நாள்பட்ட நோய் உள்ளோர் முன்கூட்டியே பதிவு செய்யலாம்

நாள்பட்ட நோய் உள்ளோர் முன்கூட்டியே பதிவு செய்யலாம்

2 mins read
0ea8f3bf-42a7-4e30-825d-10212c37181b
-

நாள்­பட்ட நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்­டோர் முன்­கூட்­டியே ஹெல்­தி­யர் எஸ்ஜி எனும் மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டத்தில் சேர­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தத் திட்­டம் மூலம் சிங்­கப்­பூ­ரர்­கள், சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­கள் ஆகி­யோர் தங்­கள் ஆரோக்­கி­யத்­தைப் பேணிக் காக்­க­வும் நன்கு நிர்­வ­கித்­துக்­கொள்­ள­வும் தனி­யார் மருத்­து­வர் ஒரு­வ­ரைத் தேர்ந்­தெ­டுத்­துக்­கொள்­ள­லாம்.

தேசிய அள­வி­லான இத்­திட்­டம் கடந்த ஆண்டு அறி­விக்­கப்­பட்­டது.

நாள்­பட்ட நோய் உள்ள 40 வயது அல்­லது அதற்­கும் மேற்­பட்­டோ­ருக்­காக திட்­டத்­தில் முன்­கூட்­டியே பதிவு செய்­து­கொள்­ளும் பயிற்சி வரும் மே மாதம் முதல் நடத்­தப்­படும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று தெரி­வித்­தார். மற்­ற­வர்­க­ளுக்கு ஹெல்­தி­யர்­எஸ்ஜி திட்­டம் ஜூலை மாதம் தொடங்­கு­கிறது. 60 வயது அல்­லது அதற்­கும் மேற்­பட்­டோர் முத­லில் பதிவு செய்­து­கொள்­ள­லாம். பிறகு 40 வய­தி­லி­ருந்து 59 வய­து வரையிலானோருக்கு இத்திட்டம் அடுத்த இரண்டு ஆண்­டு­களில் நீட்­டிக்­கப்­படும்.

தங்­க­ளுக்கு இருக்­கும் நாள்­பட்ட நோய்­க­ளைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்க குறிப்­பிட்ட ஒரே தனி­யார் மருத்­து­வரை அடிக்­கடி பார்ப்­ப­வர்­கள் ஹெல்­தி­யர்­எஸ்ஜி திட்­டத்­தில் முன்­கூட்­டியே பதிவு செய்­து­கொள்­ள­லாம் என்­றும் திட்­டத்­தில் பங்­கெ­டுக்க அந்த மருத்­து­வர் பதிவு செய்­தி­ருக்க வேண்­டும் என்­றும் அமைச்­சர் ஓங் தெரி­வித்­தார்.

நோய் வரும் முன் காக்­கும் அணு­கு­மு­றைக்கு சிங்­கப்­பூ­ரின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத்­துறை மாறு­வதை இத்­திட்­டம் காட்­டு­கிறது.

இது ஒரு­பு­றம் இருக்க, ஹெல்­தி­யர் எஸ்ஜி திட்­டத்­துக்­கான ஆத­ரவு அள­வுக்கு அதி­க­மாக இருந்­தால் சிகிச்­சைக்­காக தங்­க­ளி­டம் வரும் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை, சமா­ளிக்க முடி­யாத அள­வுக்குப் போய்­வி­டும் என்று மருத்­து­வர்­கள் சிலர் அக்­கறை தெரி­வித்­துள்­ள­தாக திரு ஓங் கூறினார்.

ஹெல்­தி­யர்­எஸ்ஜி திட்­டத்­தில் பதிவு செய்­த­வு­டன் முதல்­மு­றை­யாக மருத்­து­வ­ரைக் காணச் செல்­லும்­போது இல­வச மருத்­துவ ஆலோ­சனை வழங்­கப்­படும். உண­வுப் பழக்­கம், உடற்­ப­யிற்சி செய்­யும் முறை, மருத்­து­வப் பரி­சோ­தனை ஆகி­யவற்றை உள்­ள­டக்­கும் சுகா­தா­ரத் திட்­டம் ஒன்றை மருத்­து­வர் வகுத்­துத் தரு­வார். நேற்று பாசிர் ரிஸ் சென்ட்­ர­லில் நடை­பெற்ற நிகழ்வு ஒன்­றில் கலந்து­ கொண்ட திரு ஓங் இவை குறித்து செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

அதி­க­ரித்து வரும் வாழ்க்­கைச் செல­வி­னத்­தைச் சமா­ளிக்க உத­வும் முனைப்­பில், இல­வச மளி­கைப் பொருள்­கள் விநி­யோ­கம், இரண்டு வாரத்­திற்கு ஒருமுறை நடை­பெ­ற­கிறது. பாசிர் ரிஸ் சென்ட்­ரல் வட்­டா­ரத்­தில் வசிக்­கும் வசதி குறைந்த குடும்­பங்­கள், காய்

கறி­கள், பழங்­கள் போன்­ற­வற்றை இதன் மூலம் பெற்­றுக்­கொள்­ள­லாம். கொள்­ளை­நோய்க்­குப் பிறகு, கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்ட இந்­தச் சூழ­லில், சமு­தா­யத்­தி­னர் அனை­வ­ரை­யும், பல்­வேறு திட்­டங்­கள் மூலம் ஒன்­றி­ணைக்க காத்­தி­ருக்­கி­றோம் என்­றார் பாசிர் ரிஸ் - பொங்­கோல் குழுத்­தொ­கு­தி­யின் ஆலோ­ச­க­ரான திரு டெஸ்­மண்ட் டான்.

கூடுதல் செய்தி:

அனுஷா செல்வமணி