உற்பத்தித்திறன் வளர்ப்பில் சிங்கப்பூர் தொடர் கவனம்: கான்

உற்பத்தித்திறன் வளர்ப்பில் சிங்கப்பூர் தொடர் கவனம்: கான்

2 mins read

பொரு­ளி­யல் வள­ரும் சூழல் அதிக சவா­லாக விளங்­கும் வேளை­யில் சிங்­கப்­பூர் போட்­டித்­தன்­மைக்கு ஈடு­கொ­டுக்­கக்­கூ­டிய ஓர் உலக வர்த்­தக மையம் என்­ப­தைக் கட்­டிக்­காக்க எல்லா முயற்­சி­க­ளை­யும் தொடர்ந்து மேற்­கொள்­ளும்.

வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் நேற்று இதனை நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார். உற்­பத்­தித்­தி­றன் அதி­க­ரிப்பு நட­வ­டிக்­கை­க­ளைத் தொட­ரும் வேளை­யில் நிபு­ணத்­துவ, நிதிச் சேவை­கள் மீது சிங்­கப்­பூர் தமது மேம்­பட்ட கவ­னத்­தைச் செலுத்­தும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

தமது அமைச்­சின் செல­வி­னத் திட்­டத்­தின்­மீது உரை­யாற்­றிய திரு கான், சுல­ப­மாக வர்த்­த­கம் புரி­வ­தற்கு ஏற்ற ஆண்­டாக இது இல்­லா­விட்­டா­லும், தேவைப்­படும் நேரத்­தில் தமது ஆத­ரவை அளிக்க அர­சாங்­கம் தயங்­காது என்­றார்.

"பொரு­ளி­யல் வளர்ச்சி இந்த ஆண்­டில் மெது­வ­டை­ய­லாம் என்ற நிலை­யில் உய­ரும் சம்­ப­ளம் வர்த்­த­கச் செல­வு­களை அதி­க­ரிக்­கும் சாத்­தி­யம் உள்­ளது.

"உலக அரங்­கில் சிங்­கப்­பூர் தொடர்ந்து வெற்­றி­நடை போடு­வதை உறுதி செய்ய, வர்த்­த­கங்­களும் ஊழி­யர்­களும் தங்­க­ளது ஆற்­ற­லை­யும் உற்­பத்­தித்­தி­ற­னை­யும் தொடர்ந்து மேம்­ப­டுத்த வேண்­டிய அவ­சி­யம் உள்­ளது.

"அதே­நே­ரம், 'சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் 2030' என்­னும் தொலை­நோக்­குத் திட்­டத்­திற்­கான குறிக்­கோள்­களை சிங்­கப்­பூர் அடைய வேண்­டு­மா­யின் உரு­மாற்­றத்­திற்­கும் அவர்­கள் தயா­ராக இருக்­க­வேண்­டும்.

"விலை­கள் உயர்ந்து, வளங்­க­ளைப் பெறு­வ­தில் சிர­மம் ஏற்­பட்டு, அனைத்­து­­ல­கச் சூழல் மிக­வும் சவா­லான ஒன்­றாக மாறி­வ­ரும் இந்நி­லை­யில் நீண்­ட­கால வளர்ச்­சி­யை­யும் வெற்­றி­யை­யும் ஈட்ட, இவ்­வாறு பாடு­ப­டு­வது ஒன்றே வழி," என்று அமைச்­சர் கான் கூறி­னார்.

முழு­நேர சிங்­கப்­பூர் ஊழி­யர்

களின் மாதாந்­திர இடை­நிலை வரு­மா­னம் கடந்த ஆண்டு 8.3 விழுக்­காடு அதி­க­ரித்­த­தாக அவர் தெரி­வித்­தார். பண­வீக்க நில­வ­ரத்தை கணக்­கில் எடுத்­துக்­கொண்­டா­லும் இயல்­பான இடை­நிலை வரு­மா­னம் 2 விழுக்­காடு அதி­க­மா­கவே உள்­ள­தா­க­வும் திரு கான் குறிப்­பிட்­டார்.

"அதிக சம்­ப­ளங்­கள் வர்த்­த­கச் செலவை அதி­க­ரிக்­கும் அதே­வேளை அந்த சம்­பள உயர்­வுக்கு உறு­துணை புரி­யும் வகை­யில் உற்­பத்­தித்­தி­ற­னும் அதி­க­ரிப்­பதை உறு­தி­செய்­வது அவ­சி­யம். அப்­போ­து­தான் வர்த்­தக­மும் ஊழி­யர்­களும் பல­ன­டைய முடி­யும்," என்­றும் அமைச்­சர் கான் தமது உரை­யில் குறிப்­பிட்­டார்.

கடந்த ஆண்டு 3.6% வளர்ந்த பொரு­ளி­யல் இவ்­வாண்டு 0.5% முதல் 2.5% வரை­யி­லேயே இருக் கும் என்று எதிர்­பார்க்­கப்­படு வதாக அவர் கூறி­னார்.