காதலிக்குத் தொல்லை: நண்பனைக் கொன்று, தலையைத் துண்டித்து, இதயத்தை அகற்றிய ஆடவர்

காதலிக்குத் தொல்லை: நண்பனைக் கொன்று, தலையைத் துண்டித்து, இதயத்தை அகற்றிய ஆடவர்

2 mins read
5cab360d-b5f4-49df-bdc6-c9444b7965c5
கொலைசெய்த கிருஷ்ணாவும் (இடது) கொல்லப்பட்ட நவீனும். படங்கள்: இந்திய ஊடகம் -

பொறி­யி­யல் மாண­வர் ஒரு­வர், தன் நண்­ப­னைக் கொன்று, தலை­யைத் துண்­டித்து, வயிற்­றைக் கிழித்து, இத­யத்தை வெளியே எடுத்து, ஆணு­றுப்­பை­யும் விரல்­களை­யும் துண்­டாக்கி, வீசி எறிந்­தார்.

ஹரி­ஹர கிருஷ்ணா, 21, என்ற அம்மாண­வர், தன் காத­லிக்­குத் தொந்­த­ரவு தந்­த­தற்­காக என்.நவீன் என்ற தன் 22 வயது நண்­பனையே இப்­ப­டிக் கொடூ­ர­மா­கக் கொலைசெய்தார்.

இந்­தக் கோர சம்பவம் இந்­தி­யா­வின் தெலுங்­கானா மாநி­லம், ஹைத­ரா­பாத் நகரில் இம்­மா­தம் 18ஆம் தேதி அரங்­கே­றி­யது.

கிருஷ்ணா கடந்த வெள்­ளிக்­கி­ழமை காவல்­து­றை­யில் சர­ண் அ­டைந்து, நவீனைக் கொன்­றதை ஒப்­புக்­கொண்ட பிறகே, இச்­சம்­பவம் வெளிச்­சத்­திற்கு வந்­தது.

இத­னை­ய­டுத்து, மாண்ட நவீ­னின் குடும்­பத்­தி­னர் மறு­நாள் சனிக்­கி­ழமை காவல் நிலை­யத்­தில் நீதி கேட்­டுப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

நல்­கொண்­டா­வில் உள்ள மகாத்மா காந்தி பொறி­யி­யல் கல்­லூ­ரி­யில் நண்­பர்­கள் இரு­வ­ரும் படித்து வந்­த­னர். அப்­போது, நவீ­னும் ஒரு பெண்­ணும் காத­லித்து வந்­த­னர். ஈராண்­டு­க­ளுக்­குப்­பின் அவர்­கள் பிரிந்­து­விட்­ட­னர்.

அதன்­பின் அப்­பெண் கிருஷ்­ணா­வு­டன் நெருக்­க­மாகி, அவர்­கள் இருவரும் காத­லித்து வந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அதன்­பி­ற­கும், நவீன் அப்­பெண்­ணைக் கைப்­பே­சி­யில் அழைப்­ப­தும் குறுஞ்­செய்தி அனுப்­பு­வ­து­மாக இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

மூன்று மாதங்­களுக்­கு­முன் இது­பற்றி கிருஷ்­ணா­வி­டம் அப்­பெண் கூறி­னார். அத­னை­ அடுத்து, நவீ­னைத் தீர்த்­துக்­கட்ட கிருஷ்ணா முடி­வு­செய்­த­தா­கக் காவல்­துறை தெரி­வித்­தது.

கடந்த 17ஆம் தேதி ஒன்­றாகச்­சேர்ந்து பொழு­துபோக்­க­லாம் எனக் கூறி, நவீனை அழைத்­தார் கிருஷ்ணா.

அவ­ரது வீட்­டில் சந்­தித்­த­பின், வெளியே சென்று நக­ரில் சில மணி நேரம் சுற்­றி­னர். பின்­னர் தான் கல்­லூரி விடு­திக்­குத் திரும்பு­வ­தாக நவீன் கூறி­னார்.

அவ­ரைத் தன் மோட்­டார்­சைக்­கி­ளி­லேயே அழைத்­துச் சென்று விடுதியில் விட்டுவிடுவதாகக் கூறி, பெத்த ஆம்­பர்­பேட் பகு­தி­யில் ஆள­ர­வ­மற்ற இடத்­திற்குக் கூட்டிச் சென்­றார் கிருஷ்ணா.

வழி­யி­லேயே அவர் மது அருந்­தி­ய­தா­க­வும் ஒரு கத்தி வாங்­கி­ய­தா­க­வும் காவல்­துறை தெரி­வித்­தது.

பின்­னர் போதை­யில் நவீ­னு­டன் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்ட கிருஷ்ணா, கயிற்­றால் அவ­ரது கழுத்தை நெரித்­துக் கொன்­றார். இக்­கொலை 18ஆம் தேதி அதி­கா­லை­யில் நிகழ்ந்­தது.

நவீ­னைக் கொன்­ற­பின் அவ­ரது தலை­யைத் துண்­டித்த கிருஷ்ணா, அவ­ரது வயிற்­றைக் கிழித்து, இத­யத்தை அகற்­றி­ய­தா­க­வும் கூறப்­பட்­டது.

பின்­னர், நவீ­னின் ஆணு­றுப்­பை­யும் விரல்­க­ளை­யும் வெட்டி வீசி­விட்டு, தமது மோட்­டார்­சைக்­கி­ளில் ஏறி அங்­கி­ருந்து சென்­று­விட்­ட­தா­கக் காவல்­துறை விளக்­க­மா­கக் கூறி­யது.

நவீ­னின் துண்­டாக்கப்பட்ட உட­லைப் படம்­பி­டித்த கிருஷ்ணா, அப்­ப­டங்­களை வாட்ஸ்அப் வழி­யா­கத் தன் காத­லிக்கு அனுப்பி வைத்­த­தா­க­வும் சொல்­லப்­ப­டு­கிறது.

நவீ­னைக் காணா­த­தால் அவ­ரின் குடும்­பத்­தி­னர் காவல்­து­றை­யி­டம் புகார் அளித்­த­னர். காவல்­து­றை­யி­டம் கிருஷ்ணா சர­ண­டைந்து, நடந்­ததை விவ­ரித்த பின்­னரே, நவீ­னுக்கு நடந்த கொடூ­ரம் தெரி­ய­வந்­தது.

கிருஷ்­ணா­வைக் கைது­செய்த காவல்­துறை, அவர்­மீது கொலை, சான்­று­களை அழித்­தது உள்­ளிட்ட பிரி­வு­களில் வழக்­குப்­ப­திவு செய்­துள்­ளது.