வெளிநாடு செல்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்வு

வெளிநாடு செல்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்வு

3 mins read

தேசிய சேவையாளர்க்கு மேம்பட்ட அனுபவம் தரும் தற்காப்பு அமைச்சின் திட்டங்கள்

தயார்­நி­லை­ தேசிய சேவை­யா­ளர்­கள் இனி 12 மாதங்­கள் அல்­லது அதற்கு மேற்­பட்ட காலத்­திற்கு வெளி­நாடு செல்­வ­தற்கு மட்­டும் அனு­ம­திக்கு விண்­ணப்­பித்­தால் போது­மா­னது.

வரும் ஏப்­ரல் மாதம் இந்த நடை­முறை நடப்­புக்கு வரும் என்று தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

தற்­போது இந்தக் கால வரம்பு ஆறு மாதங்­க­ளாக உள்­ளது. தேசிய சேவை அனு­பவத்தை மேம்­ப­டுத்த அமைச்சு மேற்­கொள்­ளும் முயற்­சி­க­ளின் ஓர் அங்­க­மாக இந்த மாற்­றம் அமை­கிறது.

தேசிய சேவை­யா­ளர்­க­ளின் பங்­க­ளிப்பை அதி­க­ரிக்­க­வும் திட்­டங்­கள் உள்­ளன என்று தற்­காப்பு மூத்த துணை­ய­மைச்­சர் ஹெங் சீ ஹாவ் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

அமைச்­சின் இந்த ஆண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத் திட்­டம் குறித்த விவா­தத்­தின்­போது அவர் இந்­தத் தக­வல்­களை வெளி­யிட்­டார்.

"சிங்­கப்­பூ­ரின் தேசிய சேவை­யா­ளர்­கள் பல­ரும் கல்வி அல்­லது வேலை­யின் பொருட்டு நீண்­ட­கா­லம் வெளி­நா­டு­களில் தங்க நேரி­டு­வதை இந்த மாற்­றம் பிர­தி­ப­லிக்­கிறது," என்­றார் அவர்.

தேசிய சேவை­யா­ளர்­கள் வெளி­நாடு செல்ல நேரி­டு­வ­தன் தொடர்­பில் எதிர்­நோக்­கும் சிக்­கல்­க­ளைக் குறைப்­பது குறித்து பாசிர் ரிஸ்-பொங்­கோல் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இயோ வான் லிங் எழுப்­பிய கேள்­விக்­குத் திரு ஹெங் பதி­ல­ளித்­தார். தற்­காப்பு அமைச்சு இந்த விவ­கா­ரத்தை அணுக்­க­மாக ஆய்வு செய்­த­தா­கக் குறிப்­பிட்ட அவர், தற்­போது அறி­விக்­கப்­பட்­டுள்ள மாற்­றத்­தால் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யின் தயார்­நிலை பாதிக்­கப்­ப­டாது என்­றார்.

நாட்­டில் குழந்­தைப் பிறப்பு விகி­தம் குறைந்து வரு­கிறது. முழு நேர தேசிய சேவை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் குறைந்து வரு­கிறது.

இவற்­றைக் கருத்­தில்­கொண்டு தேசிய சேவை­யா­ளர்­களை சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யின் பல்­வேறு பிரி­வு­களில் மேம்­பட்ட முறை­யில் பணி­ய­மர்த்த, அமைச்சு மேற்­கொள்­ளும் முயற்­சி­க­ளை­யும் திரு ஹெங் எடுத்­து­ரைத்­தார்.

பொருத்­த­மான திறன்­க­ளின் அடிப்­ப­டை­யில் ராணுவ வீரர்­களின் பணி நிய­ம­னம் அமை­வது குறித்த கேள்­வி­க­ளுக்­கும் அவர் பதி­ல­ளித்­தார்.

பைனி­யர் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பேட்­ரிக் டே, அங் மோ கியோ குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கான் தியாம் போ ஆகி­யோ­ரின் கேள்­வி­க­ளுக்­கும் திரு ஹெங் பதி­ல­ளித்­தார்.

