ஏழு வயது இந்தியச் சிறுமி ஒருவர் யோகாசன சாதனை புரிந்து உள்ளார். உலக அளவில் யோகாசனப் பயிற்றுநர் என்று சான்றளிக்கப்பட்ட ஆக இளையவர் என்னும் கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரரான அச்சிறுமியின் பெயர் பிரான்வி குப்தா. இந்தியாவில் பிறந்த இவர் தற்போது துபாயில் வசிக்கிறார்.
யோகாசன சமூகத்தைப் பிரதிநிதிக்கும் 'யோகா அலையன்ஸ்' என்னும் ஆகப் பெரிய லாப நோக்கமற்ற அமைப்பு இச்சிறுமிக்கு யோகாசான ஆசிரியர் சான்றிதழை வழங்கியுள்ளது. 200 மணி நேரப் பயிற்சியை முடித்த பின்னர் அச் சிறுமிக்கு இந்த அங்கீகாரத்தை அந்த அமைப்பு வழங்கியது.
2021 ஜூலை முதல், 9 ஆண்டு 220 நாள் வயதுடைய ரேயன்ஷ் சுரானி என்னும் சிறுவர் இதுவரை அந்தச் சாதனையில் இடம்பெற்று இருந்தார். பிரான்வி குப்தாவின் வயது ஏழு ஆண்டு 165 நாள்கள்.
மூன்றரை வயது முதலே பிரான்வி யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். வீட்டில் தமது தாயார் அந்தப் பயிற்சி செய்வதைப் பார்த்ததில் சிறுமிக்கும் ஆர்வம் பிறந்தது. தொடக்கத்தில் சில மாதங்கள் தமது தாயார் செய்த பயிற்சிகளைப் பார்த்து அதைப் போலவே செய்து வந்தார். பின்னர் சொந்தமாகப் பயிற்சி செய்யக் கற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தமது ஏழாவது வயதில் யோகாசனப் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்த பிரான்வி, பள்ளி இடைவேளை நேரங்களில் அந்த வகுப்புகளுக்குத் தவறாமல் சென்று வந்தார்.
"நான் நேசிக்கும் யோகா
சனத்தை ஏராளமானோருக்குப் பரப்ப விரும்புகிறேன்," என்று கூறும் பிரான்வி, 'லேர்னிங் வித் பிரான்வி' என்னும் யூடியூப் ஒளி
வழியில் தமது மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.

