வேலைப் பரபரப்பிற்கு இடையில் கட்டழகு பேணுவதிலும் கவனம் செலுத்தும் வெளிநாட்டு ஊழியர்கள்

வேலைப் பரபரப்பிற்கு இடையில் கட்டழகு பேணுவதிலும் கவனம் செலுத்தும் வெளிநாட்டு ஊழியர்கள்

1 mins read
d39ca80f-ec6f-4b8b-bc9e-efccb35ad97e
-

பொன்­மணி உத­ய­கு­மார்

வெளி­நாட்டு ஊழி­யர் நிலை­யத்­தின் கேளிக்கை மன்­றத்­தில் நேற்று நடந்த வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான உடற்­கட்­ட­ழ­குப் போட்­டி­யில் பல்­வேறு தங்­கு­வி­டு­தி­க­ளைச் சேர்ந்த ஏறத்­தாழ 50 ஊழி­யர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

வெற்­றி­யா­ள­ருக்கு பரி­சுக்­கிண்­ண­மும் போட்­டி­யா­ளர்­கள் அனை­வ­ருக்­கும் பதக்­கங்­களும் வழங்­கப்­பட்­டன.

இப்­போட்­டி­யில் பங்­கேற்க விரும்­பி­யோ­ருக்கு, 'ஏபி­பி­எஸ்' எனும் சிங்­கப்­பூர் உடற்­கட்­ட­ழகு, உடல்­வி­ளை­யாட்­டுச் சங்­கம் கடந்த இரு மாதங்­க­ளாக இல­வ­சப் பயிற்­சி­ய­ளித்­தது. போட்­டி­யில் காட்­சி­த­ரும் முறை குறித்­தும் பின்­பற்ற வேண்­டிய உண­வுப் பழக்­கம் குறித்­தும் அவர்­க­ளுக்­குக் கற்­றுத் தரப்­பட்­டது.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் திற­மை­களை வெளிப்­ப­டுத்த உத­வும் நோக்­கில், இப்­போட்­டிக்கு ஏற்­பாடு செய்­த­தாக வெளி­நாட்டு ஊழி­யர் நிலை­யம் கூறி­யது. அத்­து­டன், அவர்­கள் ஆரோக்­கி­ய­மான வாழ்க்­கை­முறை­யை­யும் உணவு­மு­றை­யை­யும் பின்­பற்ற இப்­போட்டி ஊக்­கு­விக்­கும் என்று நிலை­யம் நம்­பு­கிறது.

மேலும், வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்­க­ளின் விடுப்புநாள்­களை அர்த்­த­முள்ள முறை­யில் செல­வி­ட­வும் இது­நல்ல வாய்ப்­பாக அமை­யும் என்று நிலை­யம் குறிப்­பிட்­டது.

போட்­டி­யின் வெற்­றி­யா­ள­ராக மகு­டம் சூடி­னார் காக்கி புக்­கிட் வி­டு­தி­யைச் சேர்ந்த ஜர்­மஞ்­சித் சிங், 29. இந்­திய எல்­லைப் பாது­காப்­புப் படை­யில் சேர பயிற்சி மேற்­கொண்­ட­போது உடற்­கட்­ட­ழ­கு­மீது தமக்கு ஆர்­வம் பிறந்­த­தாக குறிப்­பிட்ட அவர், சிங்­கப்­பூ­ரி­லும் இது­போன்ற போட்­டி­யில் கலந்து­கொள்ள தமக்கு வாய்ப்பு கிடைத்­தது மகிழ்ச்சி அளிப்­ப­தா­கக் கூறி­னார்.