சீனாவின் பரிந்துரை; ஸெலென்ஸ்கி ஆவல்

சீனாவின் பரிந்துரை; ஸெலென்ஸ்கி ஆவல்

2 mins read

ரஷ்யா-உக்­ரேன் போரை முடி­வுக்­குக் கொண்டு வரும் வகை­யில் அர­சி­யல் ரீதி­யான அமை­தித் திட்­டம் ஒன்றை வகுத்து வெளி­யி­டப்­போ­வ­தாக சீனா உறுதி அளித்­தி­ருந்­தது.

ஆனால் சீனா­வின் இந்த அமை­தித் திட்­டம் இன்­னும் தம்மை வந்­த­டை­ய­வில்லை என்று உக்­ரே­னிய அதி­பர் வொலோ­டி­மிர் ஸெலென்ஸ்கி தெரி­வித்­துள்­ளார்.

சீனா­வின் பரிந்­து­ரை­க­ளைப் பற்றி அறிந்­து­கொள்ள அந்­

நாட்­டுத் தலை­வர்­க­ளு­டன் சந்­திப்பு நடத்த விரும்­பு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

அவர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டிய பிறகே சீனா­வின் பரிந்­து­ரை­கள் குறித்து மதிப்­பீடு செய்­ய முடியும் என அதி­பர் ஸெலென்ஸ்கி தெரி­வித்­தார்.

ரஷ்யா-உக்­ரேன் இடை

­யி­லான போரில் யார் பக்­க­மும் சாயா­மல் நடு­நி­லை­யு­டன் இருப்­ப­தாக சீனா கூறி வரு­கிறது.

ஆனால் தனது உத்­தி­பூர்வ நட்பு நாடான ரஷ்­யா­வு­ட­ன் சீனா நெருங்­கிய உற­வைத் தொடர்­கிறது.

"உக்­ரேன் பற்றி சீனா பேசத் தொடங்­கி­யுள்­ளது. போரை முடி­வுக்­குக் கொண்டு வரு­வது குறித்­தும் அது சூச­க­மா­கக் கூறி வரு­கிறது. இது வர­வேற்­கத்­தக்­கது.

"இருப்­பி­னும், சீனா முன்­வைக்­கும் பரிந்­து­ரை­களை ஆராய்ந்த பிறகே அவற்றை ஏற்­பதா, மறுப்பதா என்­பது குறித்து முடி­வெ­டுப்­போம்.

"சீனத் தலை­வர்­க­ளைச் சந்­தித்து அவர்­க­ளு­டன் கலந்­து­ரை­யாட விரும்­பு­கி­றோம்," என்று திரு ஸெலென்ஸ்கி கூறி­னார்.

இதற்­கி­டையே, ரஷ்யா-உக்­ரேன் போர் தொடங்கி ஓராண்டு ஆகி­யுள்ள நிலை­யில், திரு ஸெலென்ஸ்­கி­யு­டன் ஜி7 நாடு­

க­ளின் தலை­வர்­கள் மெய்­நி­கர் உச்­ச­நிலை மாநாடு வாயி­லா­க நேற்று முன்­தி­னம் சந்­தித்­துப் பேசி­னர்.

கலந்­து­ரையாடலை ஜி7 நாடு­

க­ளுக்­குத் தற்­போது தலை­மை­தாங்­கும் ஜப்­பான் வழி­ந­டத்­தி­யது.

கலந்­து­ரை­யா­ட­லுக்கு முன்பு உக்­ரே­னுக்கு உதவி செய்­யும் வகை­யில் கூடு­த­லாக 2 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் (S$2.7 பில்­லி­யன்) பெறு­மா­ன­முள்ள ஆயு­தங்­களை அனுப்­பி­வைக்க இருப்­ப­தாக அமெ­ரிக்கா உறுதி அளித்­தது.

அது­மட்­டு­மல்­லாது, ரஷ்­யா­வுக்கு எதி­ரான தடை­களை வலுப்­ப­டுத்த தேவை­யான நட­

வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும் என்­றும் அது கூறி­யது. ரஷ்­யா­வின் போர் ஆற்­றலை முடக்க அதற்கு எதி­ரா­கப் புதிய தடை­க­ளை­யும் அது அறி­வித்­தது.

ரஷ்­யா­வுக்கு ராணுவ உதவி வழங்க வேண்­டாம் என்று மற்ற நாடு­க­ளுக்கு ஜி7 நாடு­கள் மீண்­டும் அழைப்பு விடுத்­தி­ருப்­ப­தாக ஜப்­பா­னி­யப் பிர­த­மர் ஃபுமியோ கிஷிடா கூறி­னார்.

உக்­ரே­னுக்கு எதி­ரான போரில் ஈரா­னி­ட­மி­ருந்து வாங்­கிய ஆளில்லா வானூர்­தி­களை ரஷ்யா பயன்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.