மலேசியா: முகாம்களில் 50,000 பேர் தஞ்சம்

மலேசியா: முகாம்களில் 50,000 பேர் தஞ்சம்

2 mins read
a6f3ab17-6b74-441f-b02f-55a5f61b4e55
-

தொடர் மழை; ஆறுகள் உடைப்பு; பல மாநிலங்கள் பாதிப்பு; ஜோகூர் மோசம்; 'அவசரநிலை பிரகடனம் இப்போது அவசியமில்லை'

மலே­சி­யா­வில் தொடர் மழை, வெள்­ளம் கார­ண­மாக மூன்று மாநி­லங்­களில் 50,000க்கும் மேற்பட்டோர் தற்­கா­லிக முகாம்­களில் தஞ்­சம் அடைந்துள்ளனர்.

மலே­சி­யா­வில் கடந்த பல நாள்­களாக தொடர்ந்து மழை பெய்து வரு­கிறது. ஆறு­கள் உடைந்து தண்­ணீர் கிரா­மங்­களில் புகுந்­து­விட்­டது. வீடுகள், சாலை­கள், வாக­னங்­கள் மூழ்கிக் கிடக்­கின்­றன. நால்வர் மர­ணமடைந்­தனர்.

ஆறு­கள், ஏரி­கள், குளம், குட்­டை­களுக்கு அருகே வசிக்­கும் மக்­கள் விழிப்­பாக இருந்து வர­வேண்­டும் என்று தீய­ணைப்பு மீட்­புத் துறை ஆலோ­சனை கூறி இருக்­கிறது.

ஜோகூர், பாகாங், சர­வாக்­கின் சில பகு­தி­களில் இன்று வரை மழை தொட­ரும் என்றும் ஜோகூர், பாகாங், கிளந்­தான், திரங்­கானு உள்­ளிட்ட பல மாநி­லங்­களில் அலை ஏற்­றம் அதி­கம் இருக்­கும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­வதாக மலே­சிய வானிலை ஆய்வு நிலை­யம் முன்­னு­ரைத்துள்ளது.

ஜோகூர், மலாக்கா, பாகாங் ஆகிய மாநி­லங்­களில் அமைக்­கப்­பட்டுள்ள 300க்கும் மேற்பட்ட தற்­காலிக முகாம்­களில் சுமார் 50,500 பேர் தங்கியுள்ளனர்.

நெகிரி செம்பிலானில் அமைக்கப் பட்டு இருந்த முகாம்கள், நேற்று வெள்ள நீர் வடிந்ததை அடுத்து மூடப்பட்டதாக வும் அதில் இருந்தவர்கள் வீடு திரும்பிய தாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஜோகூர் மாநி­லத்தில் ஏறக்குறைய 47,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத­னால் மேலும் நிவா­ரண முகாம்­களை அமைக்க வேண்­டிய தேவை ஏற்­பட்டு இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

இத­னி­டையே, மலே­சியப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­ஹிம் நேற்று வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட ஜோகூ­ரின் சிகா­மட் மாவட்­டத்­திற்கு வரு­கை­ய­ளித்­தார்.

மலே­சி­யா­வில் வெள்ள நில­வரம் மேம்­ப­டு­வ­தற்­கான அறி­கு­றி­கள் தெரி­வதால் அவ­சரநிலை அறி­விக்­க­ வேண்டிய அவ­சி­யம் இப்­போ­தைக்கு இல்லை என்று பிர­த­மர் தெரி­வித்­தார்.

பல இடங்­களில் வெள்ள நீர் வடி­வதாகவும் சில இடங்­களில் தேங்கி இருக்­கும் வெள்­ள­நீர் வடிய காலம்­பி­டிக்­கும் என்­றும் அவர் கூறினார். சிகா­மட்­டில் தற்­கா­லிக முகாம் ஒன்றைப் பிரதமர் பார்­வை­யிட்­டார். பிறகு செய்­தி­யா­ளர்­களி­டம் அவர் பேசி­னார்.

நாட்டில் 600 மில்­லி­யன் ரிங்­கிட் (S$180.32 மில்­லி­யன்) மதிப்­புள்ள வெள்ளத் தடுப்புத் திட்­டங்­கள், பகி­ரங்க ஒப்­பந்­தப்­புள்­ளி­கள் மூலம் விரை­வாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு திட்­டப் ­பணி­கள் ஜூன் 1ஆம் தேதி முதல் தொடங்க வேண்­டும் என்று தான் விரும்­பு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, ஜோகூர் முதல்­வர் ஓன் ஹஃபிஸ் கானி, அர­சு நிலைக் குழு பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உதவு­வதாகக் கூறி­னார். வெள்­ளம் கார­ண­மாக டெங்கி போன்ற நோய்­கள் பர­வக்­கூ­டிய வாய்ப்பு இருப்­ப­தால் சூழ்­நி­லையைத் தாங்­கள் அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­வ­தாக சுகா­தார அதி­காரி­கள் தெரி­வித்­த­னர்.

வெள்ளநீர் ஓடும் சாலை­களில் நீரோட்­டம் வலு­வாக இருப்­ப­தால் அதி­கா­ரி­கள் பாதிக்­கப்­பட்ட இடங்­க­ளுக்­குச் செல்ல முடி­ய­வில்லை என்ற பிர­த­மர் துறை அமைச்­சர் முகம்­மது அலி, என்றாலும் தீய­ணைப்பு மீட்­புத் துறை, குடி­மைத் தற்­காப்­புப் படை, ஆயு­தப் படை­கள் உதவுவதாகக் கூறினார்.