தங்க நகைகளுக்கு இனி 'ஹால்மார்க்' கட்டாயம்

1 mins read
27e5fcc0-6f29-4b5e-8812-d643006312ab
இந்­தி­யா­வில் ஏப்­ரல் 1ஆம் தேதி­யி­லி­ருந்து 'ஹால்­மார்க்' முத்­திரை இல்­லா­மல் தங்க நகை­களை விற்க முடி­யாது. படம்: ராய்ட்டர்ஸ் -

இந்­தி­யா­வில் ஏப்­ரல் 1ஆம் தேதி­யி­லி­ருந்து 'ஹால்­மார்க்' முத்­திரை இல்­லா­மல் தங்க நகை­களை விற்க முடி­யாது.

நுகர்­வோர் நல­னைக் கருத்­தில் கொண்டு ஹால்­மார்க் முத்­திரை இல்­லா­மல் தங்க நகை­களை விற்க மார்ச் 31ஆம் தேதிக்­குப் பிறகு அனு­ம­தி­யில்லை என்ற முடிவை மத்­திய அரசு எடுத்துள்­ளதாக இந்திய நுகர்­வோர் விவ­கா­ரம், உணவு மற்­றும் பொது விநி­யோக அமைச்­சின் செயலாளர் நித்தி காரே செய்தியாளர்களிடம் தெரி­வித்­தார்.

'HUID' எனப்­படும் ஆறு இலக்க தனித்­து­வ­மான எண்­கள் தங்­கத்­தின் தரத்தை உறுதி செய் கிறது. தங்க நகை­கள் செய்­யப்­படும்போது ஒவ்­வொரு நகைக்­கும் தனிப்­பட்ட ஹால்­மார்க் எண் வழங்­கப்­ப­டு­வ­தாக அமைச்­சின் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்தப் பிரத்­யேக எண், மதிப்­பாய்வு, ஹால்­மார்க் நிலை­யங்­களில் நகை­க­ளின் மீது முறை­யாக முத்­தி­ரை­யி­டப்­படுகிறது.

"முன்பு நான்கு இலக்க எண்­கள் ஹால்­மார்க் அடையாள­மாக பயன்­ப­டுத்­தப்­பட்­டன. தற்­போது நான்கு மற்­றும் ஆறு இலக்க எண்­கள் பயன்­ப­டுத்­தப்படு­கின்­றன. மார்ச் 31ஆம் தேதிக்­குப் பிறகு ஆறு இலக்க முத்­திரை மட்­டுமே அனு­ம­திக்­கப்படும்," என்று திரு காரே தெரிவித்­தார்.

மத்திய அரசின் இந்த அறி விப்பு நகைக் கடைகளுக்கு மட்டுமே பொருந்தும். வீட்டில் ஏற்கெனவே உள்ள நகைகளுக்கு இது பொருந்தாது. மக்கள் தங்கள் நகைகளை வழக்கம்போல விற்பனை செய்ய முடியும்.