ரயில்கள் மோதிய கோர விபத்தில் 36 பேர் உயிரிழப்பு, 85 பேர் காயம்

ரயில்கள் மோதிய கோர விபத்தில் 36 பேர் உயிரிழப்பு, 85 பேர் காயம்

1 mins read
c951b1a9-954b-4847-8dbb-0c8e8d55a9ee
-

கிரீ­சில் நேற்­று­முன்­தி­னம் இரவு இரு ரயில்­கள் மோதிக்­கொண்­ட­தில் குறைந்­தது 36 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். 85 பேர் காய­ம­டைந்­துள்­ள­னர். ஏறக்­கு­றைய 250 பய­ணி­கள் மீட்­கப்­பட்­டுள்­ள­னர். மீட்­புப் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

கிரீஸ் தலை­ந­கர் ஏதென்­சில் இருந்து தெச­லா­னிகி நகர் நோக்­கிச் சென்­று­கொண்­டி­ருந்த பய­ணி­கள் ரயி­லும் தெச­லா­னி­கி­யில் இருந்து லரிசா நோக்­கிச் சென்­று­கொண்­டி­ருந்த சரக்கு ரயி­லும் மோதின. மோதிய வேகத்­தில் பய­ணி­கள் ரயி­லின் முதல் நான்கு பெட்­டி­கள் தடம்­பு­ரண்­டன என்­றும் முத­லிரு பெட்­டி­கள் கிட்­டத்­தட்ட முற்­றி­லும் நொறுங்­கிப்­போ­யி­ருந்­தன என்­றும் தெசலி வட்­டார ஆளு­நர் திரு கான்ஸ்­டன்­டி­னோஸ் அகோ­ராஸ்­டோஸ், ஸ்கை தொலைக்­காட்­சி­யி­டம் சொன்­னார்.

சுரங்­கப் பாதை­யி­லி­ருந்து பய­ணி­கள் ரயில் வெளி­வந்­த­போது விபத்து ஏற்­பட்­டது. "கொடுங்­க­னவு" என்று விபத்தை வர்­ணித்த விபத்­தில் தப்­பிப் பிழைத்த 28 வயது திரு ஸ்டெர்­ஜி­யோஸ், பெரும் வெடிப்­புச் சத்­தத்­தைத் தீ ஏற்­பட்­ட­தாக கூறி­னார்.

"ரயி­லில் பெரும் பீதி நில­வி­யது. பய­ணி­கள் அல­றி­ய­படி இருந்­த­னர் என்­றும் ரயி­லி­லி­ருந்து மீட்­கப்­பட்ட இளை­யர் ஒரு­வர் கூறி­னார்.

காய­ம­டைந்­த­வர்­க­ளுக்­கு சிகிச்சை அளிப்­ப­தும் மீட்­புப் பணி­யுமே தற்­போது முன்­னு­ரிமை என்று அர­சாங்­கப் பேச்­சா­ளர் கூறி­னார். விபத்து குறித்து காவல் துறை­யி­னர் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.