கைப்பேசிச் செயலி ஆபத்தைத் தடுக்க புதிய விதித்தொகுப்பு

கைப்பேசிச் செயலி ஆபத்தைத் தடுக்க புதிய விதித்தொகுப்பு

3 mins read

ஜோசஃபின் டியோ: இணைய ஆபத்திலிருந்து குழந்தைகளைக் காக்க நடவடிக்கை

பாது­காப்­பான மின்­னி­லக்­கத் தளங்­களை நோக்கி சிங்­கப்­பூர் நகர்ந்து வரும் வேளை­யில் தீங்­கி­ழைக்­கக்­கூ­டிய, குறிப்­பாக குழந்­தை­க­ளைப் பாதிக்­கும் உள்­ள­டக்­கங்­களை நீக்­கு­மாறு கைப்­பே­சிச் செயலி நிறு­வ­னங்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­படும்.

இணைய விளை­யாட்­டு­கள் தொடர்­பான அபா­யங்­களும் இதில் அடங்­கும்.

குழந்­தை­க­ளின் தனிப்­பட்ட விவ­ரங்­கள் எவ்­வாறு சேக­ரிக்­கப்­ப­டு­கின்­றன என்­ப­தை­யும் அந்­தத் தர­வு­கள் செயற்கை நுண்­ண­றிவு முறை­யில் எவ்­வாறு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என்­ப­தை­யும் அர­சாங்­கம் அடுத்த 12 முதல் 18 மாதங்­கள் வரை கவ­னிக்­கும்.

தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ நேற்று இந்த விவ­ரங்­களை நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார். குறிப்­பாக, தீங்கு விளைவிக்­கக்­கூ­டிய அம்­சங்­க­ளைக் கொண்ட செய­லி­

க­ளுக்­கென அர­சாங்­கம் புதிய விதித் தொகுப்பை உரு­வாக்­கும் என்­றும் அவர் கூறி­னார்.

"கைபே­சிச் செய­லியை உரு­வாக்­கும் நிறு­வ­னங்­கள் தீங்கு விளைக்­கக்­கூ­டிய அம்­சங்­களை உள்­ள­டக்­கக்­கூ­டும்.

"குறிப்­பாக, குழந்­தை­க­ளுக்­குத் தீங்கு விளை­விப்­ப­தாக அவை இருக்­க­லாம். வெளிப்­

ப­டை­யான பாலி­யல் செயல்­

பா­டு­கள் அல்­லது வன்­செ­ய­லைத் தூண்­டும் நட­வ­டிக்­கை­க­ளைக் கொண்­ட­தாக அவை இருக்­க­லாம்," என்­றார் திரு­வாட்டி டியோ.

புதி­தாக உரு­வாக்­கப்­படும் நடை­மு­றைத் தொகுப்பு பற்றி சம்­பந்­தப்­பட்ட தொழில்­து­றை­யி­ன­ரு­டன் கலந்து ஆலோ­சிக்­கப்­படும் என்­றும் அவர் கூறி­னார். சமூக ஊட­கச் சேவை­க­ளுக்­கும் அப்­பால் உள்ள தளங்­களில் தீங்­கான அம்­சங்­க­ளைக் களைய தொடர்பு, தக­வல் அமைச்சு என்ன நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறது என்று மெக்­பர்­சன் தனித்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டின் பெய் லிங் எழுப்­பிய வினாக்­க­ளுக்கு அமைச்­சர் டியோ பதி­ல­ளித்­தார்.

புதிய நடை­மு­றைத் தொகுப்பு இணை­யப் பாது­காப்பு நடை­

மு­றைக்­கான விதித்­தொ­குப்­பைத் தழுவி இருக்­கும் என்­றும் இவ்­வாண்­டின் பிற்­ப­கு­தி­யில் அது முழு­மை­யாக அறி­மு­கம் செய்­யப்­படும் என்­றும் திரு­வாட்டி டியோ கூறி­னார்.

அதன் பிறகு, இன்ஸ்­ட­

கி­ராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடக நிறு­வ­னங்­கள் சிங்­கப்­பூர் பய­னா­ளர்­க­ளுக்­கான வரம்­பைச் செயல்­ப­டுத்­து­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­படும். பயங்­க­ர­வா­தத்தை ஊக்­கு­விக்­கும் உள்­ள­டக்­கம், இணைய அச்­சு­றுத்­தல் அல்­லது இன, சம­யப் பதற்­றங்­க­ளைத் தூண்­டக்­கூ­டிய அம்­சங்­கள் போன்­ற­வற்­று­ட­னான இணை­யத் தீங்­கு­களை சிங்­கப்­பூர் பய­னா­ளர்­கள் எளி­தில் நாடா­வண்­ணம் அந்த வரம்­பு­களை அமைக்­கு­மாறு அவை கேட்­டுக்­கொள்­ளப்­படும். அத்­து­டன், இணைய விள­யாட்­டு­கள்­வழி தீங்­கான அம்­சங்­கள் சிங்­கப்­பூர் பய­னா­ளர்­க­ளுக்­குச் செல்­லாத வகை­யில் தொடர்பு, தக­வல் அமைச்­சும் கவ­னம் செலுத்­தும் என்­றார் அமைச்­சர்.

"விளை­யாட்­டு­க­ளுக்­கான பொருத்­த­மான வய­தைப் பரி­சீ­லிக்­கு­மா­றும் குழந்­தை­க­ளின் இணைய விளை­யாட்­டு­க­ளின்­போது அவர்­க­ளின் பெற்­றோர் கண்­கா­ணிப்பு இருப்­ப­தை­யும் உறு­தி­செய்ய சமூக ஊடக நிறு­வ­னங்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­படும்.

"அரு­வ­ருப்­பான உள்­ள­டக்­கம் கொண்ட கைப்­பே­சிச் செய­லி­

க­ளைப் பதி­வி­றக்­கம் செய்ய முடி­யா­த­படி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இருப்­பி­னும், கைப்­பே­சிச் செய­லி­க­ளை­யும் கடந்து, இணை­யம் வழி­யான இதர தளங்­க­ளி­லும் ஆபத்­தான விளை­யாட்­டு­க­ளைப் பெற­மு­டி­யும் என்­ப­தால் அது­போன்ற நிலை­மையை சமா­ளிப்­பது குறித்து நாங்­கள் ஆராய்­வோம், என்று திரு­வாட்டி டியோ விளக்­கி­னார்.

புத்­தாக்க வழி­களில் செய்­தி­ க­ளைத் தெரி­விக்க உள்­ளூர் ஊட­கங்­கள் மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பங்­க­ளைத் தழு­வு­கின்­றன என்று கூறிய திரு­வாட்டி டியோ, அதற்கு உதா­ர­ண­மாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸைக் குறிப்­பிட்­டார்.

"மலாய் மொழி நாளி­த­ழான பெரித்தா ஹரி­யான் நடப்பு விவ­கா­ரங்­களை விவா­திக்­கும் வலை­யொ­ளி­க­ளைத் தயா­ரிக்­கிறது. அதே­போல தமிழ் முரசு நாளி­த­ழும் கைப்­பே­சிச் செய­லியை உரு­வாக்கி வரு­கிறது," என்­றார் அமைச்­சர் டியோ.