னி­சா­மி­யின் படத்­திற்கு பாலா­பி­ஷே­கம் செய்து வாழ்த்­தி­னர்.

"தர்­மம் வென்­றுள்­ளது. எம்­ஜி­ஆர், ஜெய­ல­லி­தா­வின் ஆன்மா சாந்தி அடைந்­தது," என்று பழ­னி­ சா­மி­யின் ஆத­ர­வா­ளர்­கள் தெரி­வித்­த­னர். இனி எடப்­பாடி தலை­மை­யில் அதி­முக வீர­நடை போடும். இந்தத் தீர்ப்பு அதி­மு­க­விற்கு ஊக்­கம் தரு­ம். பொது­மக்­கள் பார்­வை­யில் இயக்­கம் ஒன்­று­பட்­டுள்­ளது," என்­றும் அவர்­கள் கூறி­னர்.

அதி­மு­க­வுக்­கும் ஓ.பன்­னீர்­செல்­வத்­துக்­கும் சம்­பந்­தம் இல்லை என்­பதை தீர்ப்பு காட்­டி­யுள்­ள­தாக முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மார் கூறி­னார்.

எடப்­பாடி பழ­னி­சாமி கூறு­கை­யில், "ஒரு சில­ரைத் தவிர யார் வந்­தா­லும் அதி­மு­க­வில் சேர்த்­துக்­கொள்­வோம். அதி­முக நிர்­வா­கி­கள் கூடி விரை­வில் பொதுச்­செ­ய­லா­ளர் தேர்வு நடக்­கும். ஒற்றைத் தலைமை விவ­கா­ரத்­தில் ஒன்­றரை கோடி அதி­முக தொண்­டர்­க­ளின் எண்­ணம் நிறை­வே­றி­யுள்­ளது," என்­றார்.

எதிர்த்­த­ரப்­பி­ன­ரும் பழ­னி­சா­மியை வாழ்த்­தி­னர். விடு­தலை சிறுத்­தை­கள் கட்­சி­யின் தலை­வர் தொல் திரு­மா­வ­ள­வன் தமது டுவிட்­டர் பதி­வில், "அடிப்­ப­டைத் தொண்­ட­னாக அர­சி­யல் வாழ்­வைத் தொடங்­கிய எடப்­பாடி பழ­னி­சாமி இன்று அதி­மு­க­வின் பொதுச்­செ­ய­லா­ள­ராக உறு­திப்­பட்­டி­ருப்­பது அவ­ரது வலு­வான ஆளு­மைக்­குச் சான்­றாக உள்­ளது," என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

தீர்ப்பு வெளி­யா­வ­தற்கு முன் பேசிய ஓ.பன்­னீர்­செல்­வம், "தீர்ப்பு எவ்­வாறு இருந்­தா­லும் தொண்­டர்­கள் என்­பக்­கம் எப்­போ­தும் இருப்­பார்­கள். தீர்ப்பு பாத­க­மாக வந்­தால் சட்ட வல்­லு­நர்­க­ளு­டன் ஆலோ­சித்து அடுத்­த­கட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­று கூறினார்.