சிங்கப்பூரில் உதயநிதி ஸ்டாலின்; தமிழ்மொழிக்கான சிறப்பை அறிந்து வியந்தார்

சிங்கப்பூரில் உதயநிதி ஸ்டாலின்; தமிழ்மொழிக்கான சிறப்பை அறிந்து வியந்தார்

2 mins read
07aee63b-5c56-4928-bca7-5887147f2074
-

தமிழ்­நாட்­டின் விளை­யாட்டு, இளை­யர் நலன் அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டா­லின் மூன்று நாள் தனிப்­பட்ட சுற்­றுப்­ப­ய­ண­மாக கடந்த வாரம் சிங்­கப்­பூர் வந்­தி­ருந்­தார். அப்­போது அவர் லிட்­டில் இந்­தி­யா­வின் சிறப்­பம்­சங்­க­ளை­யும் மர­பு­டை­மை­யை­யும் அறிந்­து­வி­யந்­தார்.

அவர் தமது பய­ணத்­தின் இறு­தி­யில் கடந்த ஞாயி­றன்று லிஷா எனப்­படும் லிட்­டில் இந்­திய வர்த்­த­கர்­கள், மர­பு­டை­மைச் சங்­கத்­தின் செய­லவை உறுப்­பி­னர்­

க­ளைச் சந்­தித்து உரை­யா­டி­னர்.

லிட்­டில் இந்­தி­யா­வின் வர­லாற்­றுச் சிறப்­பு­களை ஆர்­வத்­து­டன் அறிந்­து­கொண்ட திரு உத­ய­நிதி, இங்கு வாழும் தமி­ழர்­க­ளை­யும், குறிப்­பாக தமிழ்­நாட்­டி­லி­ருந்து வந்து பணி­பு­ரி­யும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளை­யும் அதி­கம் கேட்டு தெரிந்­து­கொண்­டார்.

ஒவ்­வோர் ஆண்­டும் ஏப்­ரல் மாதம் முழு­வ­தும் சிங்­கப்­பூ­ரில் கொண்­டா­டப்­பட்டு வரும் தமிழ்­மொழி விழாவை அவர் வெகு­வா­கப் பாராட்­டி­னார்.

தமிழ்­மொ­ழி­யைப் போற்­றும் வித­மாக முப்­ப­துக்­கும் மேற்­பட்ட சமூக அமைப்­பு­கள் ஒன்று இணைந்து கொண்­டா­டும் இது­போன்ற முயற்­சி­கள், கடல்­க­டந்து வாழும் தமி­ழர்­க­ளின் மொழி ஆர்­வத்­தை­யும் ஒற்­று­மை­யை­யும் பிர­தி­ ப­லிக்­கிறது என்று திரு உத­ய­நிதி பகிர்ந்­து­கொண்­டார்.

லிட்­டில் இந்­தி­யா­வில் உள்ள இந்­திய மர­பு­டைமை நிலை­யம் பற்­றி­யும் அங்­குள்ள அரும்­பொ­ரு­ளக கலைப்­பொ­ருள்­கள் பற்­றி­யும் அவர் கேட்­ட­றிந்­தார்.

இம்­முறை நேரம் குறை­வாக இருப்­ப­த­னால் அடுத்த முறை சிங்­கப்­பூர் வரும்­பொ­ழுது அந்த நிலை­யத்தை நேரில் சென்று பார்­வை­யிட தாம் விரும்­பு­வ­தாக அவர் கூறி­னார். மேலும், லிஷா­வின் வரு­டாந்­திர நட­வ­டிக்­கை­கள், செயல்­பா­டு­கள், நிகழ்­வு­கள், உள்­ளூர் வர்த்­த­கர்­க­ளுக்கு அளிக்­கும் ஆத­ர­வு­கள் குறித்­தும் தெரிந்­து­கொண்­டார் திரு உத­ய­நிதி. 'உல­கின் விரும்­பத்­தக்க அக்­கம்­பக்­கம்' எனும் தர­வ­ரி­சை­யில் கடந்த ஆண்டு லிட்­டில் இந்­தியா இடம்­பெற்­ற­தை­யும் அறிந்து மகிழ்ந்­தார்.

ராஃபிள்ஸ் அவென்­யூ­வில் உள்ள தனி­யார் தங்­கு­வி­டு­தி­யில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 5 மணிக்கு துவங்­கிய இக்­க­லந்­து­ரை­யா­டல், ஏறத்­தாழ அரை மணி­நே­ரம் நீடித்­த­தாக லிஷா செய­ல­வைக் குழு தெரி­வித்­தது.

முன்­ன­தாக, திரு உத­ய

­நி­திக்கு பொன்­னா­டை­யும் மாலை­யும் அணி­வித்து மரி­யாதை செலுத்­தப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரின் இந்­தி­யர் கலா­சா­ரத்தை வளர்ப்­ப­தில் தமி­ழக அர­சு­டன் இணைந்து பணி­யாற்ற தமது குழு விருப்பம் தெரி­வித்ததாக­வும் அதனை திரு உதயநிதி வரவேற்றதாகவும் லிஷாவின் மூத்த ஆலோ­ச­கர் ராஜ்குமார் சந்திரா தமிழ் முர­சி­டம் கூறி­னார்.