ஆட்குறைப்பு இரட்டிப்பு

ஆட்குறைப்பு இரட்டிப்பு

3 mins read
c4c618c5-001c-4f0a-81bc-e6c510e6dccf
முதல் பாதி­யை­விட 2022ன் இரண்­டாம் பாதி­யில் அதி­க­மா­னோர் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­ட­னர். ஆட்­கு­றைப்பு நட­வ­டிக்­கைக்கு நிறு­வன மறு­சீ­ர­மைப்பு முக்­கி­யக் கார­ண­மாக கூறப்­படு­கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் மொத்த வேலை­வாய்ப்பு நில­வ­ரம் கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வ­லுக்கு முந்­திய நிலைக்­குத் திரும்பியுள்­ள­போ­தி­லும் சென்ற ஆண்­டின் கடைசி காலாண்­டில் ஆட்­கு­றைப்பு இரட்­டிப்­பா­னது.

கடந்த 2022 அக்­டோ­பர் முதல் டிசம்­பர் மாதம் வரை 2,990 பேர் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­ட­னர். அதற்கு முந்­திய காலாண்­டில், அதா­வது 2022 ஜூலை முதல் செப்­டம்­பர் வரை­யி­லான மூன்­றாம் காலாண்­டில் 1,300 பேர் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­ட­னர்.

மின்­ன­ணுக் கரு­வி­கள் தயா­ரிப்பு (670), மொத்த விற்­பனை (450), தக­வல் தொடர்பு (370) ஆகிய துறை­களில் அதி­க­மான ஆட்­கு­றைப்பு இடம்­பெற்­றது.

முதல் பாதி­யை­விட 2022ன் இரண்­டாம் பாதி­யில் அதி­க­மா­னோர் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­ட­னர். ஆட்­கு­றைப்பு நட­வ­டிக்­கைக்கு நிறு­வன மறு­சீ­ர­மைப்பு முக்­கி­யக் கார­ண­மாக கூறப்­படு­கிறது.

2022ஆம் ஆண்­டில் மொத்­தம் 6,440 பேர் ஆட்­கு­றைப்­புக்கு ஆளா­கி­னர்.

கொவிட்-19 தொற்­றுப் பர­வ­லுக்கு முந்­திய 2018, 2019ஆம் ஆண்­டு­களில் ஒவ்­வோர் ஆண்­டும் 10,000க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­கள் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­ட­னர் என்று மனி­த­வள அமைச்சு தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­களை உள்­ள­டக்­கிய ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்ட குடி­மக்­களில் வேலை­வாய்ப்­பு பெற்­ற­வர்­கள் விகி­தம், நான்­காம் காலாண்­டில் 73.1 விழுக்­காடு உயர்ந்­தது. இது 2015ன் இரண்­டாம் காலாண்­டுக்­குப் பிறகு மிக அதி­க­மா­கும்.

சென்ற ஆண்டு சிங்­கப்­பூ­ரில் மொத்த வேலை­வாய்ப்பு 227,800 ஆக உயர்ந்­துள்­ளது. 1991ல் உய­ரத் தொடங்­கிய வேலை­வாய்ப்பு விகி­தங்­க­ளு­டன் ஒப்­பிட, இது மிகக் கூடிய வளர்ச்­சி­யா­கும். 2007ல் 223,500 ஆக வளர்ச்சி கண்ட சாதனை அள­வை­விட அதி­கம்.

மொத்த வேலை வாய்ப்பு கொள்­ளை­நோய்ப் பர­வ­லுக்கு முந்­தி 2019ஆம் ஆண்டு நிலை­யை­விட 2.9% அதி­கம் என்று மனி­த­வள அமைச்­சின் அறிக்கை தெரி­வித்­தது.

அத்­து­டன், 2022ல் குடி­மக்­க­ளின் வேலை­வாய்ப்பு 26,300 ஆக உயர்ந்து தொடர்ந்து விரி வடைந்து வரு­வ­தா­க­வும் அறிக்கை சுட்­டி­யது. இந்த உயர்வு 2019இல் இருந்­த­தை­விட அதி­க­மா­கும். பெரும்­பா­லும் நிதிச் சேவை­கள், தக­வல் தொடர்பு போன்ற துறை­களில் இந்த வேலை வாய்ப்­பு­கள் இடம்­பெற்­றுள்­ளன.

