திருப்பதி அருகே மாண்ட சிங்கப்பூர் தம்பதிக்கு இன்று இறுதிச்சடங்கு

திருப்பதி அருகே மாண்ட சிங்கப்பூர் தம்பதிக்கு இன்று இறுதிச்சடங்கு

2 mins read
6f03fc65-0aa0-43e9-8010-3bde855c7a6e
-

சிங்­கப்­பூ­ரில் இருந்து இறை­தரிசனத்­திற்­காக திருப்­பதி ஏழு­மலை­யான் கோவி­லுக்­குச் சென்ற­போது விபத்­தில் சிக்கி மாண்ட சிங்கப்பூர்த் தம்பதியரின் சடலங்கள் சட­லங்­கள் நேற்று சிங்கப்­பூர் வந்­து­சேர்ந்­தன.

அவர்­க­ளின் இறு­திச் சடங்கு புளோக் 633 ஹவ்­காங் அவென்யூ 8ல் இன்று மாலை இடம்­பெ­று­கிறது. பின்னர் அவர்களின் உடல்கள் மண்­டாய் தக­னச்­சாலைக்கு எடுத்­துச்­சென்று எரியூட்­டப்­படும் என்று உற­வி­னர்­கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரி­வித்­த­னர்.

மார்ச் 12ஆம் தேதி, யுவ­ரா­ஜன் செல்­வ­மும் அவ­ரு­டைய மனைவி நாக­ஜோதி வர­த­ரா­சு­ம் சென்­னை­யில் இருந்து திருப்­பதி செல்­லும் வழி­யில் விபத்­தில் சிக்கி மாண்­ட­னர். அவர்­க­ளு­டன் பய­ணம் செய்த ஓட்­டு­ந­ரும் மாண்­டார். இத்­தம்­ப­தி­யர் 40களில் இருப்­பர் என்று உற­வி­னர்­கள் கூறி­னர்.

இந்த தம்­ப­தி­யி­னர் விடு­முறைக்­காக மார்ச் 8ஆம் தேதி சிங்­கப்­பூ­ரில் இருந்து இந்­தியா சென்­ற­னர்.

மற்ற குடும்ப உறுப்­பி­னர்­களும் மார்ச் 13ஆம் தேதி சிங்­கப்­பூ­ரில் இருந்து கிளம்பி அவர்­க­ளு­டன் இணை­யத் திட்­ட­மிட்­டி­ருந்­த­னர்.

ஆனால் மார்ச் 12 அன்று, தம்­ப­தி­யர் இந்­தி­யா­வில் சாலை விபத்­தில் இறந்­து­விட்­ட­தாக குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு அன்று பிற்­ப­கல் 3 மணி அள­வில் தொலை­பேசி அழைப்பு வந்­தது.

தம்­ப­தி­யின் மக­னி­டம் பெற்­றோ­ரின் மர­ணச் செய்­தி­யைச் சொல்ல வேண்­டிய நிலை அவர்­களுக்கு ஏற்­பட்­டது.

கட்­டு­மான மேலா­ள­ரான திரு யுவ­ரா­ஜ­னும் ஆசி­ரி­யை­யான திருவாட்டி நாக­ஜோ­தி­யும் சென்­னை­யி­லி­ருந்து ஞாயிற்­றுக்­கி­ழமை காலை வாடகை காரில் திருப்­ப­திக்­குக் கிளம்­பி­னர்.

உள்­ளூர் நேரப்­படி காலை 8.30 மணி­ய­ள­வில் (சிங்­கப்­பூர் நேரப்­படி காலை 11 மணி­ய­ள­வில்), ஆந்­திர மாநி­லம், சித்­தூர் மாவட்­டம், நகரி அருகே கார் சென்­று­கொண்­டி­ருந்­த­போது, எண்­ணெய்க் கொள்­க­லன் லாரி ஒன்று அதன்­மீது மோதி­யது. சாலை­யில் இருந்து கார் வயல்­வெ­ளி­யில் சென்று விழுந்­தது. இதில் தம்­ப­தி­யும் ஓட்­டு­ந­ரும் நிகழ்­வி­டத்­தி­லேயே மாண்­டு­போ­ன­தாக 'ஏஎன்ஐ' செய்தி தெரிவித்­தது.

இவ்­வி­பத்து குறித்து தக­வல் கிடைத்­த­தும் நிகழ்­வி­டத்­திற்கு விரைந்து சென்­றது காவல்­துறை. பின்­னர் உள்­ளூர்­வா­சி­க­ளின் துணை­யு­டன் காவல்­து­றை­யி­னர் காரி­லி­ருந்து அவர்­க­ளின் உடல்­களை மீட்­ட­னர்.

இத­னைத் தொடர்ந்து, காவல்­துறை எண்­ணெய்க் கொள்­க­லன் லாரி ஓட்­டு­ந­ரைக் கைது­செய்து விசா­ரித்து வரு­கிறது.

குடும்ப உறுப்­பி­னர்­கள் ஞாயிறு இரவு சென்னை சென்­றனர். அதி­கா­ரி­க­ளி­ன் உத­வி­யுடன் உடல்­களை மீட்டு சிங்­கப்­பூருக்கு எடுத்து வந்­த­னர்.