மலேசியாவின் முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளாமல் விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் பொருளியலைத் தூண்டும் நிதி தொடர்பில் மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
"நான் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை. வழக்கை விசாரிக்கக் கோருகிறேன்," என்று ஷா ஆலாம் நீதிமன்றத்தில் முகை தீன் யாசின் தெரிவித்து உள்ளார்.
2022 ஜனவரி 7ஆம் தேதி பெர்சத்துக் கட்சியின் கணக்கு மூலம் சட்டவிரோதமாக ஐந்து மில்லியன் ரிங்கிட் பெற்றதாக முகைதீன் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.