மேற்கில் பரோட்டாவும் மத்திய வட்டாரத்தில் காப்பியும் விலை குறைவு: ஆய்வு

மேற்கில் பரோட்டாவும் மத்திய வட்டாரத்தில் காப்பியும் விலை குறைவு: ஆய்வு

3 mins read
d43e0c5a-a815-4c01-b87e-2e3b87e9104f
பெரும்பாலான உணவுகளின் விலை 10 காசுக்கு மேல் அதிகரிக்கவில்லை என்பது ஆய்வில் தெரிந்தது. படம்: சீன ஊடகக் குழுமம் -

சிங்­கப்­பூ­ரின் மேற்கு வட்­டா­ரத்­தில் பரோட்டா விலை குறை­வா­க­வும் மத்­திய வட்­டா­ரத்­தில் காப்பி விலை குறை­வா­க­வும் விற்­கப்­ப­டுவது ஆய்வு ஒன்­றில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. தனி­ந­பர், குடும்ப வருமானத்­திற்கு ஏற்ப வெளி­யில் உண­வ­ருந்­தும் செல­வும் அதி­ க­ரிக்­கும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

உணவு விலை­கள் பற்றி கொள்கை ஆய்­வுக் கழ­கம் நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கை யில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.

2022 செப்­டம்­பர் முதல் நவம்­பர் வரை­ யி­லும் 2023 ஜன­வரி முதல் பிப்­ர­வரி வரை­யி­லும் உண­வங்­காடி நிலை­யங்­கள், காப்­பிக் கடை­கள், உணவு நிலை­யங்­கள் ஆகிய இடங்­களில் விற்­கப்­படும் உணவுகளின் விலை­களை கழ­கம் திரட்­டி­யது. அதில் இரண்­டா­வது கால­கட்­டத்­தில் 18ல் 13 உண­வு­க­ளின் விலை­ குறிப்­பி­டத்­தக்க அளவு அதிகரித்து இருந்­தது. மேலும் 2வது கால­கட்­டத்தில் வெவ்­வேறு வட்­டா­ரங்­களில் உணவு விலை­கள் வேறு­பட்டிருந்தன.

இரண்­டா­வது முறை­யாக இந்த ஆய்வை நடத்­தி­யுள்ள கொள்கை ஆய்­வுக் கழ­கம் 'மக்­கான் குறீ­யீடு' என்ற பெய­ரில் உணவு விலை­களை மதிப்­பிட்டு வரு­கிறது.

இதற்கு முன் 2017ல் இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

சிங்­கப்­பூர் முழு­வ­தும் வெவ்­வேறு உணவு விற்­பனை இடங்­களில் மூன்று வேளை­களில் வழங்­கப்­படும் காப்பி-ஓ, வன்­தான் நூடல்ஸ், பீஹூன், சிக்­கன் சாப் உள்­ளிட்ட 18 உணவு, பானங்­களை ஆய்­வுக் குழு­வி­னர் ஆராய்ந்த னர்.

இதற்­காக 26 குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் உள்ள 636 காப்­பிக் கடை­கள், 101 உணவு நிலை­யங்­கள், 94 உண­வங்­காடி நிலை­யங்­கள், 829 உணவு விற்­பனை இடங்­க­ளுக்கு அவர்­கள் சென்­ற­னர். ஆய்வு உத­வி­யா­ளர்­கள் ஹே­னி­யல் லிம், மிண்டி சோங் ஆகி­யோ­ரு­டன் சேர்ந்து ஆய்­வா­ளர் டியோ கே கீ இந்த ஆய்வை நடத்­தி­யி­ருக்­கி­றார்.

ஆய்­வில் பங்­கேற்­ற­வர்­களில் பாதிக்­கும் மேற்பட்டோர் உண­வங்­காடி நிலை­யங்­கள், உணவு நிலை­யங்­கள், காப்­பிக் கடை­கள், உணவு விடுதி, உண­வுக் கூடங்­கள், சாலை­யோ­ரக் கடை­களில் உண­வுக்­காக அதி­கம் செல­வ­ழித்ததாக ஆய்­வு தெரிவிக்கிறது.

இரண்டு கால­கட்­டங்­களில் திரட்­டப்­பட்ட தர­வு­களை ஒப்­பிட்­டால் பெரும்­பா­லான கடைக்­கா­ரர்­கள் உணவு விலையை அதி­க­ரிக்­க­வில்லை அல்­லது சிறி­த­ளவே உயர்த்­தி­யி­ருந்­த­ன என்பது தெரிய வந்தது.

மனிதவளப் பற்றாக்குறை, நேரமின்மை காரணமாக முதல் சுற்று தகவல்களைத் திரட்டிய பிறகு இரண்டாவது முறையாக 829 இடங்களில் 50 இடங்களுக்கு மட்டுமே மறுபடியும் செல்ல முடிந்தது என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். அப்படி மறுபடியும் சென்ற கடைகளில் விலை 30 காசுக்கு மேல் உயர்த்தப்படவில்லை.

பெரும்பாலான உணவுகளின் விலை 10 காசுக்கு மேல் அதிகரிக்கவில்லை என்பது ஆய்வில் தெரிந்தது.

மத்திய வட்டாரத்தில் சிக்கன் சாப், பானங்களின் விலை குறைவாக இருந்தது. காயா டோஸ்ட், இரண்டு அரை வேக்காடு முட்டைகள், காப்பி அல்லது தேநீரை உள்ளடக்கிய காலை உணவு செட், ஃபிஷ்பால் நூடல்ஸ் ஆகியவை தெற்கு வட்டாரங்களில் விலை குறைவாக இருந்தன. மேற்கு வட்டாரத்தில் பரோட்டா விலை குறைந்து காணப்பட்டது.

மிக மலிவாக காப்பி-ஓவின் விலை $1.09ஆக இருந்தது.

விலை அதிகமாக $1.81க்கு ஐஸ்டு மைலோ விற்கப்பட்டது,

ஒரு சாதாரண பரோட்டா, முட்டை பரோட்டா செட் சராசரி $2.97க்கு விற்கப்பட்டது. சிக்கன் சாப் ஆக அதிக விலையைக் கொண்டிருந்தது. அதன் சராசரி விலை $7.58.