இரட்டைக் குழந்தை மாண்ட சம்பவம்: தந்தை மீதான குற்றச்சாட்டு குறைப்பு

இரட்டைக் குழந்தை மாண்ட சம்பவம்: தந்தை மீதான குற்றச்சாட்டு குறைப்பு

2 mins read
0ff3fd56-ee12-4253-84cc-fd40f3bf34ca
-

அப்­பர் புக்­கிட் தீமா­வில் உள்ள கால்­வாய் ஒன்­றில் 11 வய­து­டைய இரட்டை ஆண்­கு­ழந்­தை­கள் கழுத்தை நெரித்­துக் கொல்லப் பட்ட வழக்­கில் குழந்­தை­க­ளின் தந்தை மீது சுமத்­தப்­பட்டு இருந்த கொலைக் குற்­றச்­சாட்டு நோக்­க­மில்லா மர­ணம் என்று குறைக்­கப்­பட்டுள்­ளது.

சேவி­யர் யாப் ஜங் ஹுன், 49, எனப்­படும் அந்த ஆட­வர் மீதான இரு குற்­றச்­சாட்­டு­கள் திருத்­தப்­பட்டு உள்­ளன.

மன­ந­லக் கழ­கம் வெளி­யிட்ட அறிக்­கை­யைத் தொடர்ந்து, குற்­றச்­சாட்­டு­கள் திருத்­தப்­பட்­ட­தாக அர­சுத்­த­ரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

குற்­றம் நிகழ்ந்த வேளை­யில் சேவி­யர் யாப் கடு­மை­யான மன அழுத்­தத்­திற்கு ஆளாகி இருந்­தது கண்­ட­றி­யப்­பட்­ட­தாக அது கூறி­யது.

ஆஸ்­டன் யாப் காய் ஷெர்ன், ஏதன் யாப் இ செர்ன் எனப்­படும் இரட்டை ஆண் குழந்­தை­கள் கடந்த ஆண்டு ஜன­வரி மாதம் 21ஆம் தேதி மாலை 4.25 மணிக்­கும் 6.20 மணிக்­கும் இடைப்­பட்ட நேரத்­தில் கிரீன்­ரிட்ஜ் கிர­சென்ட் விளை­யாட்­டுப் பகுதியில் உள்ள கால்­வா­யில் கொலை செய்­யப்­பட்­டுக் கிடந்­த­தாக நீதி­மன்ற ஆவ­ணங்­கள் தெரி­வித்­தன.

சம்பவம் நடந்த அன்று மாலை 6.25 மணியளவில் உதவி கேட்டு காவல்துறையை சேவியர் அழைத்ததாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

மாண்ட இரு சிறு­வர்­களும் சிறப்புத் தேவையுள்ள குழந்­தை­கள் என்று நம்­பப்­ப­டு­கிறது.வழக்கு விசா­ரணை ஏப்­ரல் மாதம் 18ஆம் தேதி மீண்­டும் நடை­பெ­ற­வுள்­ளது.

காணொளி இணைப்பு வழி­யாக நேற்று நடை­பெற்ற நீதி­மன்ற விசா­ர­ணை­யின்­போது சேவியர் தலை­கு­னிந்து காணப்­பட்­டார். அவ­ரைப் பிர­தி­நி­தித்து இரு சட்ட நிறு­வ­னங்­க­ளைச் சார்ந்த நான்கு வழக்­க­றி­ஞர்­கள் வாதா­டி­னர்.

நோக்­க­மில்லா மர­ணக் குற்­றம் கொலைக்­குற்­ற­மா­காது. கொலை செய்­யும் நோக்­கம் எது­வு­மின்றி செய்­யப்­படும் குற்­ற­மாக இது கரு­தப்­படும்.

இந்­தக் குற்­றத்­திற்கு ஆயுள் தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம். பிரம்­ப­டி­களும் தரப்­ப­ட­லாம். அல்­லது 20 ஆண்டு வரை­யி­லான சிறைத் தண்­டனை, பிரம்­படி மற்­றும் அப­ரா­தம் வி­திக்­கப்­ப­ட­லாம்.