மலேசிய கிராமப் புறங்களில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாக அந்நாட்டின் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மலேசியாவில் உள்ள 367 தமிழ் தொடக்கப்பள்ளிகளில் 150க்கும் குறைவான மாணவர்கள் பயில்வதாக அது கவலை தெரிவித்தது.
கிராமப் புறங்களில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதே மலேசிய அரசாங்கத்தின் விருப்பம் என்று அந்நாட்டின் கல்வி துணை அமைச்சர் லிம் ஹுவி யிங் கூறினார். தமிழ்ப் பள்ளிகளில் குறைவான மாணவர் சேர்க்கைக்கு நீண்டகாலத் தீர்வு காண தனது அமைச்சு வழிவகைகளை ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
நாடு தழுவிய நிலையில், ஒட்டுமொத்த அடிப்படையில் தமிழ்ப் பள்ளிகளில் சொற்ப எண்ணிக்கையில் மாணவர்கள் இருப்பது போதாதென்று ஒருசில பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதைவிட மோசமாக உள்ளது என்றும் அவை சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை என்றும் திருவாட்டி லிம் தெரிவித்தார்.
பேராக் மாநிலம் குனோங் ரபாட் நகரில் தமிழ்ப் பள்ளி ஒன்றின் திறப்பு விழாவில் அவர் நேற்று முன்தினம் கலந்துகொண்டு பேசினார். குனோங் ரபாட் தமிழ்ப் பள்ளி அந்நகரின் மையப் பகுதியில் 1954ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
அப்பள்ளி தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய பள்ளிக் கட்டடத்தை மாணவர்கள், ஆசிரியர்கள், சமூகத் தலைவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து நேற்று முன்தினம் திறந்துவைத்தனர்.
தமிழ்ப் பள்ளியின் திறப்பு விழாவில் தொழில்முனைவர் மேம்பாட்டு, கூட்டுறவு துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமியும் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் எம். துளசி திவானியும் கலந்துகொண்டனர்.
தேவையில்லாத, பயன்படுத்தப்படாத திட்டங்கள் என்று மாணவர்களைக் குறைவாகக் கொண்ட தமிழ்ப் பள்ளிகள் வர்ணிக்கப்
படுவதாக அறியப்படுகிறது.
ஆனால் இப்பள்ளிகளுக்கான புதுப்பிப்பு, பராமரிப்புப் பணிகள் தாமதம் அடைவதற்கு இது காரணமல்ல என்று அமைச்சர் லிம் கூறினார். மாறாக, இப்பணிகள் தாமதம் அடைவதற்கு வேறு பல காரணங்கள் இருப்பதாக அவர் விளக்கம் அளித்தார்.
பணிகளுக்குத் தேவையான பொருள்
களின் விலை அதிகரித்திருப்பதும் கட்டு
மான ஊழியர்கள் தட்டுப்பாடும் அவற்றில் அடங்கும் என்றார் அவர்.
இருப்பினும், தமிழ்ப் பள்ளிகளுக்காக அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ள மேம்
பாட்டுப் பணிகளையும் புதிய தமிழ்ப் பள்ளி
களைக் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளையும் விரைவுப்படுத்த கல்வி அமைச்சு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து அதில் கவனம் செலுத்தும் என்றும் அமைச்சர் லிம் உறுதி அளித்தார்.

