'நாட்டு நாட்டு': ஆடி அசத்திய கொரிய தூதர், ஊழியர்கள்

'நாட்டு நாட்டு': ஆடி அசத்திய கொரிய தூதர், ஊழியர்கள்

2 mins read
b348471f-df07-40a1-8de7-09d01f50a1ce
-
multi-img1 of 3

இந்­தி­யா­விற்­கான தென்­கொ­ரி­யத் தூதர் சாங் ஜே-போக், புகழ்­பெற்ற 'நாட்டு நாட்டு' எனும் தெலுங்­குப் பாட­லுக்கு நட­ன­மா­டிப் பல­ரை­யும் வியப்­பில் ஆழ்த்­தி­யுள்­ளார்.

புது­டெல்­லி­யில் அமைந்­துள்ள தென்­கொ­ரி­யத் தூத­ரக வளாகத்தில், தமது ஊழி­யர்­க­ளு­டன் இணைந்து அவர் நட­ன­மா­டிய காணொளி சமூக ஊட­கங்­களில் வேக­மா­கப் பர­வி­வ­ரு­கிறது.

பல விரு­து­களை வென்­றுள்ள 'ஆர்­ஆர்­ஆர்' படத்­தில் இடம்­பெற்­றி­ருக்­கும் 'நாட்டு நாட்டு' பாட­லுக்கு இவர்­கள் ஆடிய நட­னக் காணொ­ளியை இந்தியாவிற்கான தென்கொரியத் தூத­ர­கம் டுவிட்­ட­ரில் பதி­விட்­டது.

அதை­ய­டுத்­துப் பல்­லா­யி­ரம் பேர் அக்­கா­ணொ­ளியை ரசித்­துப் பாராட்­டி­ய­து­டன் மீண்­டும் டுவிட்­ட­ரில் பகிர்ந்­துள்­ள­னர்.

இவ்­வாறு பகிர்ந்­த­வர்­களில் இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி­யும் ஒரு­வர்.

மிக­வும் துடிப்­பான, பாராட்­டு­த­லுக்கு உரிய குழு முயற்சி என்­றும் திரு மோடி கருத்­து­ரைத்­துள்­ளார்.

பாகு­பலி படத்­தின் மூலம் புகழ்­பெற்ற இயக்­கு­நர் ராஜ­மௌலி இயக்­கிய 'ஆர்­ஆர்­ஆர்' திரைப்­ப­டம், 1920களின் கால­கட்­டத்­தில் பிரிட்­டிஷ் ஆட்­சியை எதிர்த்­துப் போரா­டிய இரு புரட்­சி­யா­ளர்­க­ளின் வாழ்க்­கை­யைச் சித்­தி­ரிக்­கிறது.

ஆங்­கி­லத்­தில் 'ரைஸ் ரோர் ரிவோல்ட்' என்­ப­தன் சுருக்­க­மாக இப்­ப­டத்­திற்கு இவ்­வாறு பெய­ரி­டப்­பட்­டது.

ஹாலி­வுட் திரை­யு­ல­கி­லும் இது சில அங்­கீ­கா­ரங்­க­ளைப் பெற்­று­வ­ரு­கிறது.

சென்ற வாரம் ஹாலி­வுட் கிரிட்­டிக்ஸ் அசோ­ஷி­யே­ஷன் விரு­த­ளிப்பு நிகழ்ச்­சி­யில், 'ஆர் ஆர்­ஆர்' படம் சிறந்த அனைத்­து­ல­கத் திரைப்­ப­டத்­திற்­கான விரு­தை­யும் 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த அச­லான பாடல் எனும் விரு­தை­யும் வென்­றன.

முன்­ன­தாக, சென்ற மாதம் நடை­பெற்ற 80ஆவது 'கோல்­டன் குளோப்' விருது விழா­வில் சிறந்த அசல்­தன்மை உடைய பாட­லுக்­கான விருதை இப்பாடல் வென்­றது. இவ்­வி­ருதை வென்ற முதல் இந்­திய, ஆசி­யப் பாடல் என்ற சிறப்­பும் இதற்­குண்டு.

'நாட்டு நாட்டு' பாட­லில் சிறந்த நடன அசை­வு­கள் இடம்­பெற்­றி­ருப்­ப­தால் சிறி­ய­வர்­கள் முதல் பெரி­ய­வர்­கள் வரை அனை­வ­ரை­யும் ஈர்ப்­ப­து­டன் ஆடத் தூண்­டு­வ­தாக திரைப்­பட ரசி­கர்­கள் கருத்­து­ரைக்­கின்­ற­னர்.

இந்த ஆண்­டின் ஆஸ்­கார் விரு­து­க­ளுக்­கும் இப்­பா­டல் நிய­ம­னம் பெற்­றுள்­ளது. பாட­லா­சி­ரி­யர் சந்­தி­ர­போஸ் இயற்­றிய இப்­பா­ட­லுக்கு இசை­ய­மைப்­பா­ளர் எம்.­எம். கீர­வாணி இசை­ய­மைத்­துள்­ளார்.