முன்னுரிமை பறிபோகும்

முன்னுரிமை பறிபோகும்

2 mins read
08890053-5d5a-44eb-9505-b6040049b135
வரும் ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெறும் பிடிஓ வீட்டு விற்பனையில் இருந்து இந்தப் புதிய அணுகுமுறை நடைமுறைக்கு வரும். படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் -

தேவைக்கு ஏற்ப கட்­டப்­படும் (பிடிஓ) வீட்டுக்கு முதல்­மு­றை­யாக விண்­ணப்­பம் செய்­ப­வர்­கள், வீட்­டைத் தேர்ந்­தெ­டுக்க அழைக்­கப்­ப­டும்­போது அழைப்பை ஏற்று வீட்டை தேர்ந்தெடுக்க வராவிடில் அடுத்த ஓராண்­டுக்கு முதல்­முறை விண்­ணப்­ப­தா­ரர் முன்­னு­ரி­மையை இழப்­பர் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வரும் ஆகஸ்ட் மாத பிடிஓ விற்­பனை முதல் இந்­தப் புதிய அணு­கு­முறை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்.

வீட்­டைத் தேர்ந்­தெ­டுக்க அழைத்­தும் அவ்­வாறு செய்­யா­தோ­ரின் எண்­ணிக்­கை­யைக் குறைக்­க­வும் உண்­மை­யி­லேயே வீடு தேவைப்­ப­டு­வோ­ருக்கு வீடு விரை­வா­கக் கிடைக்­க­வும் விதி­முறை கடு­மை­யாக்­கப்­ப­டு­வ­தாக தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று தெரி­வித்­தார். தற்­போ­தைய நடைமுறைப்படி முதல்­முறை விண்­ணப்­ப­தா­ரர்­கள், இரு­முறை அழைக்­கப்­பட்­டும் வீட்­டைத் தேர்ந்­தெ­டுக்­க வராவிடில் அவர்­கள் அடுத்த ஓராண்­டுக்கு இரண்­டா­வது முறை­யாக வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு வாங்­கு­வோ­ராக கரு­தப்­ப­டு­வர். இரண்­டா­வது முறை­யாக வீவக வீடு வாங்­கு­வோ­ருக்­குக் குறை­வான பிடிஓ வீடு­களே ஒதுக்­கப்­ப­டு­கின்­றன. இத்­த­கை­யோ­ருக்கு நான்­கறை வீடு­கள் அல்­லது அதற்­கும் பெரிய வீடு­களில் ஐந்து விழுக்­காடு வீடு­கள் மட்­டுமே ஒதுக்­கப்­ப­டு­கின்­றன.

மாறாக, முதல்­முறை விண்­ணப்­ப­தா­ரர்­க­ளுக்கு 95 விழுக்­காடு வீடு­கள் ஒதுக்­கப்­ப­டு­கின்­றன.

தேசிய வளர்ச்சி அமைச்­சின் நிதி ஒதுக்­கீட்டு விவா­தத்­தின்­போது முதல்­முறை விண்­ணப்­ப­தா­ரர்­க­ளுக்கு உதவ மேலும் பல திட்­டங்­கள் குறித்து திரு லீ அறி­வித்­தார். முதல்­முறை விண்­ணப்­பம் செய்­யும் குடும்­பங்­க­ளுக்­குக் கூடு­தல் பிடிஓ வீடு­கள் ஒதுக்­கப்­படும் என்­றார் திரு லீ.

சிங்­கப்­பூர் குடி­யு­ரிமை உள்ள 18 வயது அல்­லது அதற்­கும் குறைந்த வயதுப் பிள்­ளை­க­ளைக் கொண்ட குடும்­பங்­கள், 40 வயது அல்­லது அதற்­கும் குறை­வான திரு­ம­ண­மான தம்­ப­தி­ய­ருக்கு இந்­தச் சலுகை வழங்­கப்­படும். வரும் ஆகஸ்ட் மாதம் நடத்­தப்­படும் பிடிஓ விற்­பனையிலிருந்து இப்­பி­ரி­வி­ன­ருக்கு 40 விழுக்­காடு வீடு­கள் ஒதுக்­கப்­படும். தற்­போது 30 விழுக்­காடு வீடு­கள் ஒதுக்­கப்­ப­டு­கின்­றன.

விற்­கப்­ப­டா­மல் எஞ்­சி­யி­ருக்­கும் வீடு­களில் 60 விழுக்­காடு வரை இப்­பி­ரி­வி­ன­ருக்கு ஒதுக்­கப்­படும்.

தற்­போது 50 விழுக்­காடு வீடு­கள் ஒதுக்­கப்­ப­டு­கின்­றன. விற்­கப்­ப­டா­மல் எஞ்­சி­யி­ருக்­கும் வீடு­கள் கட்டி முடிக்­கப்­பட்­டவை அல்­லது கட்டி முடிக்­கப்­ப­டா­த­வை­யா­க­வும் இருக்­க­லாம். இப்­பி­ரி­வி­ன­ருக்­குக் கூடு­தல் குலுக்­கல் முறை வாய்ப்பு வழங்­கப்­படும். இவர்­க­ளுக்கு மொத்­தம் மூன்று குலுக்­கல் முறை வாய்ப்­பு­கள் வழங்­கப்­படும்.