சென்ற 2019இன் நிலையை எட்­ட­வில்லை என்­றா­லும், 201,600 ஆக உள்ள மொத்த வேலை­வாய்ப்­பு வளர்ச்­சி­யின் பெரும்­ப­கு­திக்கு குடி­யு­ரிமை இல்­லா­தோ­ரின் வேலை­வாய்ப்பு எண்­ணிக்கை பங்­க­ளித்­தது.

2022 ஏப்­ர­லில் எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் கணி­ச­மாக தளர்த்­தப்­பட்ட பிறகு, கட்­டு­மா­னம், உற்­பத்­தித் துறை­களில் ஒர்க் பர்­மிட் வைத்­தி­ருப்­ப­வர்­க­ளுக்­கான பணி­யி­டங்­களை முத­லா­ளி­கள் நிரப்­பத் தொடங்­கி­யது இதற்­குக் கார­ணம் என்று மனி­த­வள அமைச்­சின் செய்­தித் தொடர்­பா­ளர் கூறி­னார்.

2021உடன் ஒப்­பிட 2022இல் வேலை­யின்மை விகி­தம் மேம்­பட்­டது, குடி­மக்­க­ளின் வேலை­யின்மை எண்­ணிக்கை 3.5 விழுக்­காட்­டி­லி­ருந்து 2.9 விழுக்­கா­டா­கக் குறைந்­துள்­ளது.

சிங்கப்பூர்வாசிகளின் வேலையின்மை விகிதம் 3.7 விழுக்­காட்­டி­லி­ருந்து 3 விழுக்­கா­டா­கக் குறைந்­துள்­ளது.

ஒட்­டு­மொத்­த­மாக, மொத்த ஊழி­ய­ர­ணி­யில் 2021ல் 2.7 விழுக்­கா­டாக இருந்த வேலை­யின்மை விகி­­தம் சென்ற ஆண்டு 2.1 விழுக்­கா­டா­கக் குறைந்­தது.

இதன்­மூ­லம், மூன்று பிரி­வு­க­ளி­லும் வேலை­யின்மை விகி­தம் 2018, 2019 ஆண்­டு­களின் சரா­ச­ரி­யை­விட குறைந்­துள்­ள­தாக அமைச்­சின் அறிக்கை தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, 2022ஆம் ஆண்­டின் நான்­காம் காலாண்­டில் காலி இடங்­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து மூன்­றா­வது காலாண்­டா­கக் குறைந்­தது. எனி­னும் காலி இடங்­களின் எண்­ணிக்கை தொடர்ந்து 104,500 ஆக உயர்ந்­தி­ருந்­தது.

வெளி­நாட்­டுத் ஊழி­யர்­களுக்­கான காலி­யி­டங்­களை நிரப்­பு­தல், தொழில்­நுட்­பம், நிதிச் சேவை­களில் உள்ளூர்வாசி களின் வேலை­வாய்ப்பு வளர்ச்சி ஆக யவை 2022ஆம் ஆண்­டில் காணப்­பட்ட வலு­வான மீட்­சிக்கு இரண்டு கார­ணி­க­ளா­கும் என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் நேற்று செய்­தி­யா­ளர் சந்­திப்பு ஒன்­றில் தெரி­வித்­தார்.

டிசம்­பர் 2022இல் பணி­ய­மர்த்­தல் தொடர்­பான உணர்­வு­கள் நேர்­ம­றை­யா­ன­தாக இருந்­தா­லும், மெது­வான பொரு­ளி­யல் வளர்ச்சி, ஊழி­யர் தேவை­யைப் பாதிக்­க­லாம், என்­றார் அவர். "எனவே, வர­வி­ருக்­கும் காலாண்டு­களில் வேலை­வாய்ப்பு வளர்ச்சி குறைய வாய்ப்­புள்­ளது. மேலும் இது பல்­வேறு துறை­களில் சீரற்­ற­தாக இருக்­கும்," என அவர் சொன்­னார்.