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை 2021ஆம் ஆண்­டில் இருந்து 1,300 வேலை­களை மறு­வ­டி­வ­மைத்­துள்­ளது.

செய­லாக்­கப் பணி­களில் முன்­பை­விட அதி­க­மான தேசிய சேவை­யா­ளர்­கள் நிய­மிக்­கப்­படு­வ­தற்கு இது உத­வும் என்று திரு ஹெங் தெரி­வித்­தார்.

"கவச வாகன ஓட்­டு­நர், மருத்­துவ உத­வி­யா­ளர் போன்ற வேலை­கள் மறு­வ­டி­வ­மைக்­கப்­பட்­டன. அடுத்த ஆண்டு மத்­திக்­குள் மேலும் 500 வேலை­கள் மறு­வ­டி­வ­மைக்­கப்­படும்," என்று அவர் கூறி­னார்.

புதிய நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்­தப்­படும் தேசிய சேவை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்­கையை ஆயு­தப்­படை அதி­க­ரித்­துள்­ளது.

அவர்­கள் வெளி­யு­ல­கில் பெறும் நிபு­ணத்­து­வத்தை தேசிய சேவைப் பயிற்­சி­யில் பயன்­படுத்த வழி­வ­குப்­பது இதன் நோக்­கம்.

சென்ற ஆண்டு 200 தேசிய சேவை­யா­ளர்­கள் இவ்­வாறு புதிய வேலை­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­னர். முன்பு அந்த எண்­ணிக்கை 50 ஆக இருந்­தது.

மின்­னி­லக்­கம், உள­வுத்­துறை, தள­வா­டம், பொறி­யி­யல் போன்­ற­வற்­றில் புதி­தா­கப் பலர் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

ஆர்­வ­முள்ள தேசிய சேவை­யா­ளர்­கள் இத்­த­கைய திட்­டத்­திற்கு விண்­ணப்­பிக்­க­லாம்.

நாட்­டின் தற்­காப்­புக்­குப் பங்­க­ளிக்­கும் அதே­வே­ளை­யில் தங்­கள் கல்­வித் தகு­தியை உயர்த்­திக்­கொள்­ள­வும் தேசிய சேவை­யா­ளர்­க­ளுக்கு வாய்ப்­பு­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன என்­றார் திரு ஹெங்.

சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை வேலை-கல்­வித் திட்­டத்தை விரி­வு­ப­டுத்­தி­யுள்­ளதை அவர் சுட்­டி­னார்.

இதன் தொடர்­பில் ஆறு திட்­டங்­கள் நடப்­பில் உள்­ளன.

தேசிய சேவை­யா­ளர்­கள் மின்­னி­லக்­கம், இணை­யப் பாது­காப்பு, பொறி­யி­யல் உள்­ளிட்ட துறை­களில் வேலை­பார்த்­துக்­கொண்டே படித்து, பட்­ட­யம் பெற இத்­திட்­டங்­கள் கைகொடுக்­கும்.

இத்­திட்­டங்­கள் மூலம் பலன் அடைந்த தேசிய சேவை­யா­ளர்­கள், வருங்­கால வேலைக்­கான திறன்­க­ளைப் பெற இது உதவு­வ­தா­கக் கூறு­கின்­ற­னர்.

இது­வரை 450 முழு­நேர தேசிய சேவை­யா­ளர்­கள் இத்­த­கைய கல்­வித் திட்­டங்­க­ளுக்­குப் பதிந்து கொண்­டி­ருப்­ப­தாக தற்­காப்பு மூத்த துணை­ய­மைச்­சர் ஹெங் குறிப்­பிட்­டார்.

வரும் 2025ஆம் ஆண்­டிற்­குள் வேலை-கல்­வித் திட்­டத்­திற்கு ஆண்­டு­தோ­றும் 500 முழு நேர தேசிய சேவை­யா­ளர்­கள் பதிந்து கொள்­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அவர் கூறி­னார்.

மேலும் நாடாளுமன்றச் செய்திகள் பக்கம் 2ல்