உக்ரேனில் சண்டை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறது சீனா

உக்ரேனில் சண்டை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறது சீனா

2 mins read

ரஷ்­யா­விற்­கும் உக்­ரே­னுக்­கும் இடை­யி­லான போரை நிறுத்­தும்­படி சீனா அழைப்பு விடுத்­துள்­ளது. அதன் தொடர்­பி­லான 12 அம்­சப் பரிந்­து­ரையை சீன வெளி­யு­றவு அமைச்சு நேற்று வெளி­யிட்­டி­ருக்­கிறது.

பகை­மையை முடி­வுக்­கொண்டு வரு­தல், அணு உலை­க­ளைப் பாது­காத்­தல், அமை­திப் பேச்சை மீண்­டும் தொடங்­கு­தல், ஒரு­த­லைப் பட்­ச­மான தடை­களை அகற்­று­தல் போன்­றவை பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளன.

ஆனால் உக்­ரே­னுக்கு ஆத­ரவு தெரி­விக்­கும் தரப்­பி­னர் இந்­தப் பரிந்­து­ரை­களை ஏற்­றுக்­கொள்­வது கடி­னம் என்றே கரு­தப்­ப­டு­கிறது. ரஷ்­யா­வும் உக்­ரே­னும் பிரச்­சி­னைக்­குத் தீர்­வு­காண்­பது தொடர்­பில் இணக்­கம்­காண அனைத்­துத் தரப்­பி­ன­ரும் ஒத்­து­ழைக்க வேண்­டும் என்று சீனா கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

கூடிய விரை­வில் நேர­டிப் பேச்­சு­வார்த்­தை­யைத் தொடங்­கி­னால் பதற்­றம் தணி­ய­வும் அதைத் தொடர்ந்து விரி­வான சண்டை நிறுத்­தம் ஏற்­ப­ட­வும் அது வழி­வ­குக்­கும் என்று அப்­ப­ரிந்­து­ரை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சீனா­வின் வெளி­யு­ற­வுக் கொள்கை நிலைப்­பாட்டை அந்­தப் பரிந்­து­ரை­யில் பெய்­ஜிங் பட்­டி­ய­லிட்­டுள்­ளது. ஆனால் உக்­ரே­னின் கிழக்கு வட்­டா­ரத்­தில் ரஷ்யா கைப்­பற்­றிய நிலப்­ப­குதி குறித்து அதில் பேசப்­ப­ட­வில்லை.

உக்­ரே­னிய எல்­லை­களில் இருந்து ரஷ்யா பின்­வாங்­கும்­வரை போரி­டப்­போ­வ­தாக உக்­ரே­னிய அதி­பர் வொலோ­டி­மிர் ஸெலன்ஸ்­கி­யின் அர­சாங்­கம் சூளு­ரைத்­துள்­ளது.

மாஸ்கோ அதன் தாக்­கு­தல்­களை நிறுத்­து­வ­தற்­கான அறி­குறி ஏதும் தென்­ப­ட­வில்லை.

பல்­லா­யி­ரக் கணக்­கா­னோர் பலி­யான இந்­தப் போரில் மில்­லி­யன் கணக்­கா­னோர் வீடு­களை இழந்து தவிக்­கின்­ற­னர்.

போரை நிறுத்­து­வது தொடர்­பில் சீனா நடு­நி­லை­யோடு செயல்­படும் என்று உக்­ரே­னுக்கோ அதை ஆத­ரிக்­கும் நாடு­க­ளுக்கோ நம்­பிக்கை இல்லை.

நேற்று முன்­தி­னம் போரை முடி­வுக்­குக் கொண்­டு­வ­ரு­வ­தற்­கான ஐக்­கிய நாட்­டுத் தீர்­மா­னம் மீதான வாக்­கெ­டுப்­பில் சீனா கலந்­து­கொள்­ள­வில்லை.

அமை­திக்­குப் பரிந்­து­ரைக்­கும் சீனா­வின் திட்­டங்­களை ஐரோப்­பி­யத் தலை­வர்­கள் பல­ரும் சந்­தே­கக் கண்­கொண்டே பார்க்­கின்­ற­னர்.

ரஷ்­யா­விற்கு சீனா ஆயு­தம் வழங்­கக்­கூ­டும் என்று அமெ­ரிக்கா கவலை தெரி­வித்­தது. அதனை நிரா­க­ரித்த சீனா வாஷிங்­டன் உக்­ரே­னுக்கு ஆயு­தம் வழங்­கு­வ­தா­கக் கூறி­யது.

சீன அதி­பர் ஸி ஜின்­பிங், இந்­தப் போர் தொடங்­கி­ய­தில் இருந்து இது­வரை உக்­ரே­னிய அதி­பர் ஸெலன்ஸ்­கி­யு­டன் பேச்சு நடத்­த­வில்லை.

இருப்­பி­னும் ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டி­னு­டன் நான்கு முறை அவர் பேச்சு நடத்­தி­னார். சீனா­வின் அமை­தித் திட்­டத்தை மதிப்­பி­டு­வ­தற்கு முன்­பாக சீன அதி­ப­ரைச் சந்­தித்­துப் பேச விரும்பு­வதாக உக்­ரே­னிய அதி­பர் தெரி­வித்­துள்­ளார்.