பிரதமர் லீ: இந்தோனீசிய உறவு உன்னதம்

பிரதமர் லீ: இந்தோனீசிய உறவு உன்னதம்

3 mins read
a41eafba-62b1-4e31-9951-44077e759df1
-

சிங்­கப்­பூ­ரும் இந்­தோ­னீ­சி­யா­வும் பற்­பல புதிய அம்­சங்­களில் ஒத்­து­ழைக்­கத் தயா­ராக இருப்­ப­தாக பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்துள்­ளார்.

இரு­நா­டு­க­ளுக்­கும் இடை­யில் எரி­சக்தி, சுகா­தா­ரம், மனி­த­வள மூல­தன மேம்­பாடு உள்­ளிட்ட அம்­சங்­களில் வரி­சை­யாக உடன்­பா­டு­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யில் திரு லீ இவ்­வாறு கூறி­யுள்­ளார்.

"எங்­க­ளது இரு­த­ரப்பு உற­வு­கள் உன்­ன­த­நி­லை­யில் உள்­ளன. முன்­னேற்­றத்தை நோக்­கிய, பல­த­ரப்­பட்ட அம்­சங்­களில் வலு­வான ஒத்­து­ழைப்பை வழங்க நாங்­கள் ஆயத்­த­மாக உள்­ளோம். வருங்­கா­லத் தலை­மு­றை­யி­ன­ருக்கு ஏற்ற வகை­யில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த உள்­ளோம்," என்று பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூர்-இந்­தோ­னீ­சி­யத் தலை­வர்­க­ளின் ஓய்­வுத்­த­ளச் சந்­திப்­பில் பங்­கேற்ற திரு லீ, அதி­பர் ஜோக்கோ விடோ­டோ­வு­டன் பேச்சு நடத்­தி­னார்.

இரு நாடு­க­ளுக்­கும் இடை­யே­யான நட்­பு­றவை பறை­சாற்­றும் வகை­யில் இஸ்­தானா மாளி­கை­யில் சிங்­கப்­பூர் ராணு­வப் படை­யின் இசை முழக்­கத்­து­டன் திரு விடோடோ வர­வேற்­கப்­பட்­டார்.

இரு நாடு­க­ளுக்­கும் இடையே நீண்­ட­கா­ல­மாக இருந்த வான்­வெளி நிர்­வா­கம், தற்­காப்­பில் ஒத்­து­ழைப்பு மற்­றும் தப்­பி­ ஓ­டி­ய­வர்­களை நாடு­க­டத்­து­தல் ஆகிய மூன்று விவ­கா­ரங்­க­ளுக்குத் தீர்­வு­கா­ணும் வகை­யில் இச்­சந்­திப்பு அமைந்­தது.

மூன்று ஒப்­பந்­தங்­களில் ஒன்­றான வான்­வெளி நிர்­வாக ஒப்­பந்­தத்­தின் அடுத்த கட்ட பணி­களை நிறைவு செய்­வ­தற்கு இந்­தோ­னீ­சி­யா­வு­டன் சேர்ந்து பணி­யாற்ற சிங்­கப்­பூர் ஆவ­லு­டன் இருப்­ப­தாக கூட்டு செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் பிர­த­மர் லீ குறிப்­பிட்­டார்.

"வெற்­றி­க­ர­மான ஒப்­பந்­தங்­கள் இரு நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான வலு­வான உற­வு­க­ளைப் பிர­தி­ப­லிக்­கின்றன. திறந்த, ஆக்­க­க­ர­மான தொடர்­பு­க­ளால் கணி­ச­மான இருதரப்பு நன்­மை­களை இருநாடுகளும் பெற­லாம் என்­ப­தை­யும் அவை காட்­டு­கின்­றன," என்­றார் திரு லீ.

இதற்­கி­டையே வான்­வெளி நிர்­வாக ஒப்­பந்­த­ ஏற்­பா­டு­களை அங்கீகரிக்குமாறு அனைத்துலக வான்­வெளி நிர்­வா­கத்­தைக் கண்­கா­ணிக்­கும் அனைத்­து­லக விமானப் போக்குவரத்து அமைப்பிடம் சிங்­கப்­பூ­ரும் இந்­தோ­னீ­சி­யா­வும் இணைந்து விண்­ணப்­பித்­துள்­ளன.

அந்த அமைப்பு ஒப்­புக்­கொண்­டால் மூன்று ஒப்­பந்­தங்­

க­ளை­யும் ஒரே நேரத்­தில் செயல்­ப­டுத்த இரு நாடு­களும் ஒரு நாளைத் தேர்வு செய்­யும்.

இதற்கு முன்­னர், 2022ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் இந்தோ னீசியாவின் பிந்­தா­னில் திரு லீயும் திரு விடோ­டோ­வும் சந்­தித்­த­போது மூன்று உடன்­பா­டு

­க­ளி­லும் இரு­நா­டு­கள் கையெ­ழுத்­தி­டு­வ­தைப் பார்­வை­யிட்­ட­னர். நேற்றைய சந்திப்புக்குப் பின்னர் அறி­விக்­கப்­பட்ட ஆறு ஒப்­பந்­த­ங்களும் எரி­சக்தி, நீடித்த நிலைத்­தன்மை, சுகா­தா­ரம், மனி­த­வள மூலதன மேம்­பாடு, மின்­னி­லக்கப் பொரு­ளி­யல், பாது­காப்பு பங்­க­ளிப்பு ஆகிய அம்­சங்­க­ளைச் சார்ந்­தன.

மேலும் இரு­நா­டு­க­ளின் பாது­காப்பு பங்­கா­ளித்­து­வம் குறித்த ஒரு கூட்டு அறி­விப்­பும் வர்த்­த­கங்­க­ளுக்கு இடை­யி­லான சில புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­களும் வியா­ழக்­கி­ழமை நிகழ்­வில் இடம்­பெற்­றன.

இரு நாட்டுத் தலை­வர்­களும் அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்­க­ளு­டன் சந்­தித்­த­னர்.

திரு விடோ­டோ­வு­டன் சேர்ந்து அவ­ரின் அமைச்­சர்­களும் அமைச்­சர்­நிலை தகுதி பெற்ற பிர­மு­கர்­களும் வந்­திருந் தனர்.

அதேபோல திரு லீயு­டன் துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன் ஆகி­யோர் வந்­த­னர்.

சந்­திப்­பில் ஆசிய வட்­டா­ரம் பற்றி கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. அதில் இந்­தோ­னீ­சி­யா­வின் ஆசி­யான் தலை­மைத்­து­வ­த்திற்கு சிங்­கப்­பூர் முழு ஆத­ரவு வழங்­கும் என்று பிர­த­மர் லீ நம்­பிக்­கை அளித்­தார்.

மியன்­மா­ர் சூழ்­நிலை குறித்த ஆசி­யா­னின் ஐந்து அம்ச கருத்திணக்­கத்­தில் முன்­னேற்­றம் இல்­லா­தது நமக்கு வருத்­தம் தருவதாகக் கூறிய திரு லீ, இந்தக் கருத்திணக்­கம் முழு­மையாகச் செயல்­பட இந்­தோ­னீ­சியா, ஆசி­யான் மற்­றும் ஐநா மன்றத்துடன் சேர்ந்து சிங்­கப்­பூர் தொடர்ந்து பணி­பு­ரி­யும் என்றார்.